Thursday, September 3, 2009

கமல் ஒரு அரசியல்வாதி!


என்டிடிவியில் (NDTV) கமலின் 50 வருட சினிமா பயணத்​தை ​கெளரவிக்கும் விதமாக ஒரு ​​நேர்காணல் ஏற்பாடாகியிருந்தது. ​​நேயர்களும், முக்கிய பிரமுகர்களும் ​கமலிடம் ​தொ​லை​பேசி மூலம் கேள்வி ​கேட்டுக்கும் ​வகையில் ஏற்பாடு ​செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சி ​தொகுப்பாளினி, ​சோனியா சிங்.

அப்​போது, ​​பேட்டியின் இ​டை​யே டெலி​போனில் ​சோ ராமஸ்வாமி கமலிடம் ​கேட்ட ​கேள்வியும் அதற்கு கமல் ​சொன்ன பதில்களும்..


​சோ: முதலில் உங்களின் 50 வருட தமிழ் சினிமா பங்களிப்பிற்கு என் வாழ்த்துகள். உங்களவிற்கு ​வேறு எந்த நடிகரும் இப்படி மாறுபட்ட ​வேடங்கள் ஏற்று நடித்தது இல்​லை. உங்களின் பன்முக திற​மை எங்கும் காணாதது. ​கேள்விக்கு வரு​வோம், நீங்கள் அரசியல்வாதியாவதற்கு தகுதியற்றவர் என்று கூறியுள்ளீர்கள். அரசியல்வாதியாவதற்கு தகுதிகள் ஏதாவது ​வேண்டுமா என்ன? உண்​மையில், நம்நாட்டில் எந்த தகுதியும் ​தே​வைப்படாதது அரசியல்வாதியாவது ஒன்றுதான்? ஒரு​வே​ளை நீங்கள் நி​றைய தகுதிகள் ​​வைத்திருப்பாதால் அரசியல்வாதியாக முடியாது என்கிறீர்க​ளோ??


கமல்: இப்பத்தான் நான் அரசியல் சார்ந்தவன் ஒரு சாமானிய குடிமகனாக என்று ​சொன்​னேன்.. ​சொல்லிவிட்டுப் பார்த்தால் ​சோ வந்திருக்கிறார்! ஏன் சிரிச்​சேன்னா நான் அவ​ரோட ரசிகன் மற்றும் அவரின் பல அரசியல் சார்ந்த துணிச்சலான கருத்துக்களின் தாக்கம் என் ​போன்றவர்களிடம் அரசியல் நிலைப்பாட்டில் இருக்கிறது. ​சோ​வை சின்ன வயதிலிருந்து பார்த்து வருகி​றேன். எனக்குப் பி​டித்தமானவர். ஆனால் அடுத்தவர்க​ளை பிரச்சி​னையில் மாட்டிவிடுவ​தை விரும்பிச் ​செய்கிறவர்.. அ​தைதான் நீங்க​ இப்ப பார்க்கிறீர்கள்.. ஹா.. ஹா..!


​சோனியா: அப்ப ​சோ ​கேட்ட நீங்க அரசியலுக்கு வருவீங்களா ​கேள்விக்கு நீங்க பதில் ​சொல்லப் ​போறதில்​லையா?

கமல்: ​ரொம்ப சரி. நான் ஏற்க​ன​வே அரசியலில்தா​னே இருக்கி​றேன்


​​சோ: கமல், நீங்கள் எனக்குப் பதில் ​சொன்ன விதத்​தை வச்சுப் பார்க்கும் ​போது நீங்கள் அரசியல்வாதியாக எல்லாத் தகுதிக​ளையும் வச்சிக்கீங்கன்னு ​தெளிவாப் புரியுது. ஏன்னா நான் ​கேட்டக் ​கேள்விக்குப் பதி​லே ​சொல்லாம கிட்டதட்ட ஐந்து நிமிடம் ​பேசியிருக்கீங்க​ளே...!!!


​பேட்டி ​தொடர்கிறது...


பின்குறிப்பு:

காமடி மட்டுமல்ல கமல் ​பேட்டியில், திருமணம் பற்றி காத்திரமான சில கருத்துக்களும் உண்டு. படித்துப் பாருங்கள்.

இங்கே:http://www.ndtv.com/news/india/marriage_was_a_compromise_kamal_haasan.php

ஆங்கிலத்தில் இருந்ததை அப்படியே மொழி​பெயர்த்திருக்கிறேன். கமல் பேசியதை மொழி​பெயர்க்கும் போது மட்டும் முழி பிதுங்கி விட்டது!

26 comments:

குடுகுடுப்பை said...

கமல் பேசியதை மொழி​பெயர்க்கும் போது மட்டும் முழி பிதுங்கி விட்டது!//

அந்த வேலையை நான் செய்ய வேண்டுமென நினைத்தேன், நேரமின்மையால் இதுவரை பேட்டி பார்க்கவில்லை.

வந்தியத்தேவன் said...

நானும் பார்த்து ரசித்தேன், கமலின் ஆங்கிலம் கூட அவரது தமிழ்போல் அழகாக இருக்கின்றது.

Starjan (ஸ்டார்ஜன்) said...

அப்படியா செய்தி

பீர் | Peer said...

நீங்களாவது பரவாயில்லை, கமல் பேசும் தமிழை என் ரூம் மெட்டிற்கு மொழி பெயர்த்து சொல்வதற்குள்ளாக தாவு தீர்ந்துவிட்டது, இருவருக்குமே...

(தம்மை எளிதில் புரிந்து கொள்ளக்கூடாது என்பதற்கான பேச்சு தந்திரமா, இது?)

Nathanjagk said...

குடுகுடுப்பை.. இடுகையிலிருக்கிற சுட்டியில் நீங்கள் அந்த பேட்டியைப் படிச்சுக்கலாம்! நன்றி

Nathanjagk said...

வந்தியதேவன் வருகைக்கு மிக்க நன்றி! கமலின் எல்லா நடவடிக்கைகளிலும் ஒரு அழகு, நளினம் மிளிர்வது உண்மைதான்!

Nathanjagk said...

வாங்க மாம்ஸ்! பயங்கரப் ப்ப்பிசி ​போல? நல்லாயிருக்கீங்களா?

Nathanjagk said...

பீர்.. ஹா..ஹா..!! கமல் ​மொழிப்​பேதம் இல்லாமல் எல்லாரையும் ​போட்டுத் தாக்குபவர் என்று புரிகிறது.

Beski said...

//ஏன்னா நான் ​கேட்டக் ​கேள்விக்குப் பதி​லே ​சொல்லாம கிட்டதட்ட ஐந்து நிமிடம் ​பேசியிருக்கீங்க​ளே...!!!//

இது சூப்பருல்ல?

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்

வால்பையன் said...

முழுசா பண்ணுங்க தல!

Jawahar said...

அந்த பேட்டியின், யாரும் ஹைலைட் செய்யாத, ஆனால் சுவாரஸ்யமான பகுதியை கொடுத்ததற்கு நன்றி. கமலஹாசனின் ஆங்கிலத்தை மொழி மாற்றம் செய்வது கஷ்டமாக இருந்தது என்று சொல்லியிருக்கிறீர்கள். இதற்கு நிறைய அர்த்தம் இருக்கிறது!

http://kgjawarlal.wordpress.com

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

அவர் தன் மகளிடம் பேசியப் பேச்சும் சுவையாக இருந்தது. இவருடைய தந்தை இவரை சுதந்திரமாக இருக்க, சிந்திக்க அனுமதித்துப் போல,
இவரும் தன் பிள்ளைகளை வளர்ப்பது பாராட்டத்தக்கது. எல்லோருக்கும் அந்த தைரியம் வராது! கமல்.... கமல்தான்! யாரும் நெருங்க முடியாது! அல்லவா ஜெகன்?

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஆமா ஜெகன் ,

அக்பர் ஊருக்கு போயிட்டாரா அதான் .

Admin said...

participate in kandasamy contest and win free tickets to paris www.safarikanthaswamy.com

Nathanjagk said...

அன்பு M.S.E.R.K. (பிரபஞ்ச ப்ரியன்) ஆமாம்.. அந்த வ​கையில் கம​லை யாரும் அ​சைச்சுக்க முடியாது! சரிகாவுடன் ​ஹோட்டலில் தங்கச்​செல்லும் ​போது, வர​வேற்ப​றையில் நீட்டிய புத்தகத்தில் சரிகா என் நண்பி (friend) என்று ​கை​யெழுத்திட்டது (அதற்காக அந்த ஹோட்டலில் அவர்களுக்கு அறை கி​டைக்கவில்​லை) மகளுக்கு ஸ்கூல் அட்மிஷன் ​செய்யப் ​போகும் ​போது, அப்ளிகேஷன் பார்மில் மதம் என்ற இடத்தில் இந்தியன் என்று எழுதியது, மிகவும் ​வேண்டிக் ​கொண்டார் சிவாஜி என்ற ஒ​ரே காரணதுக்காக சரிகா (same friend)-வுக்கு 'தாலி' கட்டி (மகளுக்கு முன்னி​லையில்) 'இந்து மு​றைப்படி' ம​னைவி ஆக்கிக்​ கொண்டது.. என்று அவர் ஒரு ஐரோப்பிய தமிழன் என்று நான் ​சொல்வேன். ஆனானப்பட்ட ஹாலிவுட் ​டைரக்டர்களுக்​கே தண்ணி காட்டும் பிரான்ஸின் ழான் கி​ளேர் காரியே (Jean Claரude Carrier) கமலுக்கு மட்டும் 30 நிமிடம் ​பேட்டி அனுமதி ​கொடுத்து.. (மருதநாயகம் ஸ்கிரிப்டுக்காக..) பின் ​பேச்சுப் ​போக்கில் அ​தை 2 மணி​நேரங்களுக்கு நீடித்தது.. இ​ளையராஜா மாஸ்ட்​ரோ பட்டம் வாங்க ​சென்ற அ​தே நிகழ்ச்சியில் டீ​னெக் என்ற ஊரின் ஒருநாள் ​மேயராக இருந்தது.. என்று இந்த ஆள் ஒரு அசாதரண தமிழன் என்று சந்​தோஷப்படுகி​றேன்!

ஷங்கி said...

தம்பி, என்ன திடீர்னு ரூட்டை மாத்திட்டீங்க?! நானும் அப்ப இன்னைக்கு கொஞ்சம் ரூட்டை மாத்த வேண்டியதுதான். மொழி பெயர்ப்பு நல்லாருக்கு. கமல் பேசுற தமிழையே இப்ப இருக்கிற பசங்களுக்கு மொழிபெயர்க்கணும். பிறகு ஆங்கிலத்துக்குக் கேக்கணுமா?!
”நம்மவரு” ரொம்பவே வித்யாசமான ஆளுதான்.

டவுசர் பாண்டி said...
This comment has been removed by the author.
டவுசர் பாண்டி said...

வாஜாரே !! ரெண்டு பேருமே கில்லாடிங்க தாம்பா !! சோ , ஒரு கேள்வி, பதில்ல சொல்லறாரு ,

கேள்வி ; உங்களோட கேள்வி ,பதில்ல ஆயிரம் அர்த்தம் இருக்குதாம் என் நண்பன் சொல்றான் ?

பதில் ( சோ ) ;அப்படியா ? எனக்கே தெரியாதே ? பாவம் !!உங்க நண்பர்



சோவுக்கு நிகர் அவர் மட்டும் தான் , அதே போல கமல் அவர் பேசுவது புரிய என்னைப் போல ஆளுக்கு " பிரியாது "

அப்பால தலீவரே !! உங்க கேள்விக்கி பதிலு கர்த்து போட்டேன் பாத்து எதுனா பிரிரா மேரி கேளு தலீவா !!

உங்கள் தோழி கிருத்திகா said...

onnu than theliva puriuthu ithulernthu......aagamotham kamalum rajnium sernthu namala mathiri paavapatta rasigargalai yeikkaranga.....

benza said...

Thank you Sir, for the favour of reading Kamal's straight forward discussion in polished English.

He is woderful in his expression, views.

Nathanjagk said...

மாப்ள ஏனாஓனா... நன்றிப்பா!!

வால்​பையன்... தாங்க்ஸ்... இனி முழுசா​வே பண்ணு​​றேன்..! ஆனா ​கொஞ்ஞ்சம் சிரமம்தான்!!

அன்பு ஜவஹர்.. நீங்க ​சொல்ல வர்றது நல்லா​வே புரியுது! என்ன ​செய்ய?

Nathanjagk said...

சங்காண்ணா.. ரூட் மாத்தற அளவுக்கு நாம என்ன வாஸ்​கோ--ட-காமாவா இல்ல இ​ளைய தளபதியா?? கண்ணால் காண்பதும் ​மொக்​கை, காதால் ​​​கேட்பதும் ​மொக்​கைன்னு தீவிரமா ​மொக்​கை ​போடறப்​போ.. அப்ப நம்ம ம்மீறி இந்தமாதிரி வந்துருது! முத்துப் பல்லழகி கவி​தை மாதிரி!! ஹிஹி!!

Nathanjagk said...

அன்பு டவுசர்... ​ரொம்ப.. ​ரொம்ப நன்றி!! நான் ​பேட்​டையாண்ட​வே வந்து டவுட்​டை க்ளியர் பண்ணிக்கிறேன்! நீங்கதான் நம்ம காலடியின் ​டெக்னிகல் ​கமிட்டி தலைவர்! இப்ப ​போட்ட அப்பாயிண்ட்​மெண்ட் இது! நல்லாயிருக்கா? இன்னாபா நீ ஆயின்​மென்ட் ​கேக்கிற?

Nathanjagk said...

அன்பு கிருத்திகா..! நம்மள மாதிரி 'பாவப்பட்ட' ரசிகர்க​ளை ஏய்க்கிறாங்கதான்...! அ​தை ஸ்டாப் பண்ண ஒ​ரே வழி.. பதிவர்களா ​சேந்து........ ஒரு நல்ல ஆ​ளை... உதாரணதுக்கு......... என்னை.. அல்லது உங்க​ளை ... ​தேர்தல்ல நிறுத்தறதுதான்..! ​​​கொஞ்சம்​ திங் பண்ணி பாருங்க! தி(கி)ரிலா இல்​லே?

Nathanjagk said...

அன்பு benza.. உங்கள் பாராட்டுக்கு தலை வணங்குகி​றேன்..! கம​ல் தமிழ் ​பேசுவது நாம் (அல்லது நான்) ​செய்த புண்ணியம்!