ஆண்களுக்கென்று ப்ரத்யேக அழகு சாதனங்கள் இல்லையா? உலகின் இன்னொரு பக்கத்தை கண்டறிந்த இனத்திற்கு, அழகு - தேடத் தேவையில்லாத சமாச்சாரமாகி விட்டதா?
நீங்கள் heterosexual அல்லது metro sexual- எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போங்கள். ஆனால் என் கேள்விகள் இவைதாம்:
1. சவரம் செய்ய மட்டுமே படைக்கப்பட்ட தோலை முகம் என்று சொல்ல மனம் ஒப்புகிறதா?
2. ஆண் தொழில், பெண்எழிலை ரசிப்பது மட்டுமே என்பது ஆணடிமைத்தனம் இல்லையா?
3. பெண்களின் அழகு சாதனங்களின் மேல் உங்களுக்கு கிஞ்சித்தும் (ஒருபோதும்) ஈர்ப்பு எழவில்லையா?
உதாரணம்: சாந்திக்கு கனத்த உதடுகள் - தேனீக் கடித்த வீங்கிய உதடுகள். அதற்கு அவள் Revlon (ColorStay Overtime(c); with / Avec SoftFlex (c) சாயம் பூசுகிறாள்! (பார்த்தீர்களா? ஒரு பிராடெக்டிலேயே இரண்டு காப்பிரைட்டுகள்!!) இது 12 மணிநேரம் சாந்தியின் உதடுகளை மினுக்கும் ப்ரவின் கலராகவும், பளபளக்கும் glossy effect-லிலும் வைத்திருக்கும். சாந்தியின் கணவன் சிவா! (உண்மையில் இந்தப் பெயர்களில் இருக்கும் தம்பதியினர் என்னை மன்னிக்கலாம் - அன்போடு!)
சிவா, தன் உதட்டுக்கு கோல்ட் ப்ளேக் சிகரெட்டுகளைத் தவிர வேறேந்த சாயமும் பூசத் தெரியாத அம்மாஞ்சி. சிவப்படர்ந்த பொன்னிற உதடுகளின் புருஷன் (a literal meaning) இந்த உதடுகளுக்குத் தயாராக / இணையாக இல்லாத கருத்த உதடுகளைக் கொண்ட சிவா, இவள் என் மனைவி என்று உரிமை கொண்டாடுவது கொஞ்சம் பெண்ணடிமைத்தனமாத் தோன்றவில்லை!
வெளிப்படையாகச் சொல்லுகிறேன்...
திருமணத்திற்குப் பிறகும் பெண்கள் தங்கள் அழகு மேல் தனிக்கவனம் கொண்டிருக்கிறாள். இதை நீங்கள் நன்றாகக் கவனித்திருக்க வேண்டும். ஆனால் இந்த ஆம்பிளைகள்...... கல்யாணத்திற்கு 2 நாட்கள் முன்பு பண்ணிய வாழ்க்கையின் முதலும் கடைசியுமான பேஷியலோடு நம் அழகின் தேவை தீர்ந்தது என்று கம்பீரமாக, காரின் ஸீட் பெல்ட்டை போடாமல் ஆபிஸுக்கு 80களில் பறக்கிறார்கள்!
Agree with me some extent??
ந்நோ...? நீங்கள் காஃபி குடிப்பவரா? உங்களை அங்கிள் என்று பக்கத்து வீட்டு +2 லதா சொன்னால், என்னாடா குழந்தே என்று குறுநகைப் பூர்ப்பவரா? Don't visit to my blog at least for next 35 years. Come again by 2044 AD. Thanks!
யெஸ்...?
ஐ லவ் யூ! முதலில் ஒன்று தெரிந்து கொள்ளுங்கள்.. பணத்திற்கும் ஆண்கள் அழகாய் இருப்பதற்கும் சம்பந்தமேயில்லை!!!
ஆம்.. மேலதிக உதாரணங்கள், புள்ளிவிபரங்கள், ஆவணங்கள், கோவணங்கள் வேண்டும் என்பவர்கள் என் மொபைல் பேசிக்கு தொடர்பு கொள்ளலாம். நான் உங்களுக்கு உதவுகிறேன்.
நீங்கள் அழகு பற்றி யோசிக்க வேண்டுமென்கிறேன். ஆண்+அழகு = ஆணழகு மட்டுமல்ல.. பெண்ணழகும் சேர்த்திதான். நீங்கள் அழகாயிருப்பதன் மூலம் (wait.. அழகாயிருப்பது என்பது உங்கள் அம்மாவின் complexion + அப்பாவின் மார்பு முடியின் வம்சாந்திர வரம் மட்டுமல்ல; அதை எப்படி தனிக்கவனம் எடுத்து, தோலுக்கு சிரத்தையாக tone சேர்த்துகிறோம், அக்குள் முடியிலிருந்து slaughter house வாசனை வரமால் தடுக்கிறோம் என்பதெல்லாம் சேர்ந்ததுதான்..) ஒரு நல்ல பண்பை உங்கள் வம்சத்துக்கு அளிக்கிறீர்கள்! இதை விளக்க்க்க்கி எழுத விரும்பவில்லை. நீங்களே திங் பண்ணிக்கோங்க!!
மாசம் ஒருமுறை சலூனுக்குப் போகவேண்டிய ஜென்மாந்திரங்கள் ஆண்கள். ஹேர்கட், ஷேவிங் இதோடு ஒரு பேஷியல்.. அட்லீஸ்ட் ஆலோவேரா ஜெல்லில் ஒரு 10 நிமிட குளிர்ச்சி.. இல்லை.. பேஸ் பேக்கில் 20 நிமிட அமைதி.. இதை செய்து கொள்ளலாமே? ஷுக்களின் toe பகுதியை குத்திக் கிழிக்கும் கட்டைவிரல் நகத்தை நீங்களே கட் செய்து எடுத்துவிடலாம்.. புருவங்களை.. ஏன் கன்னக் கதுப்பு முடிகளைக் கூட threading மூலம் சீர் செய்து கொள்ளலாம்..! இன்னும் கொஞ்சம் சிரத்தைக் காட்டவேண்டுமானால், ஜிம், ஸ்பா, ஆயில் மஸாஜ் என்று போகலாம்.. ஆனால் கொஞ்சம் காஸ்ட்லி.
இது போல் ஆண்களை ஆண்களாக - முக்கியமாக கல்யாணத்திற்கு பிறகு முழுக்க முழுக்க மனைவியிடமும், குழந்தைகளிடமும் அர்ப்பணிக்காமல் (சரண்டர் ஆகாமல்) - ஆண்களுக்கென்றும் ஒரு தனித்துவ மிக்க ஒரு சின்ன நேரத்தை செலவிடலாமே? கிருகஸ்தன் எல்லாம் தடித்தோல் மாடுகளா? நெவர்!!!!
Male aethetic enhancement, confidence corrector, power bronze, Nivea, Fair & Lively, Garnier போன்ற தரமான ஆண்களுக்கான காஸ்மெடிக் சமாச்சாரங்கள் எளிதாக கிடைக்கின்றன. இதை கேட்டு வாங்கும் (ஆண்) கூச்சத்தை விட்டொழியுங்கள். உங்கள் உதடுகள் கருத்து இருப்பதுதான் உங்களுக்கு கம்பீரம் என்று நீங்கள் எண்ணினால், நான் ஒன்றும் சொல்லமாட்டேன். ஆனால், இப்படி கருத்திருப்பதை கண்டுணர எனக்கு நேரமில்லை என்பீர்களேயானால்.. நீங்கள் கொஞ்சம் கண்ணாடி பாருங்கள் என்பேன்!
வேறுவழியில்லை.. இதை இங்கே சொல்லியே ஆகவேண்டும்.. உண்மையில் இந்தப் பிரபஞ்சத்தில் ஆகத் தூய்மையான உடல் ஆண்களுடையதுதான். இல்லையென்று சொல்பவர்கள் கைத்தூக்குங்கள்.
ஆண்களின் materialistic ஞானம் இந்த விஷயத்தில் கொஞ்சம் சளைத்துவிட்டதோ என்று தோன்றுகிறது. சன் ஸ்கிரீன் லோஷன், வின்டர் க்ரீம் இவை இரண்டும் ஒரே வளவள கொழகொழ என்றாலும் ஆழ்ந்த வேறுபாடு உண்டு, ஒரு வருடத்தில் நீங்கள் இது இரண்டையும் பயன்படுத்தியாக வேண்டும்; மாஸ்ட்ரைஸர், பேஸ்வாஷ், பாடி லோஷன் இவைகளால் ஆண்களின் masculine கெளரவத்திற்கு ஒரு குறையும் வராது. Home facial kit, manicure, pedicure, hair treatment, face lift... எல்லாம் இன்னும் 80% ஆண்களை சேர்ந்தடையவில்லைதான்! இப்படி நிறைய சொல்ல வேண்டும். ஆனால் ஒரு விஷயத்தை சிலாகிக்கிறேன். ஆண்களுக்கு கோடு போட்டுக் கொடுத்தால் போதும். அப்புறம் அவர்களே ஆண் மேக்கப் பற்றி R & D லெவலுக்கு தகவல் சேகரித்து விடுவார்கள். ரைட்?
இன்னும் கொஞ்சம் பேணிக்காத்தால் உங்கள் உடல் பொக்கிஷம்! உங்கள் செய்லதிறன், மனோதிடம், பழைய குறும்பு, சின்னக் கலாட்டா, கல்லூரித் துள்ளல் எல்லாம் உங்களிடம் வாலாட்டி நிற்கும்!
சமீபத்தில் Readers Digestல் ஒரு ஆர்ட்டிகிள் வாசித்தேன். அதுவும் கிட்டத்தட்ட ஆண்கள் மேக்கப் செய்து கொள்ளவேண்டுமா என்பதை ஒரு பெண் அங்கலாய்க்கும் பத்தி. அதில் அந்த பெண் (ஸாரி.. புக், வீட்டில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை) ஆணின் மேக்கப் (கலையை!?) பற்றிய 'ஞானத்தைப்' புட்டு புட்டு வைத்திருந்தாள். கொஞ்சம் கோபமாகிவிட்டது. அதுதான் இந்தப் பாய்ச்சல்!
நாமார்க்கும் குடியல்லோம்!
பேரலல்லாக, மேக்ஸிம் மற்றும் தி மேன் மேகஸின்களில் கிடைத்த குறிப்புகள் நாம் செல்ல வேண்டிய பாதை எவ்வளவு பெரியது? நாம் இழக்கின்ற விஷயங்கள் எவ்வளவு என்று புரிந்தது. ஜிம்மில் 40 நிமிட விறுவிறு பயிற்சிகள், அதற்கப்புறம் அங்கேயே உள்ள ஸ்பாவில் ஒரு களிப்பான மஸாஜ் (இது stretching போல) அப்புறம் 10நிமிடங்களுக்கு சின்ன டவலோடு ஸ்டீம் பாத்.. படிக்கும் போதே உங்கள் மனம் லேசாகவில்லை?
வாழ்க்கை வாழத்தான்.. வாழ வைக்க மட்டுமில்லை! Mind it..!!
28 comments:
ஆண் + பாவம்
ஆண்களை அழகேற்ற வந்த
ஆணழகன் வாழ்க.
காளையரைக் காப்பாற்ற வந்த
கட்டழகன் வாழ்க.
ஊரை உலையிலேற்ற வந்த...
அய்யய்யோ சாரி, தடம் மாறுது. இத்தோட நிறுத்திக்கிறேன்.
---
நமக்கு இந்த அழகுசாதனத்தின் மேல் விருப்பமே இல்லை. ஒரு வேளை கல்யாணத்துக்கு அப்புறம் இப்படி ஆயிருவேனோ? மாம்ஸ், நீங்க கல்யாணத்துக்கு முன்னாடியும் இப்படித்தான் இருந்தீங்களா?
அப்புறம், நீங்க கேக்கும்போது நா கை தூக்கவே இல்லை.
நானும்தான் ஏனா ஓனா.என்னா அழிச்சாட்யம் பன்றார்யா,இந்த மனுஷன்,வரிக்கு வரி!உங்க பின்னூட்டம் டாப் பாஸ்!
வாழ்க்கை வாழத்தான்.. வாழ வைக்க மட்டுமில்லை! Mind it..!!//
இது சூப்பர்.
இன்றைக்கு வரைக்கும் மூஞ்சிக்கு நான் கோபால் பல்பொடி கூட போட்டதில்லை.
#
2044 ல் வந்து பாக்குறேன்.
#
சத்தியமா சந்தேகம் கேக்க போன் பண்ண மாட்டேன்..
ஓ.கே..,
காலடி+அழகு-பாவம் = ஆண்
பாக்கலாம் இனியாச்சும் உங்க அழகு எப்பிடின்னு !ரொம்ப கஸ்டம் !
//நீங்கள் heterosexual அல்லது metro sexual- எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போங்கள். //
இதற்கு தமிழில் விளக்கம் சொல்லுங்கள்!
பதிவெழுதும் போது எனக்கு பயன்படும்!
அழகு கிரீமில் எனக்கு நம்பிக்கையில்லை, நான் பவுடர் கூட உபயோகிப்பதில்லை!
பெரியண்ணன், ஏதாவது பெருசா சொல்லுவாருன்னு பாத்தேன்! இந்த பார்முலாக்குள்ளயே நிறைய மீனிங் இருக்கும் போல! சங்காண்ணன் வந்தா கரெக்டா சொல்லிப்புடுவாரு. நன்றி சென்ஷி!
மாப்ள ஏனாஓனா... அழகுசாதனம் என்றால் முகத்துக்கு பூசும் களிம்பு வகையறாக்களை மட்டும் நினைக்க வேண்டாம். நகக்கண்களில் அழுக்கெடுப்பது, படர்தாமரை வராமல் பாத்துக்கொள்வது, நாக்கை கிளீனாக வைத்துக் கொள்வது, தினமும் குளிப்பது, முடியிலிருந்து பொடுகு அடுத்தவருக்கு டிரான்ஸர் பண்ணாமல் இருப்பது.. இந்த மாதிரியான விஷயங்களில் தனிக்கவனம் வேண்டும் என்கிறேன்.
//மாம்ஸ், நீங்க கல்யாணத்துக்கு முன்னாடியும் இப்படித்தான் இருந்தீங்களா?
//
ம்ம்ம்...!! ஆமாம்.. சோப் போட்டுக் குளிப்பேன். தினம் தலைக்கு ஷாம்பு.. தேங்காய் எண்ணெய் வைக்க மாட்டேன்.. பிரில் க்ரீம்தான்... பாடிஸ்ப்ரே.. அவ்வளவுதான்!
கல்யாணம் ஆனதுக்கப்புறம்.. இன்னும் கொஞ்சம் ஆர்வம் வந்திடுச்சு! அதிலும் ராஸலீலா படிச்சத்ததுக்கு அப்புறம் பெரிய ஈடுபாடே வந்துடுச்சு!
நன்றி ராஜா..!
இது சுத்தம் சுகாதாரம் மாதிரி எழுதுனா போரடிக்குமேன்னு... இப்படி அழகுக் குறிப்பு கணக்கா எழுதிட்டேன்!
வாங்க குடுகுடுப்பை!!
நீங்க அழகுக்குறிப்பு எழுதலாம்! நிறைய டிப்ஸ் வச்சிருக்கீங்கோ!
என்ன தம்பிரி.. இப்படி எஸ்ஸான எப்படி? தீஅதீ ரசிகர்களுக்கு இது செல்லாது! நீங்க வந்தேதான் ஆகணும்! வேணா நான் போன் பண்ணட்டா?
அன்பு தல! நன்றி!
பாருடா அரவிந்தை! ,இவரும் சமன்பாட்டோடே வந்திருக்காரு! ஆணாதிக்க வலைப்பதிவுங்கிறத சொல்றாரோ???
நன்றி ஹேமா! அழகு வழியுதுங்கிறீங்க!? தாங்க்ஸ்பா!
அன்பு வால்பையன்..
Metrosexual - பேஷன், மினுமினுக்கு இதெல்லாம் நிறைந்த நகரத்து, நாகரீக ஆண் வர்க்கம் - அதாவது பிலிக்கான்ஸ் பார்ட்டி! எல்லா நவீன கலாச்சாரங்களையும் ஒரு கைப் பாத்துவிடுபவர்கள்!!
Heterosexual - சீரியஸான ஆளு! சாதாரண குணாதிசயங்கள் இருக்கிற பார்ட்டி! எதிர்பாலின கவர்ச்சி மட்டும் உள்ளவர்கள்.
- - -
புவடர் பயன்படுத்தாது நல்லதுதான். நான் கூட முக பவுடர் யூஸ் பண்றதில்ல!
ஆணியம் 'ன்னா என்னா ஜெகா?
//என்ன தம்பிரி.. இப்படி எஸ்ஸான எப்படி?//
#
நான் எஸ்ஸாகல அண்ணா, இங்கயேத்தான் சுத்திகிட்டு இருக்கேன்.
#
// தீஅதீ ரசிகர்களுக்கு இது செல்லாது!//
#
நான் எப்பவுமே காலடியின் தீவிர அதிதீவிர ரசிக கண்மனிதானுங்கன்னா...
#
//நீங்க வந்தேதான் ஆகணும்!//
#
காலடியை புக்மார்குல வச்சிருக்கேன்.
தினமும் வந்துகிட்டுதான் இருக்கேன்.
நான் வர்றத காட்டுறதுக்காக, நான் வந்துட்டேனு ஒரு பின்னூட்டம் போட்டூடுறேன்..
#
// வேணா நான் போன் பண்ணட்டா?//
#
நான் எந்த நம்பர்ல இருக்கேனு எனக்கே தெரியல.
எல்லா நெட் ஒர்குலயும் ஒரு சிம் இருக்கு.
நானே போன் பன்னுறேன்..
#
ஆம்பளைங்களுக்கெல்லாம் இயற்கையிலேயே அழகு இருக்குல்லா, அதாம் இந்த மேட்டர்லாம் தேவையில்லல்லா?! எப்ப பொம்பள அழகாயிருந்தாத்தான் லுக்கு விடுவேன்னுறாளோ அப்ப நம்மாளுங்க கிளம்பிடுவாங்க! எனக்கெல்லாம் கல்யாணத்தன்னைக்குகூட இந்தக் கொடுப்பினை இல்லாமப் போச்சே!
//வாழ்க்கை வாழத்தான்.. வாழ வைக்க மட்டுமில்லை! Mind it..//
இது நமக்கு மட்டும் புரிஞ்சி என்ன பிரயோஜனம் தம்பீ!, புரிய வேண்டியங்களுக்குப் புரியணுமே!
பெரியண்ணன் ரெண்டு வரில எழுதினாலும் விளக்கம் வேணும். ரெண்டாயிரம் வரில எழுதினாலும் விளக்கம் வேணும்.
அப்புறம், நான் கையைத் தூக்கிட்டேன். அப்ப நான் மேல் சாவனிஸ்டோ?!!
படிச்சேன்.. முடியல..!
ஆனா ஒரு ஓட்டுப் போட்டுட்டேன்..!
இந்த இடுகைக்கே இப்பதான் பின்னூட்டம் போடுறாரா சங்கா அண்ணன்...
ஒன்னும் முடியல சாமி
ஜெகா அண்ணே நான் ஜகா
குருநாதா,ஒரு தொடர் பதிவுக்கு கூப்புட்டிருக்கேன்.வந்து கை நனைச்சுட்டு போங்க..
ஆண் எப்பவுமே அழகுதான் ஜெகா...
மிகவும் ரசித்தேன். ரொம்ப நல்லா எழுதுகிறீர்கள். தமிழ் வலைப்பூக்களில் இந்த மொழி, தொனி கொஞ்சம் அபூர்வம்.
அனுஜன்யா
Post a Comment