சரி.. சரி.. இதோட இவன் சவகாசமே வேணாம்னு எஸ்ஸாகக் கூடாது. கொஞ்சம் அட்டணங்கால் போட்டுக்கிட்டு சேர்ல சாய்ஞ்சுக்கிட்டுப் படிச்சுத்தான் பாருங்களேன்.
ஆங்..! சொல்ல மறந்துட்டேன் இது வந்து ஒரு தொடர்பதிவு..!
என்னா தொடர்ர்ர்ர்??
ஐஸ்வந்தி ஆரம்பிச்சு.. நெப்போலியன் பா. ராஜாராம் வரைக்கும் வந்து இப்படி நம்ம காலடியிலும் வந்து நனைச்சுப்போட்ட அலைதான் இது..
எது???
பீட்டரு.. லாக்கரு.. டக்கரு.. மேட்டரு............. அப்படின்னு சொன்னா பதிவை ஆரம்பிச்ச ஜெஸ்க்கே பிரியாது!!! ஸோ.. நோ வால்.. ஒன்லி பால்!!
தொடர்பதிவு தலைப்பு இதுதான்பா..
கடவுள், பணம், அழகு, காதல்
நல்லாத்தான் இருக்கில்லே?
நான் முதல்ல இந்த லைனை வச்சு ஒரு சிறுகதை ரெடி பண்ணலாம்னு இருந்தேன்.. தலைப்பை கொஞ்சம் வேகமா படிச்சுப் பாருங்க. இந்தியன், அந்நியன், சிவாஜி, கந்தசாமி காதறுந்த சாமி படமெல்லாம் ஞாபகத்துக்கு வரலே?? நானும் தமிளன்தான்கிறதால எனக்கும் அந்த கிறுகிறுப்பு வந்துச்சுதான். பட், கண்ட்ரோல் பண்ணிக்கிட்டேன். சிறுகதை தமாஷெல்லாம் இல்லாம ஒரு பதிவு போடலாம்னுட்டு இருக்கேன்.
வக்காளி.. அப்பிடி என்னதாண்டா கழட்ட போறேன்னு உங்களுக்கு இருக்கிற ஆர்வம் (!??) அப்ப்ப்பிடியே 'எனக்கும்' இருக்கு பாஸ்!! ஏன்னா 'எனக்கும்' இந்த லைன் வரைக்கும் என்ன எழுதப்போறம்னு எனக்கே தெரியாது. டோண்ட் லாஃப்! (பா.ராவுக்கு இப்பவே கெட்ட கோவம் வந்திருக்கும்.....)
ரைட்... ஞாபகம் வச்சுக்கோங்க.. நோ வால்.. ஒன்லி பால்!! ஓகே?
கடவுள்:
ஆஞ்சநேயாய நமஹ
மஹாவீராய நமஹ
ஹனுமனே நமஹ
மாருதாத்மஜாய நமஹ
தத்வத்ஞாயப்ரதாய நமஹ
என்று தினந்தோறும் கும்பிடுவன் நான். ஆனால் என் அப்பா சீரியஸ் பெரியார்வாதி (என்று நினைக்கிறேன்!) இதுவரைக்கும் 14 முறை சபரிமலை போய் வந்திருக்கிறார் (குருசாமீ??) . என்னா காமடி.. ஏங்ங்?? இப்படி ஒரு வித்யாசமான அட்மாஸ்பியரில் வளர்க்கப் பட்டதால் (வளர்ந்ததால்..) கடவுள் ஒரு காமடியாகி போய்விட்டார் எனக்கு! ஆனால் தினமும் ரசிக்க வைக்கும் காமடி.
சமீப காலங்களில் யாராவது "Do u believe in God?" என்று கேட்டால், "Yes! Just like smoking!" என்று சொல்லி வருகிறேன்.
ஆஞ்சநேயாய நமஹ....
பணம்:
நான் வுடற பீட்டரு, பல்லாங்குழியெல்லாம் பாத்துட்டு நீங்க என்னென்னவோ நெனச்சிருப்பீங்.. பட் ஏக்சுலா என்கிட்ட நயா பைசா கெடையாது... அப்படின்னும் சொல்ல முடியாது... வாரிக்கொடுக்கிற அளவுக்கு வாய்ச்சிருக்கின்னும் சொல்ல முடியாது. நான் ஒரு உல்லாசி! பணத்தை அதன் இடம் பார்த்துதான் புரிந்து கொள்வேன். என்னடா டோன் திடீர்னு மாறுதேன்னு யோசிக்கறீங்களா?? ஹேஹே!! சொல்றேன்; அதாவது, உங்கிட்ட 1000 ரூபா இருக்குன்னு வச்சுக்குங்க.. நீங்க சின்னசிலுக்குவார்பட்டிக்குப் போயி தெரியாத நாலு பேர கூப்பிட்டுக் கூட, தெம்பா டாஸ்மாக் பார்ட்டி வெக்கலாம். ஆனா 10000 ரூபா (சைபரை நல்லா எண்ணுங்கப்பா) இருந்தாலும் இந்த பெங்களூருல நல்லா தெரிஞ்ச 4 கொலீக்ஸைக் கூப்பிட்டுக் கடலை மிட்டாய் கூட வாங்கித்தர முடியாது. அதுதான் இடம், பணம், ஏவல்!!
ஸோ பணத்தை நான் அது கிடைக்கிற இடம்பாத்துதான் மதிக்கிறது மற்றும் மிதிக்கிறது!!!
அழகு:
ஒம் மூஞ்சிலே ஆஸ்ஸ்ஸிட் அடிக்கிறேன்னு, நெறைய பேரு (ஐ மீன் நீங்க எல்லாரும்...!!!) முடிவு பண்ணியிருக்கிறதா தகவல்.. ஸோ.. அடுத்த பாயிண்ட்..
காதல்:
இதுதாம்பா நம்ம பாயிண்ட்... அதாவது விஷயம்னு சொல்ல வந்தேன்.
இரண்டாங்கிளாஸ் படிக்கும் போது யாருக்காவது லவ் வந்திருக்குமா?? எனக்கு வந்துச்சு.. ஷர்மிளாங்கிற புதுசா ஜாயின் பண்ணுன பொண்ணு மேல (எனக்கு மட்டும் இல்ல..) இப்ப வரைக்கும் இந்த முகம் மறையாம மனசுல இருக்கு. ஒரு பென்சில் பேப்பர் (+கொஞ்சம் சரக்கு) கொடுத்தா அந்த முகத்தை வரைஞ்சுடுவேன்னு தோணுது. அந்த அழகான தேவதைக்கு அவங்க அம்மா கால் முழுக்க போட்ட சூட்டுக் காயங்கள் இன்னும் கண்ணுலயே நிக்குது. அப்புறம் 5th, 6th. 8th படிக்கும் போது ப்ரெண்ட்களா சேத்து கதை கட்டி எனக்கு நாலஞ்சு காதலிகளை உருவாக்கிட்டானுங்க (என்னக் கொடுமைங்க ராஜா??)
டிப்ளமோ, அப்புறம் பிஈ எல்லாம் படிச்சிருக்கேன்.. அதனால இந்த இடம் என்னோட காதல் பற்றிய ஞானத்தைச் சொல்ல பத்தவே பத்தாது (என்னதான் பெட்ரோலை ஊத்திக் கொளுத்தினாலும்..)
இருந்தாலும் (தீஅதீ ரசிகர்களுக்காக..) ஒரு பஞ்ச் டயலாக்:
காதல்கிறது... பின்னூட்டம் மாதிரி! என்னதான் நீங்க நிறைய சரக்கு வச்சு, இறக்கி வச்சு பதிவு போட்டாலும் கிளிக் ஆகற ஏதாவது ஒரு மொக்கைக்குதான் கன்னா பின்னான்னு பின்னூஸ் வந்து குமியும்!!! எலக்கியம் முக்கியமில்ல தலைவா.. யதார்த்தம்தான் மேட்டரு!!!
அதாவது Don't be serious!! but be sincere!!!
ரைட்டா?
இதை தொடர்பதிவா நினைக்கிற நம்ம தீஅதீ ரசிகர்கள் அவங்களா செல்ப்-ஸ்டார்ட் போட்டு 120 கிமீ வேகத்தில் சென்று காதல், காதல், காதல், காதல்.. ச்சீசீசீ... ஏதோ மாத்திச் சொல்றேன்லே.. ஆங்... கடவுள், பணம், அழகு, காதல் பற்றி பிழிஞ்சு தள்ளவும்.
முடியலேன்னாலும் பரவாயில்லே.
27 comments:
இது சீரியஸா..? மொக்கையா..? இதுக்கு பின்னூட்டம் வந்து குவியுமா..? இல்ல பூனை ஓட்ட வேண்டிவருமா..?
சரி.. வந்ததுக்கு ஏதாவது மொய் எழுதணும்ல...
நல்லா வந்திருக்கு பாஸூ. ;)
//காதல்கிறது... பின்னூட்டம் மாதிரி! என்னதான் நீங்க நிறைய சரக்கு வச்சு, இறக்கி வச்சு பதிவு போட்டாலும் கிளிக் ஆகற ஏதாவது ஒரு மொக்கைக்குதான் கன்னா பின்னான்னு பின்னூஸ் வந்து குமியும்!!! எலக்கியம் முக்கியமில்ல தலைவா.. யதார்த்தம்தான் மேட்டரு!!!\\
அனுபவம் பேசுது
பணம் பற்றிய உங்கள் பார்வையை ரசித்தேன் ... ஒரு முறை இப்படித்தான் 4ம்மில் இருக்கும் அந்த பப்பில் ஒரு சாயங்காலம் மூன்று பேர் மது அருந்தினோம் ... பில் வந்தது ... Rs.12000 only ... ஒருவர் மயக்கம் போட்டுவிட்டார், மற்றொருவர் “ஒரு ஈ எறும்புக்குக் கூட நான் துரோகம் செய்ததில்லையே கடவுளே” என அழத் துவங்கினார், நான் மட்டும் தைரியமாக (ஆனாலும் சற்றே என் வழக்கமான விதியை நொந்தபடி) க்ரெடிட் கார்டில் என் வியர்வையைத் துடைத்துக் கொண்டேன்
நோ வால்.. ஒன்லி பால்!!
சமீப காலங்களில் யாராவது "Do u believe in God?" என்று கேட்டால், "Yes! Just like smoking!" என்று சொல்லி வருகிறேன்.
யாருக்காவது லவ் வந்திருக்குமா?? எனக்கு வந்துச்சு.. ஷர்மிளாங்கிற புதுசா ஜாயின் பண்ணுன பொண்ணு மேல //
ஜெகன் டச்
லவ் வரலைன்னாதானே யோசுக்க வேண்டிய வுசயம்
என் தளம் பக்கம் வாங்க மண்டக்காயச்சல் இருக்கு ஒங்களுக்கு
:)
இதுக்குதான் உங்களை கூப்பிட்டது.சிரிச்சுக்கிட்டே இருக்கிறேன்...நம்ம தளத்தில் இருக்கிற உங்கள் பின்னூட்ட கதையை திருமதி ஜெகன் வாசித்து வாருங்கள்.அப்புறம் வந்து தோசை கரண்டியை அடுப்பில் வச்சா போதும்.கலக்கி இருக்கீங்க மக்கா!
கலக்கல் ஜெகன்
//இரண்டாங்கிளாஸ் படிக்கும் போது யாருக்காவது லவ் வந்திருக்குமா?? எனக்கு வந்துச்சு.. ஷர்மிளாங்கிற புதுசா ஜாயின் பண்ணுன பொண்ணு மேல (எனக்கு மட்டும் இல்ல..) இப்ப வரைக்கும் இந்த முகம் மறையாம மனசுல இருக்கு//
ரைட்டு. கூடிய சீக்கிரம் இதைப் பற்றிய பதிவை எதிர்பார்கிறேன். பதில்கள் அனைத்தும் உங்க ஸ்டைல்ல நல்லா இருக்குது
ஆமாம் பீர்... பூனைதான் ஓட்டணும் போல! இந்த ஒட்டடை தொல்லை வேற! பின்னூட்டங்கிறது சிலந்தி பின்னுற ஒட்டடை மாதிரியோன்னு தோணுது. இருந்தாலும் இந்த வருஷம், தாத்தா வீக்-என்ட்டா பாத்து பொறந்திருக்கறதால.. பின்னூஸ் மண்டே அன்னிக்கு குவியும்னு மேலூரு குறிகாரர் சொல்றார். நன்றி பீர்!
அன்பு கிறுக்கல் கிறுக்கன், காதல்கிறதுன்னு... அப்படின்னு ஆரம்பிச்சாலே காதைப் பொத்திக்கிட்டு ஓடிராய்ங்க!! அதான் இழுத்துப் புடுச்சி உக்கார வக்கலாம்னு இப்படி...! நன்றி!
நண்பா, நண்பா.. நந்தா நண்பா,
சீக்கிரம், நாம மீட் பண்ணணும். நாளைக்குக் கூட ரஜா-தான். எங்க எப்பன்னு சொல்லவும். நான் அங்கு வந்து சேர்கிறேன். நீ வரும் போது மறக்காமல் கிரெடிட் கார்டை எடுத்துக் கொள்ளவும்!
அன்பு நேசா..
மண்டைக்காய்ச்சலா?? என்ன பின்னூலயே பீதியக் கிளப்பறீங்க.. இருங்க வர்றேன்..!
அன்பு பாரா...
தொடர்பதிவு வாய்ப்பு தந்தமைக்கு நன்றி! பதுக்கி பதுக்கி உங்க வலைமனையில வச்ச முட்டையை.. இப்படி இங்க வந்து ஆப்பாயில் போட்டுட்டீங்களே?? நியாயம்ம்மா??
இதைத் திருப்பத்தான் தோசைக் கரண்டியா??? நீங்க ரொம்பப் பெரிய கேட்டரிங்காரருதான்!
நான் ஆதவன்...
//கூடிய சீக்கிரம் இதைப் பற்றிய பதிவை எதிர்பார்கிறேன்//
ஏற்கனவே என்னோட க்ரைம் ரேட் கூடிக்கிட்டேப் போய்ட்டு இருக்கு; இதில இன்னொரு கத்திக்குத்தா???
//அழகு:
மவ்னே.. இனி நீ இது பத்திக் காண்டியும் எழ்திப்பாரு........
ஒம் மூஞ்சிலே ஆஸ்ஸ்ஸிட் அடிக்கிறேன்னு, நெறைய பேரு (ஐ மீன் நீங்க எல்லாரும்...!!!) முடிவு பண்ணியிருக்கிறதா தகவல்.. ஸோ.. அடுத்த பாயிண்ட்..//
இது நல்ல பிள்ளைக்கு அழகு.
தல,உங்களுக்கு ரெண்டாம் கிளாஸ்னா நமக்கு மூணாம் கிளாசுல புதுசா வந்த பொண்ணு மேல ஈர்ப்பாயி எதிர்பாராமல் மூணுவருசம் முன்னாடி துபாய்ல அவங்களை கணவர், குழந்தை சமேதமாக பார்க்கிறவரை தொடர்ந்தது...... :))
தம்பீ, சிவகாசிப் பட்டாசு இடுகை! காதலைப் பத்திய விளக்கம் சூப்பரோ சூப்பர்!
//ஆஞ்சநேயாய நமஹமஹாவீராய நமஹஹனுமனே நமஹமாருதாத்மஜாய நமஹதத்வத்ஞாயப்ரதாய நமஹ//
~
இதுக்கு முன்பு போட்ட இடுகைக்கும் இந்த மந்திரத்துக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமில்லைங்க அண்ணா....
//வக்காளி.. அப்பிடி என்னதாண்டா கழட்ட போறேன்னு உங்களுக்கு இருக்கிற ஆர்வம் (!??) அப்ப்ப்பிடியே 'எனக்கும்' இருக்கு பாஸ்!! ஏன்னா 'எனக்கும்' இந்த லைன் வரைக்கும் என்ன எழுதப்போறம்னு எனக்கே தெரியாது//
~
இந்த வார்த்தை நம்பும்படியாகத்தான் இருக்கிறது.......
தலைப்பு நல்லாத்தானே இருக்கு..!?!?
.....காதல் பற்றி இன்னும் அதிகமா எழுதுங்க......
அதுல நான் ஆ?ர்வமா இருக்கேன்..
நல்லா இருக்குங்க ஜெகா...!
நல்லா இருக்கு ஜெகன் ,
நன்றி ஹேமா!!
இனிமே ஆண்கள் அழகுக்குறிப்பு பற்றி எழுதவே மாட்டேன்! முண்டைகண்ணன் மாரியப்பன் சத்தியம்!
உங்ககிட்ட ஒரு ஹெல்ப்........... அதை அடுத்த பின்னூல சொல்றேனுங்க!
அடடே துபாய் ராஜா,
பயங்கர விறுவிறுப்பா இருக்கே!?
இதுதான் யாருக்கும் புரியாத முடிச்சுங்கிறது! எழுதுங்களேன் இதை.
ஒரு அண்ணன் மாதிரியா வர்றீங்க? போறீங்க? பின்னூ போடறீங்க?? சுத்த மோசம்; நோ பாசம்! ஒருவேளை சனிப்பெயர்ச்சியினாலே சங்காண்ணனுக்கு ஏதும் ஆயிருக்குமோ? உங்களுது கன்னி ராசியா?
சம்முவம், பின்னூல சும்மா சம்மு சம்முன்னு சம்மியிருக்கீங்க! மிக்க நன்றி!
//இதுக்கு முன்பு போட்ட இடுகைக்கும் இந்த மந்திரத்துக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமில்லைங்க அண்ணா....
//
எனக்கே நான் சம்பந்தமில்லாதவன் மாதிரி சிலசமயம் தோணறது. இதுக்கு என்ன சொல்றீங்க?
வாங்க பெரியண்ணன் சென்ஷி!!!
பா.ராஜாராம் கூப்பிட்டாரேன்னு இப்படி ஒரு தொடர்பதிவு!! நீங்களும் ஒரு பின்நவீனத்துவ தொடர்பதிவு ஆரம்பிங்க.. இரக ஸ்தீஸ்தா!!!
நல்லா இருக்குங்க ஸ்டார்ஜன்..! இப்படி பொறுப்பில்லாம ஏனோதானோன்னு வர்றதும் போறதும்!!
Post a Comment