யு மஃப்டைவர், புட்-புல்லர், டான்டலைஸிங்....... ...... இத்யாதிகள். என் ஆங்கில வொகப்பலரி விருத்திக்காக மட்டும் மேனேஜரைப் பாராட்ட முடிகிறது. யு நோ.. I have a good vocabulary on bad words now!
முதுகுப்பின்னால் இருந்து என் மானிட்டரை வெறித்துப் பார்த்தபடி நகர்வது என் மானேஜர் வழக்கம். அப்போது முதுகுக்குப் பின்னால் பெரிய பள்ளம் வெட்டியிருப்பது போல் தோன்றும். டு யு இமாஜின் தட்?
என் மானிட்டரில் இருப்பது பற்றி உனக்கென்ன? ஜஸ்ட் ஸீ மை அவுட்புட், புரொடெக்டிவிடி, பர்ஃபார்மன்ஸ்.. அதைப் புள்ளிக்கணக்காகப் போட்டு எனக்கு அப்ரைஸல் கொடு. அது மட்டும்தான் உன் வேலை. நான் கம்ப்யூட்டரில் என்ன கர்மத்தை நோண்டினால் உனக்கென்ன? ஐ வோன்ட் ஸர்ஃப் ஆன் போர்னோ, ஐம் நாட் ஃபிலர்ட்டிங், ஐம் நாட் ட்ரேடிங். ஐ நோ கார்ப்பரேட் கல்ச்சர் பெட்டர் தன் யூ. உன்னைப் போன்றவர்கள்தான் பாலைவன ஒட்டகம் மாதிரி (இப்படி கற்பனை செய்யும் போது சிரிப்பு வருகிறது) கார்ப்பரேட் எதிக்ஸ், பிஎம்பி வொர்க் ஷாப், வீக்லி ரிப்போர்ட் போன்ற பனையோலைகளை சுகமாக மெல்ல முடிகிறது.
நான் என்னை வாழ்கிறேன். உயரமாக இருப்பதால் கிடைக்கிற ஓலைகளை என்னால் மெல்ல முடியாது. நான் பறவை. ஜொனதன் ஸீகல் மாதிரி.
சுதாகர் அனுப்பிய ஒரு மெயிலில் படித்தது:
கார்ப்பரேட் ஒரு கோழிப்பண்ணை. மேல் அடுக்கு கோழிகள் பார்ப்பது only shit..! கீழுள்ள கோழிகளுக்குத் தெரிவது a.....! நான் கீழடுக்குகோழி :(
'திவ்யா. இன்னும் ரெண்டு நிமிடத்தில் ப்ராஜெக்ட் ஓஏ வேணும்'என் sarcastic பதில்கள் என்னுள்ளே முடங்கிக் கொள்கின்றன. மானேஜருக்கு என்னால் முடிந்த apple polish: preparing a Maggi report!
'பட் ஐ வில் நீட் அட்லீஸ்ட் 10 மினிட்ஸ் ஸார்'
'நோ. 2 மினிட்ஸ் ஒன்லி'
பட் இட்ஸ் நாட் மேகி நூடுல்ஸ் மடையா, எ ரிப்போர்ட்...
முதலில் இவன் என் முதுகு புறத்திலிருந்து மானிட்டரை உளவு பார்ப்பதை நிறுத்த வேண்டும். யாரோ என் முதுகை ஹிப்னடைஸ் செய்வது போல் இருக்கிறது. I'm going crazy!
இதற்கு நீ (மேனேஜர்) என் அருகில் வந்து நின்று என் ஸ்க்ரீனை வெறி. இலவசமாக உனக்குக் கிடைக்கும் cleavages பற்றி I don't care..! ஆனால் முதுகு வழி உளவு பார்க்காதே டியர் கிழட்டு ஷெர்லக் ஹோம்ஸ். என்னால் முடியவில்லை. பயங்கரமாய் முகுது வலிக்கிறது. ஒரே ஒரு புள்ளியில். கழுத்துக்கு கீழே.. நடுமுதுகுக்கும் மேலே. கையை வளைத்துக் கொண்டு போய் அதைத் தொட்டால் வலிப்புள்ளி நகர்ந்து கொள்ளும். ஆனாலும் மையமாய் வலித்துக் கொண்டே இருக்கும். டு யு இமாஜின் தட்?
ஆபிஸில் உட்கார்ந்து முதுகைத் தடவிக் கொண்டிருக்கவும் முடியாது. டாக்டர் மம்தாசொன்னது நினைவுக்கு வருகிறது.
'ஸீ திவ்யா.. உன் முதுகைக் கிட்டத்தட்ட ஸ்கேனால் பிளந்தே பார்த்தாச்சு. எவ்ரிதிங் இஸ் நார்மல். கொஞ்சம் postures மேல கவனம் வை. டூ ஸம்யோகா.. டூ ஸம் எக்ஸர்ஸைஸ், டூ ஸம் ஏரோபிக், டூ ஸம்.................'யெஸ் டாக்டர். டூ ஸம் அரோகன்ஸ், டூ ஸம் ப்ரோடெஸ்ட்.. டூ ஸுஸைட், அட்லீஸ்ட் எ மர்டர் - எனக்குள் சொல்லிக்கொண்டேன்.
45 வயது manager, 27 வயதுஅஸோஸியேட் பெண். இவர்களை இணைக்கும் புரொஜெக்ட், ஜாவா ஸ்ரட்ஸ், எக்ஸெம்எல், ஓஏ, ப்ரொஜெக்ட் லைப்சைக்கிள், ரோட்மேப், ரிலீஸ், யுஎடி, இத்யாதி இத்யாதி.. அப்புறம் முகுது வலி வியாதி.
திரும்ப முகுது புள்ளியாய் வலிக்கிறது. அநேகமாக தடியன் வெறிக்கிறான் என்று நினைக்கிறேன். நல்லவேளை டெவலப்மண்ட் ஸ்க்ரீன்தான் அப்போது ஏக்டிவாக இருந்தது. யாகூ மெஸன்ஜர், கூகிள் ரீடர் எல்லாம் டாஸ்க்பாரில் தூங்கிக்கொண்டிருந்தன.
எப்போதும் ஸ்க்ரீனில் புரொஜெக்ட் டெவலப்மண்ட் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும்.. அதைப் பார்த்து மானேஜர் புல்லரித்துப்போகவேண்டும். வேறு ஏதாவது வின்டோக்கள் தெரிந்துவிட்டால் - திவ்யா ஈஸ் நாட் diligent! அடுத்த அப்ரைஸலில் என்னை டிகிரேடு செய்வதற்கு ஏற்றதாக ஒரு நல்ல பாயிண்ட்! யு நோ திவ்யா... ப்ரொடெக்டிவிட்டி ஆல்வேஸ் கம்ஸ் வித்... போன்ற அசட்டு தத்துவங்களைப் பிழிந்து விடுவார்கள். ஸோ பிட்டி!
'திவ்யா.. இன்னும் கொஞ்ச நேரத்தில் டீம் ரிவ்யூ மீட்டிங். கம் ஃபார் இட்.'
டீம் ரிவ்யூ மீட்டிங்? ஷிட்! அனதர் gang bang.. nothing else!!
ஒருத்தி 4 பேர் கேள்விகளுக்கு ஒரு மணிநேரம் பதில் சொல்வதுக்கு பெயர் டீம் ரிவ்யூவா?
மானேஜர்கள் ஆங்கிலம் ஒரு தொடர்ச்சியான Garfield தமாஷ்..!
'திவ்யா.. வென் ஐ கேன் கெட் த அப்டேஷன்?'ஓமைகாட்!
'திவ்யா... கெட் மீ ஆல் த டேட்டாஸ் ஃபர்ஸ்ட்'
தான் எழுத வேண்டிய ரிப்போர்ட்களை நான் எழுதினால் நன்றாயிருக்கும் என்பது தெரியும். தெரிந்தாலும் அதை வெளியே சொல்லுவது இழுக்கல்லவா?
'திவ்யா.. யு ஹேவ் டு ப்ரிப்பேர் திஸ்'ய்யா.. I'm a busy yarn spinning spinster. So, no slot to poke on matrimonials ads.. No slot to poke on my own sl....! No slot.. Nos a lot.!
'யு ஹேவ் டு எக்ஸ்ப்ளைன் திஸ்'
'யு ஹேவ் டு ப்ரஸன்ட் தட்'
'திவ்யா, யு ஹேவ் டு ஸ்பின் ஸம் யார்ன்ஸ்..!'
ஷாதி.காம் அல்லது பாரத்மாட்ரிமோனியல்.காம் இதில் ஏதாவதில் நீங்கள் என் ப்ரொபைலைப் பார்த்து (அதில் வயது 25 என்று இருக்கும்.. அம்மா சொல்லித்தந்த marketing strategy அப்படி!) அதற்கு ரெஸ்பான்ஸ் கொடுத்திருக்கிலாம். உடனடியாக என்னால் பதில் கொடுக்க முடியாது. பிஸி. ஆனால் நிச்சயம் என் 28வது வயதிற்குள் கொடுத்துவிடுவேன். சத்தியம்! டோன்ட் இக்னோர் மீ யார்!
இப்போது முகுது வலிக்கிறது. Static electricityயால் ஈர்க்கப்படும் மயிர்கால்கள் போல முதலில் முதுகுமுடிகள் ஜம்மென்று எழுந்துகொள்ளும். அப்புறம் முகுகின் ஒரு புள்ளியில் ஊசி சொருகினாற் போல் வலிப்பின்ன ஆரம்பி... ம் ஆரம்பித்து விட்டது.
எனக்கு இப்போது தேவை ஒரு சின்ன நடை. இந்த நான்-எர்கோனமிக் ஸீட்டில் இதற்கு மேல் உட்கார முடியாது. சூடு. முட்டை வைத்தால் குஞ்சு பொறிக்கலாம். பக்கத்து க்யூபிகள் வினோத்துக்கு ஒரு ஹாய் சொல்லலாம், காபி வென்டிங் மிஷின்சென்று ஒரு கப்பசினோ எடுக்கலாம், ரெஸ்ட்ரூம் செல்லலாம், அல்லது பச்சை காரிடாரில் ஒரு நடை போகலாம். ஏதோவொன்று என் முதுகு வலி போகவேண்டும்.
எழுந்தேன். ரெஸ்ட்ரூம் பக்கமாக நடந்தேன். கசங்கலான சுரிதார்.. தளர்வான நடை. ஹே.. எனக்கு வயதாகிவிட்டதா?
டாய்லட்டில் இருந்த கண்ணாடியில்வேறொரு திவ்யா தெரிந்தாள். என்னை நானே மீட்க வேண்டும். என் மானேஜரை எதிர்கொள்ள வேண்டும். பதில்களை அழுத்தமாகப் பதியவைக்க வேண்டும். திவ்யா என்பவள் இப்படித்தான் என்று உணரவேண்டும். முதுகு வழி யாரும் ஸ்க்ரீனை வெறிக்கக் கூடாது. முதுகு வலி போக வேண்டும்.
எப்படி?
ரெஸ்ட்ரூம் விட்டு வெளியே வந்தேன். தூரத்தில் கலகலப்பாக ஒரு கூட்டம் சிரித்துக் கொண்டிருந்தது. ஸீரோ ஸைஸ் பெண்கள் இருவர் ஆர்ப்பாட்டமாகச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். எல்லாப் பக்கமும் சந்தோஷம் நிரம்பியிருக்கிறது. நான்தான் என் டிக்கெட்டைத் தொலைத்துவிட்டேன் போல. சொந்தமாக புருஷனை - குலம், கோத்திர எழவுகள் முக்கியமாம் - இண்டர்நெட்டில் தேடிக்கொள்ளுவது.. அதை ஆபிஸில் யாருக்கும் தெரியாமல் பதுக்கிச் செய்வது.. யெஸ் ஐ லாஸ்ட் மை டிக்கெட்!!
தூரத்தில் தெரிந்த ஸ்மோகிங் ஸோனில் கூட்டமாய் புகை ஊதிக்கொண்டிருந்தவர்களில் ஒரு பெண்ணும் இருந்தாள். தனியே புகைத்துக் கொண்டிருந்தாள். ஈஸ் ஷி எ ஃப்ரீக்கி? ஈஸ் ஷி நட்டி? அரோகன்ட்? டபு..?
அவள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.. ஆனால் அவளுக்கு முதுகு வலி இருக்காது என்று தோன்றியது. நேராக நின்று கோடாகப் புகைவிடுகிறாள்.
யூ நோ கய்ஸ்... அந்த நேரத்தில் நானும் புகைக்க ஆரம்பிக்க வேண்டும் என்று தோன்றிவிட்டது. தூரத்தில் இருந்து எனக்கான ஸ்பார்க்கை வழங்கிய அந்த பெண்ணுக்கு என் நன்றிகள்!
சில வாரங்களுக்குப் பிறகு...
நான் திவ்யா. இப்போது புகைக்க ஆரம்பித்து விட்டேன். ஹுர்ர்ரே..! அல்ட்ரா லைட்ஸ். முதலில் அறையில் புகைக்க ஆரம்பித்தேன் (practice) அடுத்த வாரத்திலேயே அறைத்தோழி அறையை காலி செய்து ஓடிவிட்டாள். என்னை ஆபிஸ் ஸ்மோக்கிங் ஸோனில் சிகரெட்டும் கையுமாக பார்த்த மானேஜர் அன்று முழுதும் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. என் மாட்ரிமோனியல் ப்ரொபைலில் ஸ்மோக்கிங் என்ற கேள்விக்கு யோசித்துவிட்டு 'NO' என்று போட்டிருக்கிறேன் (my own marketing strategy?) புதிதாக ZIPPO லைட்டர் வாங்கியிருக்கிறேன். சிகரெட் மணக்க மணக்க மானேஜரிடம் பேசுகிறேன். நோ Maggi ரிப்போர்ட்ஸ். மானேஜர் பேச்சு இப்போது சுருங்கி விட்டது போலிருக்கிறது. அப்டேஷன்..??
முக்கியமாக இப்போது முதுகில் புள்ளியாய் வலிப்பது நின்றுபோய்விட்டது.
டிஸ்கி:
இது ஒரு கார்ப்பரேட் கதை. ஆபிஸில் bullying (browbeat) என்ற உயர்அதிகாரிகளின் ஸைலன்ட் வன்முறையின் - ஸ்கீரினை பின்னாலிருந்து வேவு பார்ப்பது - பாதிப்புகள் பற்றி கேள்வியுற்றதும், என் பெயர் ராமசேஷன் (ஆதவன்) படித்த ஆச்சரியமும் கலந்து இப்படியொரு இடுகை. அத்வைத கலாவின் எழுத்து தாக்கமும் கூட.
இந்த முதுகு வலி ஒரு மருத்துவ உண்மை. உயர்அதிகாரி வேவு பார்த்தலின் கடுமையான பின்-பக்க விளைவு. அதன் மனஅழுத்தம் புகைக்கும் அளவிற்கு தள்ளுகிறது என்பதே இதன் உள்ளீடு. புகைக்கிறவர்கள் கெட்டவர்கள் அல்ல. மற்றபடி புகைத்தல் உடல்நலத்திற்கு தீங்கானது.
47 comments:
எனக்கு முதுகு வலி வந்ததே இல்லை.நெஞ்சு வலி தான்.ஒரு பெண்(இப்படியும் சொல்லலாம்) பார்த்தது என்னை பிளந்து முதுகில் ஓட்டை விழுந்தாக நினைவு.தீர்க்கமான பார்வையை சந்திக்க முடியாமல் கண் அவள் கால்களுக்கு போய் விட்டது.காரணம் அவள் காலில் இருந்தது.அதுவும் எனக்கு முன்பே தெரியும்.
நல்லப் பகிர்வு. வாழ்த்துக்கள்
Male-ஆளர் சரியில்லை என்றால் அது சொர்க்கமே என்றாலும் சும்மா கூட இருக்கமுடியாது என்பது உண்மையான உண்மை ஜெகன்.
நமது எண்ணங்களும், சுற்றுப்புறமும் எப்படியெல்லாம் உடல்நலத்தை பாதிக்கின்றன. புதிய பழக்கங்களை உண்டாக்குகின்றன என்பதை உங்கள் ஸ்டைலில் சொல்லியிருப்பது அழகு.
தல கொஞ்சம் பெருசா இருக்கு..மூடு சரியில்லை அப்புறமா வரேன்..
நீங்கள் வரைந்துள்ள வண்ண ஓவியமும் ரொம்ப அழகு ஜெகன்.
ஜெகன்
இன்னும் செதுக்கி இருக்கலாம்ல
:)
பட் தெ கார்பரேட் ஸ்மெல் இஸ் குட்
கிண்டில எலக்ட்ரிகல் லைசென்சிங் முன்னாடி இருக்குற ஒரு சாஃப்ட்வேர் கம்பெனிக்கு வெளிடில சில பெண்கள் சிகரெட் பிடிப்பாங்க அப்போ அதுக்கு இதுதான் காரணமா ஜெகா?
நல்லா இருக்குங்க ஜெகன். இன்ட்ரஸ்டிங்கா படிக்கிற மாதிரி இருந்தது.
கதையோட உள்ளீடு என்னன்னு சொல்லத் தான் வேணுமா? :0)))) ஒரு வேளை சட்டச் சிக்கல்கள் வரும்னு "குடி குடியைக் கெடுக்கும்"கிற மாதிரி டிஸ்க்கியா? :))
யோவ், பிடித்த பெண்கள்ல திவ்யாவையும் சேர்க்கணும் போலயே?!
I think, I love you Divya!
உண்மையான இலக்கியவாதி நீர்தான்வே!
//புகைக்கிறவர்கள் கெட்டவர்கள் அல்ல//
உண்மை சார் ....
//என் பெயர் ராமசேஷன் (ஆதவன்) படித்த ஆச்சரியமும் கலந்து இப்படியொரு இடுகை. //
இதை நீங்கள் சொல்லியிருக்கவிட்டால், நானே கேட்டிருப்பேன்
அட்டகாசம்
Indha kadhaiya english layae eydhi iruklaam
அடுத்தவர் விஷயத்தில் மூக்கு நுழைக்கும் பழக்கம் இப்போது முதுகு வரை வந்துள்ளது.
நல்ல பகிர்வு
சிகரட் பற்றி மேலும் பல விஷயங்கள் தெரிந்து கொள்ள forces.org செல்லவும்
விஜய்
well written..
//குலம், கோத்திர எழவுகள் முக்கியமாம்//
:)
சாரி மாம்ஸ் கொஞ்சம் லேட்.
இது எந்த வகை இலக்கியம் என்று என்னால் சொல்ல முடியவில்லை (ஏன்னா எனக்கு இலக்கியம் தெரியாது)
ஆனால் மனதை ஏதோ செய்கிறது. இதை விட வலியை யாராலும் அழுத்தமாக சொல்லமுடியாது. அழுத்தம் அதிகம் வலியிலும் எழுத்திலும்.
க்ளாஸ் மாம்ஸ்.
பின்பு வலைச்சரத்தில் எழுதுகிறேன். வரவில்லை என்றால் இங்கு இன்னும் பத்து பின்னூட்டம் போடப்படும் என்பதை பணிவுடன் சொல்லிக்கொள்கிறேன்.
வாவ்! சூப்பர் கார்பரேட் உலகில் நடக்கும் நிகழ்வுகளை அப்படியே கண்முன் கொண்டு வந்து விட்டீர்கள். ஆனா பொண்ணுங்க தம் அடிப்பதுக்கு இதுமட்டும் தான் காரணம்னு சொல்லக்கூடாது. சில நல்ல பொண்ணுங்க prestige maintain பண்றதுக்காகவும், சிலர் boyfriend நியாபகமகவும்'?' அவன கழட்டி விட்டாலும் இத விட மாட்டங்க ##@@# (என் உச்சி மண்டைல கிர்ர் இங்குது)
good flow jegan. disky is not nessassery for fiction. I think. read the shortstory 'pulivettai' in jeyamohan webpage.
மேனேஜர் -man-ager .வித்தியாசமான விளக்கம்
உவாவ்வ்வ்.... என்ன அழகான வி{சி}த்திரம் ப் பாவை
உங்களுக்கொரு சபாஷ் நான் சொல்லியாக வேண்டும்
ஜெகன்!
ஒரு பெண் வேலைக்கு{தொழில்} போனால்... எப்படியான
பல..சிரமங்களுக்கு ஆளாக்கப் படுகிறாள் என்பதனையும்......
இவ் விளைவுகளால் பாதைகள் கூட மாறுகின்றதென்பதையும்
நான் புரிந்து கொள்ள முடிந்தது நன்றி.
புரிந்துணர்வு அதிகம் உங்களுக்கு...அதிலும் பெண்களைப் பற்றி!!
ம்ம்ம்ம..கொடுத்து வைத்தவர்.
கதையும் ஓவியமும் மிகஅழகு.
வாழ்த்துக்கள்..
கதை ரசித்தேன்... பிடித்திருந்தது...
ஓவியம் சிம்ப்ளி சூப்பர்ப்...
இரும்புத்திரையார் அரவிந்த்,
முதுகுக்கு ஜன்னல் வைத்திருப்பது நன்றாயிருக்கிறது :))
அச்சம் தவிர் அரவிந்த்!
*
நன்றி மதுரை சரவணன்
*
அன்பு துபாய்ராஜா,
Male-ஆளர் - ரசிக்கிறேன்!
விட்டு விடுதலையாகி என்ற வெளிக்கு பிரவேசிக்க சிலநேரங்களில் சிகரெட் சாவிகள் தேவைப்படுகின்றன. இது ஒரு மிதமிஞ்சாத கற்பனை :)
-
ஓவியம் பற்றி:
pastels, handmade paper கொண்டு வரைந்தது.
நன்றி!
*
வினூ.. Take care!
*
ஹாய் நேசா,
சிக்-லிட் தரத்தில் ஒரு இடுகை முயற்சி. நன்றி நண்பா!
ப்ரியமுள்ள வசந்த்,
சென்னை அனுபவங்கள் கம்மி. இது பெங்களூர் கதா! எப்போதும் smoking zoneல் தென்படும் ரெகுலர் பெண்கள் இதற்கு ஒரு spark!
*
அன்பு அது சரி,
நன்றி! நாமும் சமூக அக்கறை உள்ளவங்கதான் என்பதற்கான ஒரு சின்ன போர்டு அது :)
அன்பு சங்காண்ணா,
பிடித்த பெண்தான் திவ்யா.
சிகரெட் பிடித்த பெண் :)))))
*
மைதீஸ், நன்றி!
*
அன்பு (சாரு)சங்கர்,
அந்த வரிகளை எழுதும்போது உங்களை நினைத்துக்கொண்டேன் -நன்றி!
*
முத்து,
கார்ப்பரேட் நிறம் வரவேண்டும் என்பதற்காக இப்படி.
*
விஜய்,
நீங்க கொடுத்த Forces.org பிரமாதம். நன்றி!
*
நன்றி லகலகப்ரியா :)
*
மாப்ள அக்பர்,
வலைச்சர ஆசிரியராகியதற்கு வாழ்த்துக்கள். இலக்கியம் தெரியாமல் யதார்த்தமாக ஒரு படைப்பை அணுகுவதே சிறந்தது. நன்றி!
*
அன்பு ப்ரின்ஸ்,
ஹாஹா.. நீங்க சொல்ற புகைக் காரணங்களும் நல்லாயிருக்கு :)) சுருட்டுப் புகைக்கிற பாட்டிகளும், வாங்கிய சரக்கை கடை முன்னாலேயே ராவாக கவிழ்த்துக் கொள்கிற பெண்களும் இங்கு சகஜம்தானே. இதன் காரணங்களும் ஆராயப்படவேண்டியதுதான்.
நன்றி!
அன்பு ஆதிரன்,
புலிவேட்டை இன்னும் பார்க்கலே. நன்றி மகி!
*
நன்றிகள் மின்னல்!
*
வாங்க கலா,
கலா வந்தாலே கலகலப்புதான்.
ரொம்ப புகழாதீங்க. வெட்க வெட்கமா வருது :))
மிக்க நன்றி கலா!
*
அன்பு மலிக்கா,
அன்பிற்கு நன்றி!
*
ஓவியப்பறவை சார்,
மிக்க நன்றி!
(நானும் மெக்கானிக்கல் இன்ஜினியர்தான்!)
*
ஆமா ஜெகன்!
காலால கோலம் போட்டு,நகத்த வேற
கடிச்சுகிட்டு,தலைய வேற.. சாய்சுகிட்டு
ஒரு மாதிரியா நின்னத நானும் நேற்றிரவு
......பாத்தேன்
இவ்வளவு அழகா இப்படியெல்லால் செய்கிறது
யாரென்று பார்க்க...கண்ணைத் திறந்தா!..........
ஓஓஓ..அதைத்தான் வெட்கமென்கிறதா?
இப்ப புரியுது
வலி முதுகிலிருந்து நெஞ்சுக்கு இடம் மாறியது எனக்கு.. கரு, கதையோட்டம் எல்லாம் தளர்வின்றி ஒரே விறுவிறுப்பு..அருமை நண்பரே...
வணக்கம் ஜெகநாதன்!
அருமையான ,சுவாரஸ்யமான கதை! நிகழ்வுகளை வெகு யாதர்த்தமாக செருகி காட்சிகளை கண் முன் விரியச்செய்கின்றீர்கள்!!! மிகவும் ரசித்தேன் நண்பரே!
மிக வித்தியாசமான கதையோட்டம். இந்த மாதிரி கதையை நான் முதல் முறை படிக்கிறேன். ஒரு வித Anxiety & Social insecurity யினால் தான் பல பெண்கள் பாதிக்கப்பட்டு புகை பிடிக்கிறார்கள். அப்படியே ஒரு கார்ப்பரேட் என்வைர்மெண்ட் கண்முன் காட்டி விட்டீர்கள். டாமேஜரை நோக்கிய திவ்யாவின் சர்க்காஸ்டிக் கமெண்ட்ஸ் எல்லம் கனஜோர் ரகம்.
பர பரன்னு ஏதோ ஒரு உணர்வோடயே படிச்சமாதிரி இருந்தது. அதுவேதான் திவ்யாவின் feelings ஆக கூட இருந்திருக்கலாம். சூப்பர் ஜெகன். படமும் அழகான முயற்சியாக இருக்கு. கூந்தல் ரொம்ப அழகா வந்திருக்கு.
ஜகன் கார்பரேட் கலாசார்ம் பற்றி தெரியாத என்னைக் கூட அந்தப் பெண் செய்வது நியாயம் என ஏற்றுக் கொள்ளவத்துவிட்டது உங்கள் எழுத்து..
அருமை இப்படி ஒரு நல்ல கதை சமீபத்தில் படித்த நினைவில்லை
வாழ்த்துக்கள் ...தொடருங்கள்
கலா,
அடடா, ஆண் வெட்கத்தை அழகா எழுதியிருக்கீங்களே? சபாஷ்.
காலாடி கோலம் போடுறதுதான் நம்ம வாடிக்கையாச்சே. காலடியைச் சொன்னேன் :)))
*
மாப்ள அக்பர்,
தாங்கள் விருது பெற்றதுக்கு முதலில் வாழ்த்துக்கள். விருது வழங்கியதற்கும் தங்கள் அன்பிற்கும் மிக்க நன்றிகள்!!
*
இனிய ஆதிரா,
மிக்க நன்றி! ரேக்கி ட்ரீட்மண்ட் பற்றி நீங்கள் எழுதியிருப்பது புது அனுபவமாயிருக்கு. தொடர்ந்து இதுபோன்ற விஷயங்கள், டயட் பற்றியெல்லாம் எழுதுங்கள்!
இனிய கவிதன்,
நன்றி! ஆமா, இன்னுமா இங்கு இருக்கிறீர்கள்? சினிமாக்காரர்கள் யாரும் உங்களைப் பாட்டெழுத கொத்திச் செல்லவில்லையா? :))
அன்பு அநன்யா,
இந்த இடுகைக்கு வந்த பெண்களின் பின்னூட்டங்கள்தான் இதன் சரியான விமர்சனங்களாக எண்ணுகிறேன்.
திவ்யாக்கள் வெறும் புனைவு (fictitious) மட்டும் அல்ல என்பதை உணரமுடிகிறது.
வலி சிலசமயம் ஒரு புதிய பாதைக்கான வழியாக இருக்கிறது.
நன்றி!
*
இனிய விதூஷ்,
நந்தா சொன்ன மருந்தை பயன்படுத்தினீங்களா? நான் தலைக்கு எலுமிச்சம்பழம் தேய்ச்சுக்கலாம்னு இருக்கேன் :)))
தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி!
*
மிக்க நன்றி தேனம்மை!
கார்ப்பரேட் கலாச்சாரம் பற்றி நிறைய எழுதவேண்டும். இந்த காலத்தின் பிரதிநிதியாக அதைப் பதிதல் முக்கியமாகப் படுகிறது. நன்றி!
Hi Jagan,
Well written. Like your sarcasm, keeps it interesting to read.
ஜே....விடுபட்ட பதிவுகள் பார்த்தேன்.ரசித்தேன்.
ஓவியம் உங்கள் கைவண்ணம் அழகு.
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.
Dear Malar Gandhi..
Thank U :))
*
Hi hema, thanks!
கதையும் அதற்கான உங்கள் ஓவியமும் நன்றாக இருந்தது.
நல்ல பகிர்வு சகோ!! நீங்கள் வரைந்த ஒவியமும் அழகாயிருக்கு...
wow what a sexy painting makes me panting :)
padam azhaga irukkuthu!
நன்றி இளமுருகன்..!
அன்பு சஷிகா.. நன்றி!
நன்றி நந்தா :))
நன்றி இரசிகை மேடம்!
முதல் வார்த்தை தொடங்கி கடைசி வார்த்தை வரை சரசரவென இழுத்து செல்லும் எழுத்து நடை. முதுகு வலிக்கு இப்படி ஒரு விளக்கமா?
சித்திரம் அழகாக இருக்கிறது.
சிகரெட் கதையும்.
ரொம்பவே இண்டரஸ்டிங்...
Beautifully written!
ரொம்பவே அருமையான புனைவு ஜெகன் :)
டிஸ்கி மாத்திரம் எதற்கு என்று யோசித்தேன்....
கார்ப்பரேட் ஃப்ளேவர் கச்சிதமாக ஓர் ஆஃபீஸ் அட்மாஸ்பியரைக் க்யூபிகிளோடு வழங்கியது...
திவ்யாவின் சிகரெட் ஃப்ளேவரில் ஹரி சாடு கொஞ்சம் சாதுவாகக் கரைந்தொடுங்குவது சைக்கலாஜிக்கல் டச்... உண்மைதான்!!
எங்கள் ஆஃபிஸ் ஸ்மோக்கிங் ஸோனிலும் பார்த்து மறந்த முகங்களில் திவ்யா எத்தனை பேர் என்று யோசித்துப் பார்க்கிறேன்... :)
Post a Comment