சொம்பு: இதுதான் வலைப்பதிவு பேரு. பஞ்சாயத்து பண்ணிவைக்கிறதுதான் மெயின் பிஸினஸ். (சைபர்-க்ரைம் டிபார்ட்மெண்ட் இதற்கு ஒரு தூண்டுதல் என்று வதந்தி) நிறுவப்போறவர் எட்டுபட்டிக்கும் நாட்டாமைன்னு பேசிக்கறாங்க. அடிச்சு ஓட்றா சம்முவம் என்று அடிக்கடி வண்டி மாடுகளை ரொம்ப சோதிக்கின்றதாகச் சொல்லி, இப்ப ப்ளூ க்ராஸ் அரெஸ்ட் பண்ணீட்டாங்களாம்! சொம்புநக்கிகளுக்கு ஏற்ற வலைப்பதிவு.
கண்ணாம்பா.காம்: ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு, இடுகை எழுதும்போதே கீபோர்ட் கண்ணீரில் நனைத்துவிடுகிறாராம். பின்னூட்டம் பாத்து போடவும். இல்லையென்றால், உங்கள் கம்ப்யூட்டரே வெடித்து சிதறட்டும் என்று வைரஸ் சாபம் விட்டுவிடுவாராம்
மைனர் குஞ்சு: அஜால்குஜால் இடுகை எழுதும் போதே எக்ஸ்யூஸ்மீ, தப்பா நெனச்சுக்க படாது, யார் மனசயும் புண்படுத்தவில்லை என்று சொல்லி சொல்லியே மேட்டரை முடித்துவிடுபவராம். ஏற்கனவே வெவ்வேறு பெயர்களில் உலாவுகிற மைனர்குஞ்சுகள் இந்த குழுவலைப்பதிவில் இருப்பார்களாம்.
பாண்டிமடம்: இது ஒரு முக்கியமான வலைப்பதிவு. அனேகமா வலைப்பதிவர் என்று ஆகிவிட்ட யாரும் இங்கே ஒரு விஸிட் அடித்தே ஆக வேண்டும்; யாரும் எஸ்ஸாக முடியாது என்று சவால் விடுகின்றனர்! போய்தான் பாப்போமே?
ஆபுவே: சீரியஸாகப் போய் கொண்டிருக்கும் அக்கப்போர் விவாதங்கள், கும்மியடி, குழாயடிச் சண்டைகளை முடித்து வைத்துத் தரப்படும் என்று சொல்லுகிறார்கள். நம் பதிவுலகத்து அவசியம் என்றே தோன்றுகிறது. ஆபுவே..? அதாங்க.. ஆணியே புடுங்க வேண்டாமாம்!
கவிப்பின்லாடன்: கவியரசு, கவிப்பேரரசு, வெறும் பேரரசு வரிசையில் தானும் வருவேன் என்று ஒற்றைக் காலில் நிற்கிறார். இவரது கவிதைகள் நெய்க்குண்டா, மாறிமாறிசொறி, மசநாய்கடி (ருவாண்டா நாட்டில் 7 மாதத்திற்கு ஒருமுறை பிரசுரம்) போன்ற இதழ்களில் வெளி வந்திருக்கிறதாம். சாம்பிளுக்கு ஒரு கவிதை.. வேணாம் பயந்துருவீங்க...
மூத்திரசந்து: வெளிப்படையான ஆக்கங்களுக்கு இங்கே நம்பி விஸிட் அடிக்கலாம். அர்ஜென்ட்டா ஒரு மொக்கை வேணுங்கிறவங்க எப்ப வேண்டுமானாலும் இங்கே போயி ஆசுவாசப்பட்டுக் கொள்ளலாம். இந்த வலைப்பதிவுல பின்னூட்டம் மட்டறுக்கப்படுகிறதாம். ஒன்லி முன்னூட்டம்தானாம்.
இதுமட்டுமில்லாம,
தர்மக்குத்து, எங்கோமணம் போன்ற திரட்டிகளும் புதுசாய் வெளிவரயிருப்பாதாய் நம்பத்தகுந்த முக்கோணங்கள் முனகுகின்றன.
தர்மக்குத்துவின் சிறப்பம்சம், அவர்களே ஸ்பெஷல் ஸ்குவாடு வைத்து ஓட்டுக்களாய் குத்து குத்தென்று குத்தித் தள்ளி விடுவார்களாம். உங்கள் வலைப்பதிவில் ஒரு விளம்பரம், ஸ்பெஷல் ஸ்குவாட் டீ செலவுக்கு பணம் இவை மட்டும் போதுமாம்.
எங்கோமணம், சிறந்த வலைப்பதிவர்களை அடையாளம் காணும் முயற்சியாம். எப்படிப்பட்ட மொக்கைப் பதிவென்றாலும் தம்கட்டி படித்துவிடுவார்களாம் இதன் தேர்வுக்குழு உறுப்பினர்கள்.
சரி இதோட (இப்போதைக்கு) நிப்பாட்டிக்குவோம்..
பி.கு.:
1. காலடியின் தீவிர அதி தீவிர வாசகக்கண்மணிகளில் ஒருவரான சம்முவம் விரும்பிக் கேட்டதால இப்படியொரு வலைப்பதிவு. இது சம்முவத்துக்கே சமர்ப்பணம்!
2. இந்த இடுகையை காமடியாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டியது. அன்புடன், மைனர்குஞ்சு
37 comments:
செம காமெடி அண்ணே..!
ஹி ஹி .. :)
:)
ஹா ஹா ஹா.. அசத்தல்!
காலங்கார்த்தால உங்க வேலைய ஆரம்பிச்சுட்டீங்களா :-))
தனித்தனியா இதுதான் சூப்பர்ன்னு சொல்ல முடியலை தலைவா. எல்லாமே ஏ-கிளாஸ்.. அமர்க்களப்படுத்தியிருக்கீங்க...
//2. இந்த இடுகையை காமடியாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டியது. அன்புடன், மைனர்குஞ்சு//
ஆஹா.. நீங்க மைனர் குஞ்சு குரூப்ல ஒரு ஆளா :-))))))))
:)
நல்லாதான் இருக்கு !
இந்தப் பதிவுகளுக்கெல்லாம் ஓனர் யாரு? நீங்களா? கலக்குறீங்க தலைவரே!
இவண்
கா.க.த.
கலக்கல்ங்க.. :)
:)))
:))))))
மைனர் குஞ்ச தான் ஸ்ரீதர் சுட்டுபுட்டாரே!
என்ன அநியாயம் இது? நான் ’காப்பி ரைட்’ வாங்கி விடலாமென்று யோசித்து வைத்த எல்லாப் பெயர்களையும் அம்பலப்படுத்தி என்னை ’அம்போ’வென்று ஆக்கி விட்டீர்களே!:-)))
:))))) சூப்பரு ;)
நல்ல காமெடிங்க...
எது எப்படியோ,
பாம்பின் கால் பாம்பறியும்....
மாம்ஸே...
சில வலைப்பதிவு டைட்டில எடுத்துட்டுப் பாத்தா, உங்களப் பத்தி சொல்ற மாதிரியே இருக்கு.
---
ஆங்.... கம்பெனி ரகசியத்த வெளிய சொல்லிட்டனோ!
:-)
ஏற்கெனவே இப்படியான வலைப்பதிவு வந்துடுச்சான்னு கூகிளை கேட்டுட்டு வரேன் :-)
ஜெகா வழக்கம் போல் உங்க brand!
ஜெகநாதன் , புதுசா வலைப்பதிவு !!
புதுசா காமெடி !!
கலக்குறீங்க போங்க
//மைனர் குஞ்சு: அஜால்குஜால் இடுகை எழுதும் போதே எக்ஸ்யூஸ்மீ, தப்பா நெனச்சுக்க படாது, யார் மனசயும் புண்படுத்தவில்லை என்று சொல்லி சொல்லியே மேட்டரை முடித்துவிடுபவராம். ஏற்கனவே வெவ்வேறு பெயர்களில் உலாவுகிற மைனர்குஞ்சுகள் இந்த குழுவலைப்பதிவில் இருப்பார்களாம்.//
//2. இந்த இடுகையை காமடியாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டியது. அன்புடன், மைனர்குஞ்சு //
இது ரெண்டுக்கும் ஏதோ தொடர்பிருக்கே.
நடத்துங்க. நல்லா நடத்துங்க.
காமெடி கிங் மைனர்குஞ்சு வாழ்க.
இன்னாபா இது? யார் யாரை மன்சில வச்சிகினு, இப்ப்டீக்கா எழ்தினுகிற? அப்ப்டீன்னு தனியா எனக்கு ஒரு மெயில போடு மாமே!
ஆஹ.................,
நல்லாயிருக்கு...
நம்மளும் ஒரு துண்ட போட்டு வச்சிடுவோம். ;)
நாளபின்ன வேகன்சி இல்லைன்னு போர்டு போட்டுட்டாங்கன்னா?
ஜகன்,
நான் நிறைய கற்றுக் கொள்ளவேண்டும் என்று சிலரைப் பார்க்கிற போது நினைப்பேன். நீங்கள் அந்த சிலர் பட்டியலில் இடம் பெற்று விட்டீர்கள்.
ஹ்யூமர் எப்போதுமே சிரஞ்சீவி(நடிகர் இல்லை).
உங்களுக்கு அனந்தமான கேரியர் இருக்கிறது!
http://kgjawarlal.wordpress.com
என்ன என்ன இது முடியலை comedyயா போடுங்கனா இப்படி மொக்கையா போட்டு கொல்லரீங்கலே இன்னும் புதுச எதிர் பாக்கிரேன்
டக்ளஸ்...
இராம்/Raam
சின்ன அம்மிணி
சென்ஷி கூறியது... //ஆஹா.. நீங்க மைனர் குஞ்சு குரூப்ல ஒரு ஆளா :-))))))))// பிரிச்சுப் பேசறீகளேபெரியண்ணே!
கோவி.கண்ணன்
சங்கா //இவண் கா.க.த.// ண்ணா.. அப்படின்னா.. காணாதவர்களை கண்டிபிடித்துத் தரப்படும்ன்னுதானே அர்த்தம்??
நான் ஆதவன்
மின்னுது மின்னல்
வால்பையன் கூறியது... //மைனர் குஞ்ச தான் ஸ்ரீதர் சுட்டுபுட்டாரே!// இதில இருந்து பெறப்படும் நீத(கள்): மைனர்குஞ்சுக்கு சாவே கிடையாது.. அல்லது ஸ்ரீதருக்குச் சுடவே தெரியாது!
தமிழன் வேணு
கோபிநாத்
கீழை ராஸா
மாப்ளே... எவனோ ஒருவன்
யாசவி
ஜெஸிலா
பா.ராஜாராம்
மாம்ஸ் Starjan ( ஸ்டார்ஜன் )
அக்பர் கூறியது //..மைனர்குஞ்சு..// டீக்கடை பதிவர் சந்திப்புல... நீங்க அடிச்ச கூத்து மறந்து போச்சா! நீங்களும் மை.குதான் மாப்ள!
முரளிகுமார் பத்மநாபன்
SUREஷ் (பழனியிலிருந்து)
பீர் | Peer
Jawarlal
நித்யா
அனைவருக்கும் நன்றிகள்!
எல்லோருமே மை.கு.ன்னா யாருதான்பா நாட்டாம போஸ்ட்டுக்கு அடி போடுறா! அதையும் விலாவரியா அடுத்த போஸ்ட்ல ஏத்துங்க தலைவா ;)
அகா..!
கமெண்டுகள் குவிகிறது..
என் கமெண்டுகள் எழுதத்தான் லேட் ஆகிடுச்சு..
கமெண்டு எழுத கம்பியூட்டர் சென்டர் வர நேரம் ஆகிடுச்சு அவ்வளவுதான்.
கம்பியூட்டர் கம்பியூட்டர்தான்.
செல்ஃபோனெல்லாம் அடுத்தபட்சம்தான்......
கமெண்டு எழுத கம்பியூட்டர் சென்டர் வர நேரம் ஆகிடுச்சு அவ்வளவுதான்.
கம்பியூட்டர் கம்பியூட்டர்தான்.
செல்ஃபோனெல்லாம் அடுத்தபட்சம்தான்......
கமெண்டு எழுத கம்பியூட்டர் சென்டர் வர நேரம் ஆகிடுச்சு அவ்வளவுதான்.
கம்பியூட்டர் கம்பியூட்டர்தான்.
செல்ஃபோனெல்லாம் அடுத்தபட்சம்தான்......
கமெண்டு எழுத கம்பியூட்டர் சென்டர் வர நேரம் ஆகிடுச்சு அவ்வளவுதான்.
கம்பியூட்டர் கம்பியூட்டர்தான்.
செல்ஃபோனெல்லாம் அடுத்தபட்சம்தான்......
கமெண்டுகளை பார்த்தாலே அதிருதில்ல...
காலடியின் தீவிர அதிதீவிர ரசிகனின் வேண்டுகோளை ஏற்று ஒரு இடுகை போட்டதற்கு என் நன்றிகள்.
ஜெகநாதன் போன்ற பெரிய வலைப்பதிவில் ஒரு புதிய பொடியனின் வேண்டுகோளை ஏற்று, இடுகை எழுத நான் தான் காரணம் என்பதை பகிரங்கமாக வெளியிட்டதற்கு நன்றிகள்!!!
எனக்காக எழுதப்பட்டதாக நினைப்பதை விட, நீங்கள் இவ்வாறு எழுதினால் தான் நன்றாக இருக்குமென்று என் கருத்தை கூறினேன் அவ்வளவுதான்.
இப்பொழுது பார்த்தீர்களா எவ்வளவு கமெண்டுகள் குவிந்துள்ளன என்று. லேட்டாக பின்னூட்டமிடுவதற்கு வருந்துகிறேன்.
லேட்டா பின்னூட்டமிட்டாலும் "குலோபல்" கம்பியூட்டர் சென்டர் வந்து பின்னூட்டம் போடுவோம்ல..
இப்படிக்கு
சம்முவம்
தப்பா எழுதி இருந்தா ம(மொ)ன்னச்சிக்கிட்டுபோங்க...
கலக்கல். இனி வலைப்பதிவுக்கு பெயர் வைக்கிற என்றா உங்ககிட்ட வரலாம்.
எனது வலைப்பதிவுக்கு அழைக்கப்படுகின்றீர்கள்...
http://shanthru.blogspot.com/2009/08/blog-post_5688.ஹ்த்ம்ல்
எங்கேங்க.. அதனுடைய லிங்க் இல்ல?
எப்பிடி இப்பிடியெல்லாம்
சிரிக்க காலடிக்கு போங்கன்னு சொல்றதா
எங்க இருந்துதான் இந்த மாதிரி தலைப்பு எல்லாம் பிடிபீன்களோ
அருமைன்னே
உண்மையிலே சில பின்னோட்டங்கள் அடிக்கிற நக்கலும் அதுக்கு உங்க பதிலும் கலக்குங்க
அன்பு சம்முவம், லேட்டா வந்தாலும் அல்வாவோடதான் வந்திருக்கீங்க! ரொம்ப நன்றி!
அன்பு சந்ரு, ரொம்ப நன்றி! உங்களைப் போல் தீவிரமாக எழுதவும் ஆசைப்படுகிறேன்.
கவிநண்பன் நேசா, மிக்க நன்றி!
வால்பையன் கூறியது...
//மைனர் குஞ்ச தான் ஸ்ரீதர் சுட்டுபுட்டாரே!//
இதில இருந்து பெறப்படும் நீதி(கள்): மைனர்குஞ்சுக்கு சாவே கிடையாது.. அல்லது ஸ்ரீதருக்குச் சுடவே தெரியாது!
இப்படி இந்தப் பதிவுல நீங்க அடிச்ச சிக்சர் தான், எங்க வால்பையனுக்குச் சிறந்த சரவெடிப் பதிவர் விருதை வழங்கி கௌரவிக்க வேண்டும் என்பதற்குத் தூண்டுகோலாக இருந்தது.
உங்களுக்கும் வேண்டுமானால், "நல்லாவே உசுப்பேத்தி விடுகிற பதிவர் விருது" வழங்க சிபாரிசு செய்து விடலாம்!
Post a Comment