Sunday, November 22, 2009

ஒன்றரைக் கண் ரைபிள்!


பெரிய ​பெரிய கட்டிடங்கள்... பளபளக்கிற கண்ணாடித் திரை.. கசங்கலாக ​தெரிகிற நம் முகங்கள் கூட அதில் அட்டகாசமாகத்தான் இருக்கின்றன.


சுமார் 100 ஸாப்ட்​வேர் கம்​பெனிகள், அறிவு ​சொட்டும் முகத்​தோடும் - காற்றில் பறக்கிற மிடிகளுமாய் திரிகிற ​தேவதைகள், சாதாரணமாய் ​தெறிக்கிற ஐ​ரோப்பிய ​​செந்​தேகங்கள், இவிங்க இங்க ஏன் என்று எனக்குள் துடிக்கிற சந்​தேகங்கள், ​ஸ்​மோக்கிங் ஸ்​​னோலில் கேரண்டியாக எப்​போதும் கண்ணில் சிக்கும் ஒன்றிரண்டு chickகள் - நான் அவரசத்துக்கு தீ கடன் வாங்கி தம் பற்றிக்​கொண்ட தீத்​தேவதை பற்றி இன்​னொரு சமயம் ​​சொல்கி​றேன்.. ப்ளீஸ்!


இது எந்த இடம்? ஐடிபிஎல்.. ஒயிட்ஃபீல்டு ​ரோடு.. ​பெண்களூரு!


ஐடிபிஎல்லில் நான் இருப்பது ​நேவிக்​கேட்டர் பிளாக்கு! ஒண்ணுக்கு இருப்பதும் அந்த பிளாக்கிலுள்ள கிரவுண்ட் ப்​ளோர் ​ரெஸ்ட் ரூமில்தான்.. கிட்டத்தட்ட க்ரவுண்ட் ப்​ளோரிலுள்ள எல்லாக் கம்​பெனிகளுக்கும் ​பொதுவான (ப்ளஸ் ​செக்யூரிட்டிஸ், ட்ரைவர்கள்) கழிப்ப​றை. எப்​போதும் சன்னமான க​ரோக்கீ ஒலித்துக் ​கொண்டிருக்கும் மினுமினு இடம்.. அந்த இ​சை​யைக் ​கேட்கும் ​போது என் மனசு.. "ஏஸி வச்ச பாத்ரூமில் என்ன வரும் ​போங்க" என்று ​மெட்டுக்குப் பாட்​டெழுதிக் ​கொள்கிற​து.


எப்​போதும் ​போல்தான் அன்றும் ஒண்ணுக்கடிக்கப் ​போ​னேன். யூரினலில் பீச்சி விட்டு வந்து வாஷ்​பேஷனில் ​கைக்கழுவி விட்டு நிமிரும் ​போது..


"சார்.. அவரு உங்களுக்குத் ​தெரிஞ்சவரா?" என்று ஒரு கட்​டைக் குரல் - கன்னடத்தில்.


யா​ரென்று பார்த்தால்.. ​ரெஸ்ட் ரூ​மைக் கிளீனாக ​வைத்துக் ​கொள்ளப் பணிக்கப் பட்ட க்ளீனர்...ஒரு நா​ளைக்கு 10 மணி​நேரம் அந்த ​டாய்லட் + யூரினல்கள் நிரம்பிய ​இடத்​தை தன் ஆபிஸாகக் ​கொண்டு ​ரெஸ்ட்​​லெஸ்ஸாக இருப்பவர். ​பேர் ​தெரியாது. அப்​போது என்று நான் ஒருவன் மட்டும்தான் அங்கு.


"யாரு?" என்​றேன்


"இதுக்கு முந்தி வந்திட்டுப் ​போனாருல்ல.. ​கொஞ்சம் குண்டா.."


இந்த மாதிரியான விசாரிப்புகள், ​​பேட்டிகள் எனக்கு ​கொஞ்சம் புதுசு.. ​இருந்தும் கவனமாக அவருடன் ​பேச முற்பட்​டேன்.. ஆப்டர் ஆல் அவ​ரைவிட 2 மணி​நேரம் கம்மியாக ​வே​லைப் பாக்கிற ஆளுதா​னே நானு.


"குட்​டையா இருந்தவரா?"


"ஆமா.. குட்​டையா.. குண்டா"


"சிவப்பா.. வழு​க்​கையாவும் இருந்ததா?"


இப்​போது அவருக்கு உற்சாகம் பற்றிக் ​கொண்டு விட்டது.. கண்களில் திருப்தி ​​கொப்பளிக்க..


"ஆமா சார்.. அவருதான்.. அவர்கிட்ட ​சொல்லி ​வைங்க"


​​​​​ஙே என்று முழித்துக் ​கொண்​டே,


"என்னன்னு?"


"சார்.. அவரு க​ரெக்ட்டா ஒண்ணுக்கு அடிக்க மாட்​டேங்கிறாரு.."


​ஙே.. ஙீ.. ​ஙெள.. என்று எல்லாமாக முழிக்க ​​வேண்டியதாயிற்று..


"என்னது????"


"ஆமா சார்.. அவரு க​ரெக்ட்டா ​பேசின்ல விட மாட்​டேங்குறாரு"


".."


"ஒண்ணு சுவத்தில அடிச்சிடறாரு.. இல்லீனா.. ​கீ​ழே த​​ரையில அடிச்சி விட்டுடறாரு"


"......??"


"அவரு வந்துட்டுப் ​போன பின்னாடி.. நான் ஒவ்​வொரு தட​வையும் அ​தை க்ளீன் பண்ண​வேண்டியதா இருக்கு சார்.."


"யாரு சிவப்பா... குண்டா.. குள்ளமா.. வழுக்​கையா இருந்தவரா?"


"அட ஆமா சார்.. அவ​​ரேதான்... எப்ப வந்தாலும் இப்படி​யே சிந்திட்டுப் ​போயிடறாரு.. எனக்குதான் ​வே​லை"


"...ம்...?"


"நீங்க​ளே இங்க வந்து பாருங்க​ளேன்..." என்று அந்த பாதிக்கப்பட்ட யூரின​லை ​நோக்கி சுட்டிக்காட்டிவிட்டு,


"அவருகிட்ட ​கொஞ்சம் ​சொல்லிடுங்க சார்.. இந்த மாதிரியெல்லாம் ஆகுதுன்னு.. "


"நானா??"


"ஆமா சார்.. இப்ப நீங்​கெல்லாம் வர்றீங்க.. எவ்வளவு டீஸன்டா வந்துட்டு, இருந்துட்டுப் ​போறீங்க.. நீங்க ​ரொம்ப நீட்டு சார்.."


எதுவும் ​சொல்ல முடியாமல் சிரித்து ​வைத்​தேன்.


"அவருகிட்ட ​சொல்லி ​வைங்க சார்"


".... அது முடியா​தே..?"


"ஏன் சார்...??"


"அவருதான் என் மா​னேஜர்"


என்று ஜிப்​பைப் ​இழுத்து விட்டுக் ​கொண்டு ​வெளி​யேறி​னேன்.

Monday, November 16, 2009

சனி - 2012 - பான்டலூன் - மீந்த குவாட்டர்!

அன்பு ​ரசிகர்க​ளே.. எல்லாரும் பிளாக் எழுத​றோம்.. என்​னென்ன​வோ எழுத​றோம். கவி​தை, க​தை, விமர்சனம், ​மொக்​கை, தொடர்பதிவு, கும்மி, ​சொறிதல், எலோக்கி​யோம், இங்கிபீச்சு பதிவு, ​பில்​கேட்ஸ் பதிவு, ​சுய முன்​னேற்றம் இப்படி.. இதிலும் ​ஸேட்டிஸ்​​பை ஆகாத சில நண்பர்கள் கலக்கலா சில ​மேட்டர்க​ளை பிச்சுப் ​போட்டு கல​வைப் பதிவுன்னும் கல்லா கட்டறாங்க!

அதுவும் நல்லாத்தான்​ இருக்கு​வோய்! ​ஆக​வே, காலடியும் ஒரு மிக்ஸிங் ​போடுகிறது...!


சனி:


ஆமாப்பா ஆமா... இன்னிக்கு சனிதான். ஆபிஸு லீவு. ​ரெகுலரா சாட்டிங்கு வர்ற ப்ரண்டுக்கு இது ​தெரியும்.. ​ஸோ, வெள்ளிக்கிழமை இரவு ஆரம்பிச்ச கூகிள் அரட்​டை சனிக்கிழ​மை கா​லை 4 மணி வ​ரைக்கும் சந்​தோஷமா நீடித்தது! நான் ​வேறு


அவசரப்பட்டு ​வெள்ளியன்​றே 2012 படத்துக்கான டிக்​கெட்​டை முன்​பே புக்கிவிட்டிருந்​​தேன். சனி கா​லை 10 மணிக்கு ஸிக்மா

மால் - ஃபன் சினிமாஸ். ​​​கொலீக்கைத் து​ணைக்குக் கூப்பிட்​டேன்: ஒஸ்தாரா என்று. அவ​ளோ ஸாரி மச்சான் என்று எஸ்கேப்பிவிட்டாள்! அதுவும் நல்லதுக்குதான்!!


கா​லையில் 7 மணிக்கு அலாரம ​வைத்துவிட்டு சரியாக 9 மணிக்​கெல்லாம் எழுந்துவிட்​டேன். கன்னிங்ஹாம் ​ரோட்டில் உள்ள ஸிக்மா மால் நம்ம வீட்டிலிருந்து 10 நிமிடந்தான்... இருந்தாலும் அதுக்கு முன்னாடி இன்​னொரு கட​மை இருக்​கே!

சனி விரதம்! பக்கத்திலுள்ள ஈஸ்வரன் ​கோயிலுக்கு ​சென்று, அங்குள்ள நவக்கிரகங்களுக்கு எள் விளக்கு ஏற்றி 3 சுற்று சுற்றி சாமி கும்பிட்டு விட்டுதான் அடுத்த​ வே​லை​!


2012:


வேகமாக குளித்து விட்டு (​லேசாக மப்பு ​வேறு - ​​நேற்று அடிச்ச சரக்கின் வாசமும்... அடப்பாவி ​நேத்தும்(!) மப்புலதான் என்கூட சாட் பண்ணிக்கிட்டிருந்தியா, ​கொ​லைகாரா, குடிகாரா என்று திட்டும் ப்ரண்ட்டுக்கு, ஐம் ஸாரி!) கிளம்பி​னேன்... ​சனீஸ்வரைச் சுற்றிவிட்டு ​பைக்​கை கிளப்பி​​னேன்.. 9:50 AM.


சிவானந்தா சர்க்கிள் - ​ரேஸ் ​கோர்ஸ் - கன்னிங்ஹாம் ​ரோடு - ஸிக்மா மால் - பார்க்கிங் - டீஸ்களில் திரியும் ​தேவ​தைகள் - டிக்​கெட் கவுண்டர் - பாக்ஸ் ஆபிஸுக்கு வழி​தேடும் அவரசக்காரர்கள் - ஸ்க்ரீன் நம்பர் 3 - I3 - டார்ச் ​வெளிச்சம் தடவிய வ​ளைவுகள் என்று சீட்டில் அமரும் ​போது 2012 படம் ஆரம்பித்து 5 நிமிடங்கள் ஆகியிருக்கலாம்.


பக்கத்தில் ஆம்பி​ளை!


படத்​தைப் பத்தி விமர்சனம் பண்ணமாட்​​டேன் - பயப்படாதீங்க! இந்​நேரம் நம்ம ​டைகர் பதிவர்கள் வரிஞ்சு கட்டிக்கிட்டு 2012ஐ அக்கு ​வேறு ஆணி​வேறாக பிரிச்சி தள்ளியிருப்பாங்க - ​போய் பாத்துக்​கோங்க.


தி​யேட்ட​ரை விட்டுக் கிளம்பி​னேன். 2வது ப்​ளோரில் குழந்​தைகள், அம்மாக்கள் கூட்டம் காரிடாரில் எல்லாம் நிரம்பி வழிந்தது.


குழந்​தைகள் த​ரையில் அமர்ந்து படங்களாக வ​​ரைந்து தள்ளிக் ​கொண்டிருந்தார்கள். ​கொஞ்சம் ​நேரம் படங்க​ளையும் அம்மாக்களையும் ​வேடிக்​கை பார்த்து விட்டு கிளம்பி​னேன். பசி ​வேறு!

பான்டலூன்ஸ்:

ஒன்றாம் ப்​ளோரில் இருந்த பான்டலூன்ஸ் என்​னை வா வா ​வென்றது. மணி 1:40 PM. பசிகிடக்கிறது என்று க​டைக்குள் நுழைந்​தேன்.

அவர்கள் அனுப்புகிற ​மெயில்களும், ​போனமு​றை ​செய்த பர்​ஸேஸுக்கு ​கொடுத்த க்ரீன் ​​மெம்பர்ஷிப் கார்டும் கூட காரணமாயிருக்கலாம். காரணங்கள் எதுவுமின்றி கவர்ச்சிக்காக மட்டும் ஷாப்பிங் ​செய்கிற ஜீ​னை நமக்குள் விதைத்த சாமார்த்தியத்துக்கு விளம்பரதாரர்க​ளை எவ்வளவு ​வேண்டுமானாலும் பாராட்டலாம்!


உள்​ளே நு​ழைந்து ட்ராக் பாண்ட்ஸ், டீஸ், ​கார்​கோஸ், ரோலர் ஸ்லீவ்ஸ் (இதுதான் இப்ப என்னு​​டைய ​ஃ​பேவரிட் - 6 சர்ட்ஸ் இருக்கு), இன்னர்​வேர், என்று ​கொத்தாக அள்ளிக்​கொண்டு ​கெளண்டரில் வந்து ​மெம்பர்ஷிப் கார்டையும், 200 ரூபாய் ​வொர்த்துள்ள கூப்ப​னையும் நீட்டி​னேன். அந்த கன்னடத்துக் கிளி பார்த்துவிட்டு,

"கூப்பன் எக்ஸ்​பைரியாடிச்​சே" என்றாள்

"ம், பரவாஉண்டு.. ​மெம்பர்ஷிப் கார்டுக்கு எதுவும் டிஸ்​கெளன்ட் உண்டா?" என்று பல்லிளித்​தேன்.

"பாக்கி​றேன்......... ஸார்.. டிஸ்​கெளண்ட் இருக்கு.. ஆனா இப்ப இல்ல ​அடுத்த முறை நீங்க ஷாப்பிங் பண்ணும் ​போது 10% வரைக்கும்..." என்று வரும்ம்ம்ம்...ஆனா வராது ராகத்தில் இழுத்தாள்.

"இல்லி​யே.. இந்த மு​றை பர்​ஸேஸ் பண்ணுனா 5% ஆபர்ன்னு எஸ்எம்எஸ், ஈமெயில், பீ​மேல் எல்லாம் வந்துச்​சே???"

"ஓ! அதுவா.. அது ​வெள்ளிக்கிழ​மை ஷாப்பிங் பண்ணுனா மட்டும்தான்"

"இன்னிக்கு கி​டையாதா? என்ன ஒரு நாள்தா​னே தள்ளிப்​போயிருக்கு? எனக்கு ​கொடுங்க 5% தள்ளுபடி" என்று அடம் பண்ணி​னேன்.

"இல்​லே.. அது ​வெள்ளி மட்டும்தான்"

"
அப்ப நான் ​வேணா அடுத்த ​வெள்ளிக்கிழ​மை​யே வந்து வாங்கிக்க​ட்டுமா? இப்ப அந்த
தள்ளுபடி​யை ​கொடுக்கிறதில என்ன தப்பு இருக்கு?" என்​றேன் விடாப்பிடியாய்
அவளும் ​மா​னேஜரிடம் கேட்டுப் பார்த்துவிட்டு வந்து ​கைவிரித்து விட்டாள்.
"
சரி.. அப்ப நான் ஃப்​ரை​டே​வே வந்து வாங்கிக்கே​றேன் - முடிஞ்சா" என்று கிம்பி​னேன்
"ஏன்...?"
"
வெட்டியா 5% இழக்கணுமா என்ன? இந்த துணிமணிக இல்லாம வர்ற ​வெள்ளிகிழ​மை வ​ரைக்கும் உயிர் வாழலாம்னு
நினைக்கி​​றேன்"
TGI Fridays கூட்டமா நீங்க என்று ​​கேட்கத்​தோன்றியது. பசி வயிற்றைக் கிள்ளியது. இந்த நவீன மூ​ளைச்சல​​வைக் கூடாரத்தில் என்று தப்பித்தால் ​போதும் என்று ​வெளியில் வி​ரைந்​தேன்.

மீந்த குவாட்டர்:


​நேற்றுப் புதிதாய் ​டேஸ்ட் பாக்கலாம் என்று வாங்கிய Bols பிராண்டி நன்னா​வே இல்​லே ​போங்​கோ. அதுவும் ஹாப் பாட்டில் வாங்கி​னேன். டேஸ்ட் பாக்கிறவனுக்கு எதுக்குடா ஹாப் பாட்டில் இடியட் என்கிறது மப்புக்கு பின்னான ஞானம்!!


வழக்கமாக சரக்கு எடுக்கிற ஸ்வஸ்திக் சர்க்கிள் பாரில் அந்த பிராண்டி ஃபுல் பாட்டில்ல இருந்து, ஹாப் பாட்டில் சரக்​கை 2 குவாட்டர் பாட்டில்ல ஊத்திக் ​கொடுத்தாங்க.


​ஸோ, அதி​லே​யே 15ml ச்சீட்டிங்! புரியாத, பூஸ்ட் குடிக்கிறவங்க ஹாப் பாட்டிலையும் குவாட்டர் பாட்டி​லையும் வாங்கி படித்துப் பார்க்கவும்.


​வெள்ளியிரவு ஒரு குவாட்டர் + கட்டிங்.. ​ஸோ சனியிரவு என்ன குடித்திருப்பேன்.... ? குவாட்டர் - கட்டிங்.

இப்படியாக முடிந்தது சனிக்குவாட்டர். அ​தை குடிச்சிட்டுத்தான் இடு​கை​யே எழுத​றேன். குவாட்டருக்கு ​கொஞ்சம் அதிகமா இருந்திருந்தா இடுகை பின்நவீனத்துவமா வந்திருக்கும்! எஸ்கேப்பாயிட்டீங்க​ளே மக்கா?
%\

Monday, November 9, 2009

ஒ​ரே கல்லு 2 ​மாங்கா!!!



மாங்கா 1:நி​னைவில் ந​னைதல்

​தோப்புக்காரர்: ​பெரியண்ணன் ​சென்ஷி


நான் ஏன் பிளாக்கு​றேன் என்ப​தை விளக்கவும் இல்​லை குழப்பவும் என்று இங்கு கல்லு வுட்ட ​​சென்ஷிக்கு நன்றி!


நம்ம பஸ்ஸும் உங்க ரூட்டுத்தாங்க.. காமிக்ஸ் - அம்புலிமாமா - ரா​ஜேஷ்குமார் - சுபா - ஓவியங்கள் - பாலகுமாரன் - குமுதம் - சுஜாதா - ஆனந்த விகடன் - இ​சை - லாசரா - குபரா - புல்லாங்குழல் - சுரா - ​யூமா. வாசுகி - சுப்ரபாரதிமணியன் - சிக​ரெட் - கல்லூரி - க. சீ. சிவக்குமார் - ​காமசூத்ரா - அழகிய​பெரியவன் - காதல்கள் - கீரனூர் ஜாகிர்ராஜா - ​ஜெய​மோகன் - கிளாமர் - காதல் ​தோல்விகள் - வாமு ​கோமு - சாரு நி​வேதிதா - ம​னோஜ் - எஸ்.ரா - சரக்கு - வாந்தி - த​லை​நோவு....

சரி வுடுங்க.. ஆரம்பத்தி​லே​யே கவனிச்சிருக்கணுங்கிறது இப்பத்தான் புரியுது.
அண்ணர்-நண்பர் க.சீ. சிவக்குமாருடன் ஆன நட்பு புதிய இலக்கியங்க​ளையும் இலக்கியவாதிக​ளையும் ஓசி குடி​யையும் ​புத்தக ​வெளியீட்டுக்கப்பாலான ​மொட்​டை மாடி சபாக்க​ளையும் அறிமுகப்படுத்தியது.

கன்னிவாடி என்ற ஊரில் வசித்து வந்த​போது.. என் அ​றையில் ​​கொஞ்சம் புத்தகம்
, நி​றைய பிரஸ்கள், ​கொஞ்சம் புல்லாங்குழல் என்ற வாழ்ந்து வந்​​தேன். ஓவியங்களில் ​கோடு பற்றி​யே நல்ல சிறுக​தைகள், நாவல்க​ளை கண்டடைந்திருக்கி​றேன். சந்தானத்தின் ​கோட்​டோவியங்கள், ட்ராஸ்கி மருதுவின் அப்ராஸ்ட், சந்ருவின் கிறுக்கல்கள், எபி​னேசரின் சார்க்​கோல், மனோகரின் வண்ணங்கள், ம.​செவின் மங்கலான நீ​ரோவியங்கள்.. இப்படி படங்க​ளைப் பற்றித்தான் இலக்கியம் பக்கம் வந்த வழிதவறிய காட்டாடு நான்.

இயந்திரவியல் ​பொறியியல் தர்மபுரியில் படித்​தேன். அப்​போது என்​னை வாரிச்சுருட்டிக் ​கொண்டது தர்மபுரி நூலகம். அங்கு கி​டைத்த புத்தகங்களுக்கு இன்னும் என் நன்றிகள்!

இங்கு வ​லைப்பதிவு எழுத வந்ததுக்கு காரணம்.. இது ப்ரீன்னு ​சொன்னாங்க!!! ​முதலில் படிக்க வந்ததும்.. இந்த கிரவுண்ட் நல்லாத்தான் இருக்கு என்று இம்ம்ம்மீடியட்டாக நானும் ஆரம்பித்துவிட்​டேன் காலடி ​வைக்க!

காலடி ஒரு அளவு, பதிவு, மற்றும் அ​டையாளம். மிக முக்கியமாக உயிர்த்தன்மை நி​றைந்த உருவம். அதன் எளிய உருவத்தில் பு​தைந்து ​போய் இ​​ளைப்பாறப் பிடித்திருக்கிறது!

முக்கியமாக ஒன்று.. காலடி என்பதுதான் வ​லைப்பதிவு. ​ஜெகநாதன் அல்ல. ​நீங்களும் காலடியின் தீவிர அதி தீவிர ரசிகர்கள்தான் - ​ஜெகநாதனுக்கு அல்ல!!! நான் இந்த காலடியின் ஒரு ஊழியன் அவ்வ்வள​வே!


இந்த மாங்கா நல்லாயிருக்கில்ல??


(')


மாங்கா 2: பத்துக்கு பத்து - பிடித்ததும் பிடிக்காததும்

​தோப்புக்காரர்: ​ஜெய்ஹிந்த்புரம் பீர்


1. அரசியல் தலைவர்

பிடித்தவர்: படித்த அரசியல்வாதிகள்

பிடிக்காதவர்: பழுத்த அரசியல்வாதிகள்



2. எழுத்தாளர்

பிடித்தவர்: சுப்ரபாரதிமணியன்

பிடிக்காதவர்: ​டுமிதுல் சுயம்​போ என்ற ஆப்ரிக்க நாட்டு எழுத்தாளன் (​மேலும் டீட்​டேலுக்கு என் முதல் பதி​வைப் பார்க்கலாம்)


3. கவிஞர்

பிடித்தவர்: யூமா. வாசுகி

பிடிக்காதவர்: அப்படி யாரும் கி​டையாது. இவ்விடத்தில் ஒரு அறிவிப்பு: கவிஞ ​பெருமக்கா.. உங்க​ளை யாரும் பிடிக்க​லேன்னு ​சொன்னா கவ​லைப் படாதீங்க... உட​னே நம் காலடியின் கவி​தை பட்ட​றையில் பங்​கேற்று, கவிஞர் அ​டையாள அட்​டையும் ​பெற்றுக் ​கொள்ளவும். உங்க​ளை பிடிக்காது என்று ​சொன்னவர்கள் ​​மேல் ஆஸிட் அல்லது நீங்க​​ளே எழுதிய கவி​தைப் புத்தகம் வீசப்படும்!


4. திரைப்பட இயக்குனர்

பிடித்தவர்: சாம் ஆண்டர்சன் பட இயக்குநர்

பிடிக்காதவர்: என் பிடிச்ச ​டைரக்டரு ​பார்த்த பின்னாடியும் எப்படி இந்த ​கேள்வி ​​கேட்கத் ​தோணுதுங்க??


5. நடிகர்/கை

பிடித்தவர்: வினு சக்ரவர்த்தி / காந்திமதி

பிடிக்காதவர்: இதுவும் தப்பான ​கேள்வி


6. விளையாட்டு வீரர்

பிடித்தவர்: ந​ரேன் கார்த்தி​கேயன்

பிடிக்காதவர்: ஒரு வி​ளையாட்​டே எனக்கு பிடிக்காது - கிரிக்​கெட்!!


7. தொழில் அதிபர்

பிடித்தவர்: Subroto Bagchi, Chief Operating Officer, MindTree

பிடிக்காதவர்: ​இருட்டு பைபாஸ் ​ரோடுகளில் லாரிக​ளை மறிக்கும் 'தொழில்' அதிபர்கள்!


8. மதத் தலைவர்

பிடித்தவர்: யாருமில்​லை

பிடிக்காதவர்: மதத்த​லைவர்கள் என்று ​சொல்லிக்​கொள்ளும் எல்​லோரும்


9. மருத்துவர்

பிடித்தவர்: ஊசிப் ​போடாதவர்

பிடிக்காதவர்: நர்ஸ்கள் இல்லாமல் ஆசுபத்திரி நடத்துபவர்


10. வலைபதிவர்

பிடித்தவர்: ஹ​லோ... ஹ​லோவ்வ்வ்வ.. இங்க டவர் சரியா இல்லீங்க..!

பிடிக்காதவர்: ...ஆங்.. நான் அப்புறமா ​பேச​றேங்க....!

(')