Wednesday, July 29, 2009

பச்சப்புள்ள - பார்ட் 2 அல்லது பால்நுரை படலம்

ஈரோ, ராசாத்தி, பாப்பாத்தி, முனிஸிபாலிட்டி, கம்ப்யூட்டர் டேட்டா என்ட்ரி - அம்புட்டுதான் ரீகேப்பு!

ராசாத்தி-பாப்பாத்தி ரெண்டு பேரும் நல்லா கலகலப்பா பேசி பழகினாங்க. கலகலப்புங்கிறத விட லூட்டின்னுதான் சொல்லோணும். நம்ம ஈரோதான் கொஞ்சம் பயந்தாப்ல திரிஞ்சாரு! ராசாத்தி ஈரோக்கிட்ட,

"உங்கள, இதுக்க மின்னாடியே தெரியும். நான் ஹார்ட்வேர்ஸில இருப்பேன், நீங்க அந்த வழியாத்தான் டெய்லியும் நடந்து போவீங்க"

"அப்படியா, நான் உன்னைப் பாத்ததே இல்லியே?"

"மந்திரிச்சு விட்ட கோழி மாதிரியே தலைய குனிஞ்சுக்கிட்டே நடந்தா எப்படித் தெரியும்?"

அட நம்மளக் கூட கவனிக்கிறாங்களான்னு ஈரோவுக்கு புல்லரிச்சுப் போச்சு. ஈஈன்னு இளிக்க வேற செஞ்சாரு.

பாப்பாத்தி குறுக்கிட்டு,

"ஆமா, ரோட்டுல நீங்க நடக்கிறப்போ ஏதோ ரொம்ப சோகத்தில அடிபட்டு நடக்கிறவன் மாரி இருக்கும்"

ராசாத்தி, "நாங்கூட பாப்பாத்திட்ட​சொல்லுவேன், பாவமாயிருக்குடி, பால் ஏதும் வாங்கிக் கொடுப்பமான்னு.. ​ஹாஹா"

கொல்லுன்னு சிரிக்குங்க குமரிங்க.. ஈரோவுக்கு வெக்க வெக்கமா வரும்!! இவிங்க ரெண்டு பேரும் பண்ற பன்னாட்டு கொஞ்ச நஞ்சமில்ல! ஈரோ அப்பப்ப ரிலாக்சு பண்ணிக்க வெளிய போயி தம்ம போட்டுட்டு, ஆட்டி ஆட்டி டீக்குடிச்சிட்டு, வாயில ஒரு ஹால்ஸ் மிட்டாய இடுக்கிட்டு மாடிக்கு வந்திடுவாரு.

முதல்ல போனாப் போவுதுன்னு உட்டுட்டாங்க இவிங்க ரெண்டு​பேரும். அப்புறமேட்டுக்கு வரும்போது எங்களுக்கும் பாலும் பப்ஸும் வாங்கிட்டு வரணும்னு கண்டீசனா சொல்லிப் போட்டாங்க!

ஈரோவே பாலும் பப்ஸும் கைகளில் ஏந்தி மாடிப்படியிலே கஷ்டப்பட்டு வந்து ராசாத்திக்கும் பாப்பாத்திக்கும் கொடுப்பாரு. சிலசமயம் பாலு விளிம்பு நிறைய இருக்கும். படியேறரது சிரமமா இருக்கும். அதனால ஈரோ ஒரு​வேலை பண்ணுனாரு.

படியேறதுக்க மின்னாடி, ராசாத்தி பால்ல ஒரு வாயி, பாப்பாத்தி பால்ல ஒரு வாயின்னு குடிச்சுட்டு பத்திரமா பாலை கொண்டு போயி கொடுப்பாரு! என்னடா இது ஒரு ஹீரோ பண்ற வேலையான்னு கேக்கறீங்களா?
இருங்க..இப்ப கதையில ஒரு முக்கியமான ஆளு என்ட்ரி ஆவறாரு... அவரைத்தான் நாம ஏக்சுவலா ஹீரோன்னு சொல்லணும்.

ஏன்னா, அவரு என்ட்ரி ஆகும் போதே,"நாந்தான் ராசாத்தியோட லவ்வரு" அப்படிங்கிறாரு!

(தொடரும்... இன்னும் ஒரே ஒருக்கா...)

19 comments:

சிநேகிதன் அக்பர் said...

பாவம் பால் குடி மாறா பாலகன் போல இருக்கு.

நீங்க ஈரோ பால் தான் குடிப்பாருன்னு சொல்லும்போதே நெனச்சேன் ஏதோ நுண்ணரசியல் இருக்குன்னு. நிருபிச்சிட்டிங்க.

கலக்குங்க கலக்குங்க.

சிநேகிதன் அக்பர் said...

i am first....

சிநேகிதன் அக்பர் said...

and also second and third

சண்முகம் said...

//தொடரும்... இன்னும் ஒரேஒருக்கா//
ஒரு பத்து பன்னிரண்டு பார்ட்டாவது(port) எழுதுங்க பிளீஸ்...
i am write 4th comment...,
இந்த இரண்டாவது பாகம்
ஆகா...
ஓகோ...
சூப்பரு...
அ(எ)ருமை...

சண்முகம் said...

//தொடரும்... இன்னும் ஒரேஒருக்கா//
ஒரு பத்து பன்னிரண்டு பார்ட்டாவது(port) எழுதுங்க பிளீஸ்...
i am write 4th comment...,
இந்த இரண்டாவது பாகம்
ஆகா...
ஓகோ...
சூப்பரு...
அ(எ)ருமை...

Beski said...

ராசாத்தி போனாஎன்ன... அதான் பாப்பாத்தி இருக்குதே... அத வச்சி ஈரோவ டைஅப் பண்ணுங்க...

Beski said...

நாந்தான் 6,7...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இது ஒரு காதல அல்லது ஒருதலைக்காதல்

Starjan (ஸ்டார்ஜன்) said...

இதெல்லாம் ரொம்ப தப்பு

நான் பாப்பாத்திக்கிட்டயும் ராசாத்திக்கிட்டயும் சொல்லிருவேன் ...

நேசமித்ரன் said...

உண்மையிலேயே சுவாரஸ்யமா போகுது தலைவரே
பொசுக்குன்னு முடிச்சுடாதீங்க ..!

பா.ராஜாராம் said...

ஆமப்பூ...(நேசமித்ரன்...)அப்புறம் நான் காசு வெட்டி போடுவேன்!..உங்கள் தளம் வந்தால் உங்கள் மொழியும் வருது ஜெகன்..

நந்தாகுமாரன் said...

கருப்புச்சாமி காத்த ரகசியம், பச்சப்புள்ள - பார்ட் 1 மற்றும் இதற்கும் சேர்த்தே சொல்கிறேன் ... நகைச்சுவை மிக அருமை ... தொடருங்கள் ...

ஷங்கி said...

ஏற்கெனவே ஒரு கமெண்ட் இதுக்கு எழுதுனேனே, காணோம், காக்கா தூக்கிட்டுப் போச்சோ இல்ல வேற எங்கயாவது பின்னூட்டம் போட்டுட்டேனா? அண்ணன் பால் குடிக்கும் படலம் ஒரு மாதிரி குன்சா ஜில்பான்ஸா இருக்குது. அப்புறம் மக்கள் ஏன் கவலைப்படுறாங்க? நீங்கதான் பதின்மப்புள்ள வாலிபப்புள்ள வளந்தபுள்ளன்னு தொடர் போட்டிரமாட்டீங்க?!

Starjan (ஸ்டார்ஜன்) said...

தல உங்களுக்கு விருது வழங்கி உள்ளேன் . என் தளத்துக்கு வந்து பெற்றுக் கொள்ளவும் ....

தினேஷ் said...

பால்குடி ஈரோ..

க.பாலாசி said...

//ராசாத்தி பால்ல ஒரு வாயி, பாப்பாத்தி பால்ல ஒரு வாயின்னு குடிச்சுட்டு //

ம்ம்ம்...குடுத்து வச்ச ஆளு.

எத்தன, பக்கத்துக்கு ஒன்னா?

Nathanjagk said...

அன்பு அக்பர், நுண்ணரசியலா... ச்சீ, நாம ​போயி..? முதல் மூணு இடத்​தையும் அக்பர் பிடிச்சிட்டாரு! ​வெரிகுட்! காரிய கமிட்டில ​மெம்பரா போட்டுட ​வேண்டியதுதான்!


சம்முவம், 10 12 பார்ட் எழுத ​தெம்புமில்ல ​சொம்புமில்ல! //அ(எ)ருமை...// ந(ப)ன்றி..!

மாப்ள ஏனாஓனா, பாப்பாத்தி அப்பா போலீஸ் - அதான் ஈரோ அதுக்கப்புறம் அந்த பால் புளிக்கும்னுட்டாரு! மாப்ள 6, 7 ​பொஸிஷன் வந்திருக்காரு - இவரையும் கா.கமிட்டில இழுத்துவிட்ட வேண்டியதுதான்.

SUREஷ் தல, ​​பொறுங்க பார்ட் 3ல கிழியும் திரை!

Starjan (ஸ்டார்ஜன்). .1க்குள் 1ணா இருந்துக்கிட்டு இப்படி ​போட்டுக் ​கொடுப்பேன்றீயளே???

அன்பு ​நேசா, எழுத ஆசைதான் - ஆனா 3 பார்ட்தான் தாங்கும். அடுத்து எழுதப்​போறதோட சுவாரஸியம் என்னை இழுக்குது!

அன்பு பா.ரா, உங்க பின்னூட்டம், உதிய மர வாசனை! நன்றி!

வாங்க நந்தா..! நன்றி கவிஞரே!

சங்காண்ணா... காலடியின் காரியக் கமிட்டி தலீவரே...!!!! ​ஈரோ பால் குடிச்சதுக்கு நான் என்ன பண்ண தலீவரே?

ஸ்டார்ஜன்... ஸ்டார்ஜன்.... இந்த பாசமழைக்கு மிக்க நன்றி நண்பரே!!!
விருதுக்கு நன்றிகள்!

சூரியன், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

பால் ஆச்சி.. ஸாரி பாலாஜி.. பாலும் பப்ஸும் ​கைகளில் ஏந்தி படியேறக் கஷ்டமா இருந்ததால.. ஈரோ அந்த மாரி பண்ணீட்டாரு! அவ்ளோதாங்க.

Nathanjagk said...

ஐ மீ த லாஸ்டேய்ய்ய்!!!

Unknown said...

Super