Monday, July 20, 2009

வீங்கிய மண்டையும், சில விருதுகளும்

நன்றாக கவனிக்கவும்: இது வழக்கம் போல் போடும் மொக்கையல்ல. சீரியஸ்! அட சிரிக்காதீங்கப்பா! என்னதான் நம்மை மொத்தினாலும் குட்டினாலும் குரல்வளையை கடித்தாலும், கடைசியில்​கைக்குலுக்கி அவார்ட்டும் கொடுக்கப்பட்டிருக்கு என்பதுதான் இந்தவார இணையத்தின் முக்கிய விசேஷச் செய்தி!
நெஞ்சை நீவிக்​கொண்டே​மேலும்​தொடர்பவர்களுக்கு நன்றி!
நமக்கு, ஐ மீன் 'காலடி'க்கு The Interesting Blog அவார்ட் கொடுக்கப்பட்டிருக்கு!! நம்மை நம்பி அவார்ட் கொடுத்தவர்கள்:

சங்கா (என்னுள்ளே)
SUREஷ் (பழனியிலிருந்து) (கனவுகளே)

ஆமாம். நம் தங்க அண்ணன் சங்காதான் முதலில் காலடி-க்கு அவார்ட் கொடுத்து நம்மை ஆனந்த கடலில் தள்ளிவிட்டவர்!

அதேசமயம், தல SUREஷ் - பழனியிலிருந்து, நம் உள்ளங்கையில் ஊத்தினார் பஞ்சாமிர்தமாய் அதே விருதை!இவர்கள் இருவருக்கும் நம் காலடியின் தீவிர மற்றும் அதி தீவிர வாசக கண்மணிகளின் சார்பில் நன்றிகள்!

இந்த அவார்டின் ஆதிமூலம் ரிஷி மூலம் தெரிந்து கொள்ள நினைப்பவர்கள் SUREஷ் (பழனியிலிருந்து) பார்க்கவும்.

இரண்டு கப்புகளையும் - விருதுகளையும் - பெருமையோடு பெற்றுக் ​கொண்ட நம் காலடி பரவசத்தில் தள்ளாடுகிறது!! இது ஒரு தொடர்பதிவு விருதுச் சுற்று. ​விருது பெற்றவர், மேலும் 6 பேருக்கு விருதை வழங்கவேண்டும்.​

இதோ நாம் பெருமையுடன் வழங்கும் - காலடியின் The Interesting Blogs பட்டியல்:

நந்தா: ப்ரியத்திற்குரிய கவிஞன். சரக்கடிக்க வாருங்கள் என்ற ஒரே கவிதையிலேயே பயங்கர நட்பாகி விட்டேன்(டோம்?). இந்தாப்பா உன்கு ஒண்ணு.. குத்திக்கோ வலைப்பூவூலன்னு சொன்னாக்கா, இந்த உஸ்தாது அதெல்லாம் வாணாம்பா, இதுல்லாம் குத்தனாக்கா நம்ம வல்ப்பூ கலீஜா பூடும்னுடுச்சி! :-( சரி விடுங்க.. விருது கொடுப்பது ஒரு நல்ல வலைப்பூ​வை அறிமுகம் செய்யத்தான் என்று நினைத்துக் கொண்டு - இதை ஒரு அறிமுக விருதாக (அடங்கொன்னியா!!) அறிவிக்கிறது!! இதை காலடியின் நொந்த விருது எனக் கொள்க!

டோமி யப்ப்ப்பா... அழுத்தக்கார ஆளுப்பா நம்ம டோமி.. டெய்லியும் ஒரு இடுகை.. இங்கிலீஷ்காரன் விஸ்கி சாப்பிட மாதிரி, எண்ணி மூணே மூணு​வரிதான்! பின்னூட்டத்துக்கு நன்றி, இன்னபிற தகவல்கள் அதுவும் மூ.மூதான். டோமிக்கு அன்பாக இந்த மூணைத் தொட்டவர் விருது!

நேசமித்ரன்: இன்னொரு கவிஞர். ஒவ்வொரு கவிதையும் மாயத்தன்மை கொண்ட படிமங்களைக்​கொண்டது. மயக்கத்தன்மை ஏற்படுத்தும் படிமங்களை - அதாவது கவிக்காட்சிகளை- பாராட்டி நேசனுக்கு லேசர் கவி விருது!

சண்முகம் சேலம்:மொபைல்லயே இடுகை போடுறாரு... புதுசா SMSGupShupன்னு Tamilish மொபைல் அலர்ட் குழு ஆரம்பிச்சு பட்டாசு கெளப்பிட்டிருக்காரு. நாம வச்சிருக்கிறததான் சோப்பு டப்பா ஆச்சே. 3G ​செட்டுக்காரங்க முயற்சி பண்ணிப்பார்க்கலாம். ஆய் அசோசியேஷன்னு ஒரு இடுகை - செமத்தியா பின்னு, பின்னூன்னு பின்னீட்டாங்க பின்னூட்டத்தில. அனேகமா அடுத்த சாரு நிவேதிதாவின் வாரிசா வருவாருன்னு காலடி யூகிக்கிறது. சம்முவத்துக்கு நாம் கொடுக்கும் அவார்ட்: 'ஆயி'ரத்தில் ஒருவன்!

சிந்தனி - தங்கமணி பிரபு: சிந்தனின்னா சிந்திக்கிறவர்ன்னு அர்த்தமாம். தலீவர், சாதாரண ஆளில்லப்பா. காமிரா கண்ணுக்காரர். இப்ப கொஞ்ச நாளா சீரியஸா இடுகைகள போட்டு கும்பல் கும்பலா ஆட்களை பைத்தியமாக்கிட்டிருக்காரு. நானும் சிவனும் – (சிறு)கதை விடுதல் படிச்சிட்டு அசந்துட்டேங்கிற விட, பயந்துட்டேன்னு சொல்லலாம்! இப்ப எக்ஸ்க்யுஸ்மீ ஒரு பதிவு கைமாத்தா
கிடைக்குமா! அப்படின்னு பதிவு போட்டிருக்கார். ஸோ சிந்தனிக்கு கைமாத்தா இந்த விருது (விருது வாங்கினத வச்சு ஒரு பதிவ எழுதி பீதியக் கிளப்புங்கப்பா!)

சமரன் அசத்துற எழுத்து..! சிறுகதை மாதிரி அனுபவங்களை கொட்டுற தீவிரம்.. (கோயம்புத்தூர்காரர் இல்லையாம்) மதுரைக்காரர். போட்டாவ போடுங்கன்னா, பொடனிய படம் புடுச்சி போட்டிருக்கிறாரு வலைப்பூவுல! ஒட்டகத்துல ஏறி உக்காந்தா நாய் கடிக்குமா?? அப்படின்னு ஒரு இடுகை.. 4 மணி நேரமா ஒண்ணுக்க அடக்கிட்டு (ஆத்தி..) பஸ்ல வர்றத பத்தி. இந்த ஒரு இடுகைக்காகவே நாம் சமரனுக்கு வழங்குவது - 'தொட்டி ​ஜெயா' விருது! பிடிச்சுக்கோங்க சமரன்!!

முரளிகுமார் பத்மநாபன் அன்பே சிவம் சிறுகதை, அனுபவக் கட்டுரைகள்,நூல் விமர்சனம், அரசியல், சினிமா, லொட்டு லொசுக்கு என பயங்கரமா இடுகை போடும் முரளி, திருப்பூர்க்காரர். கிலுகிலுப்பை -II (கதிர்வேலு ஐயா) படித்துவிட்டு, பின்னூட்டம் போட்டு, அப்புறம் பின்னூட்டத்தையே இடுகையாகவும் போட்டு நாம் நம் காலடியில் அக்கப்போர் செய்திருக்கிறோம் ஆசிரியர்களிடம் அன்பு பாராட்டும் அதிசய மாணவர். முரளியை கெளரவிக்கும் விதமாக காலடி அவருக்கு வழங்குவது வாத்யார் வூட்டுப் பிள்ளை விருது! வாங்கிக்கோ வாத்யாரே!

அவ்வளவுதான் விருது. தீந்து போச்சி. ஆனா ஒரு டவுட்டு; சங்கா அண்ணன் கணக்குல 6 அவார்ட், SUREஷ் தல கணக்குல 6 அவார்ட்.. அப்ப நாம 12 பேருக்கு கப்பு கொடுக்கலாமா? ​

காலடியோட தீவிர அதி தீவிர வாசகர்களே கருத்துரைங்க.

இங்கியே வுட்டுக்கலாம் ஜுட்..

இருந்தாலும், நாம ஏன் காலடி எடுத்து வைக்க ஆரம்பிச்சோம், காலடி சுத்துற சந்து​பொந்து, இண்டு இடுக்கு இதையெல்லாம் நாம தெளிவுபடுத்திரது நல்லது. இங்கு காணப்படுகிற வலைப்பூக்கள் மற்றும் இணையதளங்கள் காலடியின் விரிதலுக்கும் திரிதலுக்கும் (வுடுங்க.. வுடுங்க) பெரும் பங்காற்றுகின்றன அல்லது பங்காற்றின.

வாமு கோமு: ஈரோடு மாவட்டம், வாய்ப்பாடி என்னும் சிறறூர் பிறப்பிடம். பல சிறுகதை,பலநாவல்கள் தொகுப்பாக வந்துள்ளன. குறிப்பிடத்தக்கவை அழுவாச்சி வருதுங் சாமி, கள்ளி போன்ற புத்தகங்கள். தோழர் இறந்து விட்ட பின்பும் ரயில் ஓடிக்கொண்டிருக்கிறது என்ற சிறுகதையில் இருந்து இவரோட பூளவாக்கு என்ன என்று நன்றாக தெரிந்து கொள்ள காணமுடியும்.

ஈரோடு நாகராஜ்: (தவில்காரர் இல்லை) மிருதங்க வித்வான். நுணுக்கமான நகைச்சுவையை இவரது இடுகைகளில் காணலாம். முடியாதவர்கள் தேடலாம். ஆனால் எப்படியும் கிடைக்கும். நான் ரசித்துப் போட்ட பின்னூட்டம் - இந்த கேள்வி-பதில் இடுகைக்குதான்.

ஸ்டார்ஜன்: இவர் வெள்ளிவிழா (25வது வலைப்பதிவு) கொண்டாடிய அமர்க்களத்தில் கலங்கிய கண்கள், இன்னும் தெளியவேயில்லை.. சிறுகதையெல்லாம் எழுதுவார். எல்லாவகையான இடுகைகளையும் இவர் வலைப்பூவில் பார்க்கலாம். பாசக்கார பின்னூட்டக்காரர். அன்பருக்கு ஒரு பாசக்கார விருது கொடுக்கலாம்னு பாத்தா அண்ணன் ஏற்கனவே அவார்ட்டை குத்திக்கிட்டு திரியறாரு!

டவுசர் பாண்டி: நாம காலடியில போட்ட என்னடா பாண்டி என்ன பண்ணப் போற இடுகையப் பாத்து பாண்டிக்கு வாயி கோணிக்கிச்சு.. யாருடா அவன் நம்ம ஏரியாவுல வந்து கொரல் கொடுக்கிறதுன்னு நம்மாண்ட வந்து அப்பால
ஸாரிப்பா.. உம் மேட்டரு நான் நென்ச்ச மாரியில்ல.. மெய்யாலுமே ரொம்ப கலீஜ்ஜாக் கீதுன்னு ஜகா வாங்கிட்டாரு! மெட்ராஸ் பாஷைல பிஎச்டி வாங்கியிருக்காருன்னு சோமாரிக்குப்பத்துல போர்ட் வச்சிருக்காங்கோ!

ஜ்யோவ்ராம் சுந்தர் மொழி விளையாட்டு: தமிழினி மூலமா, கோபிகிருஷ்ணனின் (டேபிள் டென்னிஸ், தூயோன், இடாகினி பேய்களும்..) புத்தகங்களை வாசகர்களுக்கு போய் சேர காரணமா இருந்தவர். இப்ப ஏதோ திருத்தப்படாத புத்தகத்தின் எழுதப்படாத பக்கங்கள்னு (!?) அளப்பற பண்ணிட்டிருக்காரு

தூரன் குணா: கவிஞர். சுவரெங்கும் அலையும் கண்கள் என்ற கவிதை தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். நன்றாயிருக்கின்றன கவிதைகள். ஆனால் இடுகை எழுதி மாதங்களாச்சு. ஏஞ்சாமி யாரு மேல என்ன கோவம்? ஏனிந்த ரவுசு என்ற கேள்விக்கும் பதிலில்லை. ஆழிச்சுழி போல் கவிதைகள். ஆனால் ஒரு பின்னூட்டம் கூட இல்லை. அதிர்ச்சியாய் இருந்தது. இடுகை எழுதாததற்கு இது காரணமாயிருக்குமோ?

சுப்ரபாரதிமணியன்: கனவு என்ற பத்திரிக்கையை திருப்பூரிலருந்து நடத்தி வருகிறார். இவரது சிறுகதைகளின் ஆகர்ஷணம் ப்ளாக் ஹோலுக்கு இணையானது.

கீரனூர் ஜாகிர்ராஜா: கையில் வந்தமர்ந்த பட்டாம்பூச்சி தற்செயலாய் சிக்கியதாக இருந்தது இவரது செம்பருத்தி பூத்த வீடு சிறுகதைத் தொகுப்பு. இவரைப்பற்றி நான் கதறியது இது.

பா.ராஜாராம்: அற்புதமான சிறுகதை லாவகம். அதே ஈர்ப்பு மிக்க சிறுகதைத் தன்மை உள்ளடக்கிய கவிதைகள். காலத்தின் வாசனை படிக்க வேண்டிய சிறுகதை

சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம்: க்ராமர் கிருஷ்ணமூர்த்தி போன்ற நகைச்சுவைக்குள் நிறைய விஷயம் வைக்கத் தெரிந்த அனுபவ படைப்பாளி(யாக இருக்கலாமோ?)

திணை இசை சமிக்ஞை நல்லாயிருக்கும்.. ஒரு சில கவிதை, கட்டுரையெல்லாம் கண்ணாமுழி திருகிக்கிறாப்ல இருக்கும்.. இதோட விட்டுரலாம்... இப்பதான் இவர் பேர வச்சு (நாகார்ஜுனன்) ஒரு கும்மியாட்டம் போட்டு ஓய்ஞ்சிருக்காங்க!

aravind:நல்ல மனுசர் பாவம்.. நம்ம காலடியோட தீவிர வாசகரா மாறுவதற்கான அனைத்து சாத்தியகூறுகளும் தெரியுது! கடைசியாக அழுத
ஆறு திரைப்படங்கள்
ன்னு ஏதோ திரியப் பத்த​வெச்சிருக்காப்டி.

RAMYA:​கொங்கு தமிழ்ல பொங்கல் வெக்கிறதில பெரிய கில்லாடிங்கோவ்! ​ போயி ஒரு எட்டு பாத்துப் போட்டு வாங்க.

சந்ரு: நல்ல கட்டுரைகள் எழுதி வருபவர். நமக்கு பின்னூட்டங்களும் எழுதி வருகிறார். கூடிய சீக்கிரம் தீவிர வாசகக் கண்மிணியா ஆயிடுவாருன்னு நம்பறோம்.

வினோத்கெளதம்: ஜுலைக் காத்தில-ங்கிற வலைப்பூவின் அதிபதி. நக்கல் - நையாண்டி - மொக்கை இந்த மாதிரி சமூக சிந்தனையோட செயல்படற ஆத்மா! ஜுலைகாத்தில ஊளையிடற.. அட தென்னங்கீத்து மாதிரி இவரோட ​மொக்கைகள்..

அக்பர்: மரத்தை வெட்டி குளத்தை நட்டு.. அந்த தலைப்பாக்கட்டு ஆளுயில்ல இவுரு. இவரு கம்முனு கதை, கட்டுரை மற்றும் சீரியஸான மொக்கைகள்னு இருக்கிற நம்ம அதி தீவிர ரசிகர்!! அதுக்கே ஒரு ஸ்பெஷல் பாராட்டு ப்ளஸ் கையில ஒரு எலுமிச்சம் பழம்!!!

கோவி.கண்ணன்: தீவிரமான ஈடுபாட்டுடன் இவர் எழுதி வரும் காலம், பதிவர்களால் வெகுவாக கவனிக்கப்பட்டு வரும் பதிவு. பாலியல் நாட்டங்கள் மற்றும் இயற்கை என்ற தொடர் இடுகையிலுள்ள சமூக ப்ரக்ஞை குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியது. 18பட்டி வலைப்பதிவுக்கும் நாட்டாமை அண்ணன்தான்!! அட ஏதாவது டவுட்னா​கேட்டுக்கங்கப்பா!

சென்ஷி: நம்ம பெரியண்ணன். முனியாண்டி விலாஸ்ன்னு​நவீனத்துவ கதைகள்ல கலக்குபவர். காலடியின் அதி தீவிர ரசிகர்களுக்கு, சூடம் கொளுத்தி, எலுமிச்சம் பழம் கொடுத்து, வேப்பிலை அடிக்கும் தலைப் பூசாரியாக இருக்கிறார்.

சங்கா (என்னுள்ளே): அண்ணனைப் பத்தி​சொல்ல​வேண்டியதில்ல. ஏற்கனவே வந்திருக்கிற பேட்டியின் மூலம் நம் அனைவருக்கும் நன்கு அறிமுகமானவர். நமக்கு விருதும் தந்து உறவை பலப்படுத்தி விட்டார்.

எம்.பி.உதயசூரியன்: குங்குமம் ஆசிரியர். இவரோட சென்னை டயரிக்குறிப்பு கட்டாயம் வாசிக்கப்பட வேண்டியது. வரிக்கு வரி கரச்சல கொடுக்கும் மதுரை சிங்கம்.

வால்பையன்: நம்ம ஊரு தல! இன்டர்நேஷனல் டிரைவிங் லைசன்ஸ் உள்ள ஒரே பதிவர்! அதாங்க.. எங்க வேணாலும் யார வேணாலும் ஓட்டு ஓட்டுன்னு ஓட்டுபவர்! இப்படியெல்லாம் கூட எழுதலாம்னு இவரோட ஏற்றத்தாழ்வற்ற போதையுலகம்! என்ற இடுகையை அடிச்ச பின்னாடிதான் காலடிக்கு சங்காவுடன் ஒரு​பேட்டி உதயமாச்சு!

பின்வருபவர்களுக்கு காலடி நன்றி தெரிவித்துக் கொள்கிறது:

வண்ணத்துபூச்சியார் திரைப்பட விமர்சனம் என சீரியஸா எழுதிக்கிட்டு வருபவர்.
pukalini நம்மை உற்சாகப்படுத்தும் பின்னூட்டத்துக்காரர்.
கடைக்குட்டி யாருமே இல்லாத கடையில யாருக்கு நான் டீ ஆத்துறேன்? அப்பிடிங்கிறாரு!
கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும், படங்களாய் இடுகைகள் போட்டு வருபவர்.

காலடியை அறிமுகப்படுத்த உதவியாய் இருந்த திரட்டிகளுக்கு நன்றி! (இங்க போயி நீங்க ஓட்டுக்குத்தணுங்கிற உள்-குத்தெல்லாம் இல்லீங்)
Tamilish
TamilManam
*
முக்கியமா விருது வாங்கினவங்க... ஆறு பேர்த்துக்கு இதை பகிர்ந்துக்கணும்! மறக்காம இந்த படத்தை ​வெட்டி உங்க வலைப்பூவுல ஒட்டிக்குங்க!!
*

30 comments:

ஷங்கி said...

தம்பி, பாசத் தம்பி, விருதுக்கும், விருது பெற்றவங்களுக்கும் வாழ்த்துகள். அப்புறம் என்ன ஆளையே காணோம் கொஞ்ச நாளா?!
தலைப்புல ரொம்ப பி.ந. பினாயில் வாடை அடிக்குதே! முனியாண்டி விலாஸ்லாம் ஒரு தடவைதான் படிக்கணும். புரியலைன்னு மறுக்கா மறுக்கா படிச்சா இப்படித்தான் ஆகும்

சென்ஷி said...

விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!

விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்!!

:)))

நந்தாகுமாரன் said...

ஜெகநாதன்,

Thanks a lot for the interesting blog award ... என்னங்க இது இப்படி கோவிச்சுக்குறீங்க ... உஸ்தாது பிஸ்கோத்துன்னு ரைமிங்கா திட்றீங்களே ... அழுவாச்சி வருதுங் சாமி ... என் சைட்டுலே மட்டுமில்லே என் சட்டையில் வேண்டுமானுலும் குத்திக் கொள்கிறேன் ... உங்கள் அன்புக்கும் என்னைப் பற்றிய அறிமுகத்திற்கும் இந்தாங்க பிடியுங்கோ ஒரு கோடி ... வேறு என்ன நன்றிகள் தான் ...

நந்தாகுமாரன்,
அன்புடன்.

வால்பையன் said...

முதலில் விருதுக்கு வாழ்த்துக்கள்!

தோழர் வாமு.கோமுவின் லிங்கில் சரியான தகவல் இல்லையே!

சரியாக கொடுக்க முடியுமா?

நேசமித்ரன் said...

ஜெகநாதன்
மிக்க நன்றி விருது வழங்கி கவுரவித்ததற்கு
உங்களின் அன்பு நெகிழ வைக்கிறது
"வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் "
என்பது மாதிரி என் கவிதைகளின் இம்சையை பொறுப்பதோடு இல்லாமல்
விருது வழங்கும் நல்ல உள்ளமே மீண்டும் மனமார்ந்த நன்றிகள்

அன்பேசிவம் said...

நண்பா மிக்க நன்றி , நான் பதிவெழுத ஆரம்பித்து வாங்கும் முதல் பாராட்டும் வெகுமதியும் இதுதான். ஆகவே என்னால் நிச்சயம் மறக்கமுடியாத விருது. இது ரொம்ப நன்றி ஜெகன்.

Nathanjagk said...

விருது கொடுத்து விருது கொடுக்க ​வைத்த அண்ணன் சங்காவுக்கு நன்றி!

அன்பு சென்ஷிக்கு நன்றி! இதுக்கெல்லாம் நீங்க(தான்) ஒரு காரணங்கிறத நான் சொல்லவும் ​வேண்டுமா?

நந்தா.. அப்படி வாங்க வழிக்கு!!! நீ ​மெய்யாலுமே உஸ்தாதுதான் கண்ணு - கவிதை காக்டெய்ல! ஒரு நாளக்கி நாம பெங்களூர்ல ஒரு ஸிட்டிங் போடறோம்! வாழ்த்துகள் நந்தா!

அன்பு கவி நேசமித்ரன், விருதை ஏற்றுக்​கொண்டது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது! நன்றியும் வாழ்த்துகளும்!

அய்யோ தல வால்பையர்...
மன்னிக்கவும். எல்லா பதிவு இணைப்புகளையும் தவறாக ​கொடுத்துவிட்டேன். எப்படி இந்த தவறு ஏற்பட்டது என்று ​தெரியவில்லை. இப்போது சரியும், பரிகாரமும் செய்து விட்டேன்.. ஹிகிகி.. உங்கள் பெயரை நன்றி லிஸ்டில் குறிப்பிட மறந்து விட்டிருந்தேன். அதற்கு பரிகாரம் பண்ணியாச்சுங்!

நண்பா முரளி!
விருதை ஏற்றுக்​கொண்டது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது! இன்னும் இது ​போல பல தளங்களை அடைய காலடி வேண்டி வாழ்த்தி, சங்கா அண்ணனின் விரலைக் கீறி ரத்த திலகமிட்டு அனுப்புகிறது!

வால்பையன் said...

நன்றி தல!

டவுசர் பாண்டி said...

டவுசர் பாண்டி, கூவரம்பா !!
நம்ப பொட்டி கொஞ்சம் லிப்பேறு ஆயிபோச்சிப்பா, நம்ப பேரே வரல , ( யாரோ !! செய்ஞ்ச சதியா இருக்குமா ? நம்பல போய் யாரு ? )

ஜெகனு - அண்ணாத்தே , நெம்ப சந்தோசமா கீது பா !! ஆறு பாக்கிட்டு ஒரைய , சொம்மா அல்லேக் பண்ணி , முட்ட தோச துன்ன கணக்கா கீதுபா , இந்த அவாடு இல்லாத உன்னு கீற அல்லா அவாடும், நீ வங்கனுமின்னு நம்ப மாரியாத்தவ வேண்டிக்கினு , வைக்கிரம்பா உனுக்கு ஒரு சலாம் , சூப்பர் பா ,

சிநேகிதன் அக்பர் said...

ரொம்ப நன்றி ஜெகநாதன்,

எல்லா பதிவர்களைப்பற்றியும் நல்ல சொல்லியிருக்கீங்க.

Starjan (ஸ்டார்ஜன்) said...

நன்றி ஜெகநாதன்

என்னுடைய பதிவுக்கு இந்த கிடைச்சிருக்கு

இதை உங்க கையால வாங்குவதற்கு நான் பெருமைப்படுகிறேன் .

இதுக்கு நான் தகுதியுடையவனாக இருக்க முயற்சிப்பேன் .

டவுசர் பாண்டி said...

வாஜாரே !! நம்ப பொட்டிய , இங்க கீற டிவி மெக்கானிக்கு கிட்டயே குத்து லிப்பேறு பண்டம்பா !! இன்னாடா இது நம்ப பேர யாரோ ஒரு அண்ணாத்தே போட்டு என்னடா பாண்டி என்ன பண்ண​போற? இன்னு கேட்டு கீராரே , யாரு இன்னு தான், எட்டிப் பாத்தேன் ,அப்பாலிக்கா நம்ப தோஸ்து ஆயிப்பூட்டாறு நம்ப அண்ணாத்தே !! சோக்கு தான் தல விருது வாங்கனதுக்கு , இந்த டவுசரோட , "வாழ்த்துக்கள் "

வினோத் கெளதம் said...

வாழ்த்துக்கள் ஜெகன்..
அப்புறம் முக்கியமா நன்றிகள் பல..:)

butterfly Surya said...

வாழ்த்துகளும் நன்றியும்.

அன்புடன்

சூர்யா..

டோமி said...

நல்ல செயல்...
வாழ்த்துக்கள்...
நன்றி ...

geethappriyan said...

கலக்கிவிட்டீர்கள் ஜெகநாதன் உங்களுக்கு நல்ல எழுத்து ஆளுமை.
வாழ்த்துக்கள்.உங்களிடமிருந்து விருது பெற்றவருக்கும் வாழ்த்துக்கள்.
ஒட்டு போட்டாச்சு.

கோவி.கண்ணன் said...

இம்புட்டு பேருடன் விருதுவாங்குவது மகிழ்ச்சியாக இருக்கு, கலைமாமணி கூட இம்புட்டுப் பேருக்கு கொடுக்க மாட்டாங்க.

ஜெகநாதன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

நீங்கள் குறிப்பிட்டுத்தான் 'அந்த' தொடருக்கு வரவேற்ப்பு இருந்ததுன்னு தெரிஞ்சது. இப்படி அந்த பதிவில் பின்னூட்டத்தில் சொல்லி இருந்தால் ஒரு 20 பகுதி வரை எழுதி இருப்பேன்.

Anonymous said...

தெரியவே இல்லை.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

வந்திவிட்டேன்

RAMYA said...
This comment has been removed by the author.
RAMYA said...

விருதுக்கு வாழ்த்துக்கள்!!

விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்!!

என்னையும் இச்சபையில் கவுருவமித்தமைக்கு மிக்க நன்றி!

Erode Nagaraj... said...

நன்றி, நான் மிருதங்கம் வாசிக்கிறவன். அதையும் திருத்தி வெளியிட்டு விடுங்கள். :) வாழ்த்துகள்.

ச ம ர ன் said...

மிக்க நன்றி ஜெகதீசன். சுமையை ஏத்திட்டீங்க. இனிமே சுவாரஸ்யமா எழுதியே ஆகணும் :(

அப்புறம் நான் கோயம்பத்தூர் இல்ல, மதுரை ;‍)

சண்முகம் சேலம் said...

விருது வாங்கிய மற்ற பதிவர்களுக்கு வாழ்த்துகள். எனக்கு அவார்டு வழங்கிய
அண்ணன் காலடியின் கால் பாதங்களை காட்டுங்கள் வணங்கிக்கொள்கிறேன்.
நீங்கள் அவார்ட் கொடுக்க கூறிய காரணமான smsgupshup.com ன்Tamilish ல் மொத்தம் 10 பேர் தான் உறுப்பினர்களாக உள்ளனர். அதில் 8 பேரை நானே
சேர்த்தேன், நீங்கள் உட்பட. இருப்பினும் அதையும் ஒரு பொழப்பாக
பார்த்துகொண்டுதான் இருக்கிறேன். ஆய் அசோசியேஷன் என்ற பெயரில் கூகிளை வம்பிலுத்த மேட்டரெல்லாம் 'ஆய்' வார்த்தைகள் போர்னோ'வாக இருப்பதாக
பின்னூட்டத்தில் கூறி இருந்தார் அதனால் அந்த இடுகைகளை நீக்கிவிட்டேன்.
நீங்கள் எனக்காக ஒரு பொழப்பாக பார்க்க வேண்டும். இந்த மெயிலை உங்கள் கமெண்ட்ஸ் பகுதியில் சேர்க்கவும். மீண்டும் ஒரு முறை 'ஆயி'ரத்தில் ஒருவன் விருது வழங்கிய உங்களுக்கு 87 நன்றிகள்!!!
- Shanmugam Salem மெயில் பண்ணியது

டோமி said...

மறந்துவிட்டேன் ஜெக
இது தாங்கள் எனக்குக்கொடுக்கும் இரண்டாவது பரிசு.

எம்.பி.உதயசூரியன் said...

அன்பு ஜெகன்..அல்லுசில்லு நடையில அமர்க்களப்படுத்தற உங்களுக்கு விருது கிடைச்சதுக்கு வாழ்த்துக்கள்! நம்ம பேரும் உங்க லிஸ்ட்ல இருக்கறது..எனக்கு கிடைச்ச விருது!

Unknown said...

பிரியமுடன் எழுதப்படும் ஒரு வலைப்பதிவு மட்டுமே இது !

தெரிந்தவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள் .அதுவே எமக்கு
போதுமானது.

மற்றவை வாமுகோமுவின் செல்லுக்கு 9865442435

Nathanjagk said...

வாழ்த்துச் சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!!
நமக்கு விருது வழங்கி ​கெளரவித்த அண்ணன் சங்கா, மற்றும் SUREஷ் தல இருவருக்கும் காலடியின் தீஅதீ ரசிகர்கள் சார்பில் நன்றிகள்!

இரும்புத்திரை said...

பெண்களும் நான் ரசித்த சினிமாக்களும்

adutha pathivu pottachu vanga

thala naan erkanave kaladiyin theevra vasagan than solli ennai perumai paduthi veetirkal

பா.ராஜாராம் said...

ரொம்ப நன்றி ஜகன்.தாமதமாகத்தான் இதை அறிய நேரிட்டது.அன்பு நிறைய..