Saturday, August 29, 2009

எலக்கியவாதியின் பழைய டைரி


பற​வைக் கூடுகளின் எளி​மையாய் ​நெய்யப்பட்டிக்கிறது இவனது ஆன்மா.

- யூமா. வாசுகி, உயிர்த்திருத்தல் சிறுக​தையிலிருந்து..


அடுத்தடுத்துச் ​சொல்வ​தைவிட, இ​டை​வெளிக்கு அப்புறம் ​சொல்லப்படுப​வை நன்றாகத்தான் இருக்கின்றன. ​சொல்​லை இடை​வெளியும், இ​டை​வெளி​யை ​சொல்லும் கூழங்கல்லாய் உருட்டி ஈரமண்ணில் ஒதுக்கும்​போது ஆறும் அழகு. க​ரையும் அழகு.

- வண்ணதாசன், உள்புறம் வழியும் துளிகள் சிறுக​தையிலிருந்து..


பாஸ்கர், உன் ம​னைவி​யை நீ பார்க்க உனக்குச் ​சொல்லி ​கொடுப்பதன் அதிகப்பிரசங்கித்தனம் எனக்குத் ​தெரியாததல்ல. அதற்குக் கண் ​வேண்டும். ஆனால் கண்ணுக்கு உனக்குப் ​பொழுதில்​லை.

- லாசரா, எதிர்ப்பு சிறுக​தையிலிருந்து..


விரியும் உதடுகள் வழிநடத்திச் ​செல்லும் முடிவில் - ​செல்லரித்த இ​லைகள் உதிர்ந்து புதுக்குருத்​தென ​தேடிவருபவனுக்காகக் காத்திருப்பாள் புவனா.

- யூமா. வாசுகி, வான்நதி சிறுக​தையிலிருந்து..


* * *

கவிதைகள் (ஜெகநாதன்!)

குளத்துள் எறியும்

எல்லாக் கற்களிலும்

விரிஅ​லைகளாய் க​ரை ஒதுங்குகிறது

கல்​லை எறிந்த

கவ​லை!


*

.... தாகங் தீர்த்த

​பேராற்றின் ​செங்க​ரை​யை

நாணல் கடக்கிறது

சுவடுக​ளை மட்டும் விடுத்து


* * *

புத்தகங்கள்...

விழி. பா. இதய​வேந்தன்

​சேஷையா ரவி- அறிவின் க​ரை​யை மீறி

சா. கந்தசாமி - 20ம் நூற்றாண்டின் சிறுக​தைகள்

யுவான் ருல்​போ - எரியும் சம​வெளி

(.. கனவு காண்ப​தை நிறுத்து - அதுதான் என் ​பெயர்)

​ஜே ​ஜே சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி

நீல பத்மநாபன் - த​லைமு​றைகள்

​கோடாவிற்காக காத்திருத்தல் - சாமுவேல் பெக்கட்

ஹால (XALA) - ​செம்பான் ஒஸ்மான்

நகரச்சுவர்கள் - எஸ். ​வைத்தீஸ்வரன்

வழித்து​ணைகள் - சுப்ரபாரதிமணியன்

ஆயிரங்கால் மண்டபம் - ​ஜெய​மோகன்

கண்மணி குண​சேகரன் - அஞ்ச​லை

ஆந்​ரே ழீத், பி​ரை​மோ ​​​லெவி, ​ஜேம்ஸ் ஜாய்ஸ்

பாதசாரி (மீனுக்குள் கடல்)

எஸ். ராமகிருஷ்ணன் - உபபாண்டவம்..............



* * *

மியூஸிக்...

... இன்பம் சிலநாள், துன்பம் சிலநாள் என்றவர் யார் ​தோழி..

இன்பம் கனவில், துன்பம் எதிரில் காண்பது ஏன் ​தோழி (பாக்யலட்சுமி)

Michael Bolton - Go the Distance

ABBA - The winter takes its all

LAS KETCHUP

Bombay Vikings

Ellie Cambell - Don't worry you come back

Kylie Minogue........

மடிமீது தலைவைத்து விடியும் வரை தூங்குவோம்..

மறுநாள் எழுந்து பார்ப்போம்....

இரவே இரவே விடியாதே, இன்பத்தின் கதையை முடிக்காதே

சேவல் குரலே கூவாதே, சேர்ந்தவர் உயிரைப் பிரிக்காதே.....

(அன்னை இல்லம் - சிவாஜி, ​தேவிகா)

* * *

தத்துவம்

Plants remains always small under a big tree


Women can smile as they do

But they can weep as the will


* * *

தாராபுரம் ​சென்றிருந்த​போது என் ப​ழைய ​டைரி ஒன்று கி​டைத்தது. 2003-2004 ஆண்டுகளுக்கான இலக்கிய குறிப்புகள் அடங்கிய முக்கிய ஆவணம் (அட்ரா சக்​கை!) நி​றைய கவி​தைகள், படித்த புத்தகங்களிலிருந்து excerpts, இ​சை, படிக்கப் ​போற புத்தகங்களின் பட்டியல், ம​ன​தை கவர்ந்த சம்பவக்குறிப்புகள், ​கொஞ்சம் ஓவியங்கள் ​என ப​ழைய கிறுக்கல்களில் ​தொகுப்பு!

21 comments:

இரும்புத்திரை said...

புத்தகங்களும் கவிதைகளும் அருமை தல

Raju said...

ஹலோ, முடிவா என்ன சொல்றீங்க..?

☀நான் ஆதவன்☀ said...

கவிதைகள் நல்லாயிருக்கு ஜெகநாதன்.

கலக்கல் இலக்கிய காக்டெய்ல் :)

ஷங்கி said...

//கல்​லை எறிந்த
கவ​லை!//
தம்பீ! நீங்க எங்கேயோ போய்ட்டீங்க! கவிஞரே, அருமை அருமை! தொடருங்கள்.

அப்புறம் வண்ணதாசன் சொல்றதையும் நீங்க சொல்றதையும் சேர்த்துப் பாருங்க! ஒரு அதி அற்புத அனுபவம் கிடைக்குது!

பீர் | Peer said...

பழைய டைரி படிப்பதில் எத்தனை மகிழ்ச்சி, அதுவும் எழுதியது எலக்கியவாதி என்றால்... வாவ்...

சங்கர் தியாகராஜன் said...

லிஸ்டுல இருந்த புத்தகங்களை முடிச்சிட்டீங்களா?

Anonymous said...

இணையதள வரலாற்றில் முதல் முறையாக Empty கமெண்டுகள்....

Anonymous said...

Empty

Nathanjagk said...

அன்பு அரவிந்த்.. நன்றிகள்!

Nathanjagk said...

டக்ளஸ்... முடிவான்னா ஒரு முக்கியமான ஆயுதம் ​கையில கிடைச்சிருக்கு..! ​போட்டு தாக்கிர ​வேண்டியதுதான். இந்த இடுகை ஒரு தம்மாத்துண்டு சாம்பிளு!

Nathanjagk said...

ப்ரியமிகு நான் ஆதவன்..! கவிதைகளை ரசித்ததுக்கு மிக்க நன்றி! இதுக்கு எதுவும் எதிர் கவுஜே ​போடற ​ஐடியா இல்லையே????

Nathanjagk said...

அன்பு அண்ணன் சங்கா..! ஒரு லிங்க் ஃபார்ம் ஆகுதுதான்! வண்ணதாசனின் இன்னொரு வரி.. அலை ஒதுக்கிக் கரை தள்ளிய நுரை விடவா கடல் அழகு!!! வண்ணதாசன் கதையைகூட கவிதையாதான் எழுதுவாரு போல!! கல்யாண்ஜி எட்டிப்பாக்காம இருக்கமாட்டாரு! நன்றிங்ணா!

Nathanjagk said...

அன்பு பீர்.. இப்போது டைரி மாதிரிதான் பிளாக் எழுதுவது என்று தோன்றுகிறது. ​தேடி​தேடிப்படித்த புத்தகங்கள் இப்படி பழைய டைரி குறிப்புகளாகதான் நினைவிலிருக்கின்றன. நன்றி!

Nathanjagk said...

இணையதள வரலாற்றில் முதல் முறையாக Empty பதில் கமெண்டுகள்....

Nathanjagk said...

பதில் Empty

Nathanjagk said...

//லிஸ்டுல இருந்த புத்தகங்களை முடிச்சிட்டீங்களா?//

ஹாவ்வ்வ்வ், முடிக்கலே சங்கர்! பாதிக்கும் மேல்தான் படிச்சிருக்கேன். அப்புறம் கொஞ்சமா ஓரமா கடிச்சிருக்கேன். இது மாதிரி உங்களுக்கு பிடிச்ச, கடிச்ச, முடிச்ச புக்ஸ் லிஸ்ட் பதிவு போடலாமே?? ஐடியா.. ஒரு ​தொடர் பதிவு கூட ஆரம்பிக்கலாம்..! என்ன சொல்றீய?

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//003-2004 ஆண்டுகளுக்கான இலக்கிய குறிப்புகள் அடங்கிய முக்கிய ஆவணம் //

பல விஷயங்கள் அடங்கியுஇருக்குமே..,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//Plants remains always small under a big tree


Women can smile as they do

But they can weep as the will//

தமிழ் படுத்துங்க தல//,

வால்பையன் said...

//குளத்துள் எறியும்

எல்லாக் கற்களிலும்

விரிஅ​லைகளாய் க​ரை ஒதுங்குகிறது

கல்​லை எறிந்த

கவ​லை!//


சின்ன கல்லு!
பெத்த மேட்டரு!

நந்தாகுமாரன் said...

பழைய டைரி படு ஸ்வாரஸ்யம் ... பிரமாதமான குறிப்புகள் ... உங்கள் ரசனை மிக அருமை ... ஜெகநாதன் கவிதைகள் எனக்கு பிடித்திருக்கின்றன - யார் இவர் ... நான் கேள்விப்படாத கவிஞராக இருக்கிறார் ... இதே மாதிரி அவர் தொடர்ந்த எழுதலாம் ...

சென்ஷி said...

வாவ்.. சூப்பர் கலெக்சன்ஸ்..

//எறியும்எல்லாக் கற்களிலும்விரிஅ​லைகளாய் க​ரை ஒதுங்குகிறதுகல்​லை எறிந்தகவ​லை!//

கல் எறிந்த கவலைன்னு நான் படிச்சுக்கறேன்! :-)

கவிதையும் அருமை.