பறவைக் கூடுகளின் எளிமையாய் நெய்யப்பட்டிக்கிறது இவனது ஆன்மா.
- யூமா. வாசுகி, உயிர்த்திருத்தல் சிறுகதையிலிருந்து..
அடுத்தடுத்துச் சொல்வதைவிட, இடைவெளிக்கு அப்புறம் சொல்லப்படுபவை நன்றாகத்தான் இருக்கின்றன. சொல்லை இடைவெளியும், இடைவெளியை சொல்லும் கூழங்கல்லாய் உருட்டி ஈரமண்ணில் ஒதுக்கும்போது ஆறும் அழகு. கரையும் அழகு.
- வண்ணதாசன், உள்புறம் வழியும் துளிகள் சிறுகதையிலிருந்து..
பாஸ்கர், உன் மனைவியை நீ பார்க்க உனக்குச் சொல்லி கொடுப்பதன் அதிகப்பிரசங்கித்தனம் எனக்குத் தெரியாததல்ல. அதற்குக் கண் வேண்டும். ஆனால் கண்ணுக்கு உனக்குப் பொழுதில்லை.
- லாசரா, எதிர்ப்பு சிறுகதையிலிருந்து..
விரியும் உதடுகள் வழிநடத்திச் செல்லும் முடிவில் - செல்லரித்த இலைகள் உதிர்ந்து புதுக்குருத்தென தேடிவருபவனுக்காகக் காத்திருப்பாள் புவனா.
- யூமா. வாசுகி, வான்நதி சிறுகதையிலிருந்து..
கவிதைகள் (ஜெகநாதன்!)
குளத்துள் எறியும்எல்லாக் கற்களிலும்
விரிஅலைகளாய் கரை ஒதுங்குகிறது
கல்லை எறிந்த
கவலை!
.... தாகங் தீர்த்த
பேராற்றின் செங்கரையை
நாணல் கடக்கிறது
சுவடுகளை மட்டும் விடுத்து
* * *
புத்தகங்கள்...விழி. பா. இதயவேந்தன்
சேஷையா ரவி- அறிவின் கரையை மீறி
சா. கந்தசாமி - 20ம் நூற்றாண்டின் சிறுகதைகள்
யுவான் ருல்போ - எரியும் சமவெளி
(.. கனவு காண்பதை நிறுத்து - அதுதான் என் பெயர்)
ஜே ஜே சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி
நீல பத்மநாபன் - தலைமுறைகள்
கோடாவிற்காக காத்திருத்தல் - சாமுவேல் பெக்கட்
ஹால (XALA) - செம்பான் ஒஸ்மான்
நகரச்சுவர்கள் - எஸ். வைத்தீஸ்வரன்
வழித்துணைகள் - சுப்ரபாரதிமணியன்
ஆயிரங்கால் மண்டபம் - ஜெயமோகன்
கண்மணி குணசேகரன் - அஞ்சலை
ஆந்ரே ழீத், பிரைமோ லெவி, ஜேம்ஸ் ஜாய்ஸ்
பாதசாரி (மீனுக்குள் கடல்)
எஸ். ராமகிருஷ்ணன் - உபபாண்டவம்..............
* * *
மியூஸிக்...
... இன்பம் சிலநாள், துன்பம் சிலநாள் என்றவர் யார் தோழி..
இன்பம் கனவில், துன்பம் எதிரில் காண்பது ஏன் தோழி (பாக்யலட்சுமி)
Michael Bolton - Go the Distance
ABBA - The winter takes its all
LAS KETCHUP
Bombay Vikings
Ellie Cambell - Don't worry you come back
Kylie Minogue........
மடிமீது தலைவைத்து விடியும் வரை தூங்குவோம்..
மறுநாள் எழுந்து பார்ப்போம்....
இரவே இரவே விடியாதே, இன்பத்தின் கதையை முடிக்காதே
சேவல் குரலே கூவாதே, சேர்ந்தவர் உயிரைப் பிரிக்காதே.....
(அன்னை இல்லம் - சிவாஜி, தேவிகா)
* * *
தத்துவம்
Plants remains always small under a big tree
Women can smile as they do
But they can weep as the will
* * *
தாராபுரம் சென்றிருந்தபோது என் பழைய டைரி ஒன்று கிடைத்தது.
2003-2004 ஆண்டுகளுக்கான இலக்கிய குறிப்புகள் அடங்கிய முக்கிய ஆவணம் (அட்ரா சக்கை!) நிறைய கவிதைகள், படித்த புத்தகங்களிலிருந்து excerpts, இசை, படிக்கப் போற புத்தகங்களின் பட்டியல், மனதை கவர்ந்த சம்பவக்குறிப்புகள், கொஞ்சம் ஓவியங்கள் என பழைய கிறுக்கல்களில் தொகுப்பு!
21 comments:
புத்தகங்களும் கவிதைகளும் அருமை தல
ஹலோ, முடிவா என்ன சொல்றீங்க..?
கவிதைகள் நல்லாயிருக்கு ஜெகநாதன்.
கலக்கல் இலக்கிய காக்டெய்ல் :)
//கல்லை எறிந்த
கவலை!//
தம்பீ! நீங்க எங்கேயோ போய்ட்டீங்க! கவிஞரே, அருமை அருமை! தொடருங்கள்.
அப்புறம் வண்ணதாசன் சொல்றதையும் நீங்க சொல்றதையும் சேர்த்துப் பாருங்க! ஒரு அதி அற்புத அனுபவம் கிடைக்குது!
பழைய டைரி படிப்பதில் எத்தனை மகிழ்ச்சி, அதுவும் எழுதியது எலக்கியவாதி என்றால்... வாவ்...
லிஸ்டுல இருந்த புத்தகங்களை முடிச்சிட்டீங்களா?
இணையதள வரலாற்றில் முதல் முறையாக Empty கமெண்டுகள்....
Empty
அன்பு அரவிந்த்.. நன்றிகள்!
டக்ளஸ்... முடிவான்னா ஒரு முக்கியமான ஆயுதம் கையில கிடைச்சிருக்கு..! போட்டு தாக்கிர வேண்டியதுதான். இந்த இடுகை ஒரு தம்மாத்துண்டு சாம்பிளு!
ப்ரியமிகு நான் ஆதவன்..! கவிதைகளை ரசித்ததுக்கு மிக்க நன்றி! இதுக்கு எதுவும் எதிர் கவுஜே போடற ஐடியா இல்லையே????
அன்பு அண்ணன் சங்கா..! ஒரு லிங்க் ஃபார்ம் ஆகுதுதான்! வண்ணதாசனின் இன்னொரு வரி.. அலை ஒதுக்கிக் கரை தள்ளிய நுரை விடவா கடல் அழகு!!! வண்ணதாசன் கதையைகூட கவிதையாதான் எழுதுவாரு போல!! கல்யாண்ஜி எட்டிப்பாக்காம இருக்கமாட்டாரு! நன்றிங்ணா!
அன்பு பீர்.. இப்போது டைரி மாதிரிதான் பிளாக் எழுதுவது என்று தோன்றுகிறது. தேடிதேடிப்படித்த புத்தகங்கள் இப்படி பழைய டைரி குறிப்புகளாகதான் நினைவிலிருக்கின்றன. நன்றி!
இணையதள வரலாற்றில் முதல் முறையாக Empty பதில் கமெண்டுகள்....
பதில் Empty
//லிஸ்டுல இருந்த புத்தகங்களை முடிச்சிட்டீங்களா?//
ஹாவ்வ்வ்வ், முடிக்கலே சங்கர்! பாதிக்கும் மேல்தான் படிச்சிருக்கேன். அப்புறம் கொஞ்சமா ஓரமா கடிச்சிருக்கேன். இது மாதிரி உங்களுக்கு பிடிச்ச, கடிச்ச, முடிச்ச புக்ஸ் லிஸ்ட் பதிவு போடலாமே?? ஐடியா.. ஒரு தொடர் பதிவு கூட ஆரம்பிக்கலாம்..! என்ன சொல்றீய?
//003-2004 ஆண்டுகளுக்கான இலக்கிய குறிப்புகள் அடங்கிய முக்கிய ஆவணம் //
பல விஷயங்கள் அடங்கியுஇருக்குமே..,
//Plants remains always small under a big tree
Women can smile as they do
But they can weep as the will//
தமிழ் படுத்துங்க தல//,
//குளத்துள் எறியும்
எல்லாக் கற்களிலும்
விரிஅலைகளாய் கரை ஒதுங்குகிறது
கல்லை எறிந்த
கவலை!//
சின்ன கல்லு!
பெத்த மேட்டரு!
பழைய டைரி படு ஸ்வாரஸ்யம் ... பிரமாதமான குறிப்புகள் ... உங்கள் ரசனை மிக அருமை ... ஜெகநாதன் கவிதைகள் எனக்கு பிடித்திருக்கின்றன - யார் இவர் ... நான் கேள்விப்படாத கவிஞராக இருக்கிறார் ... இதே மாதிரி அவர் தொடர்ந்த எழுதலாம் ...
வாவ்.. சூப்பர் கலெக்சன்ஸ்..
//எறியும்எல்லாக் கற்களிலும்விரிஅலைகளாய் கரை ஒதுங்குகிறதுகல்லை எறிந்தகவலை!//
கல் எறிந்த கவலைன்னு நான் படிச்சுக்கறேன்! :-)
கவிதையும் அருமை.
Post a Comment