இவரு பேரு அன்பு!
ராசாத்தி மின்னாடி ஹார்ட்வேர்ஸ் ஏஜென்ஸிலே வேல பாத்துக்கிட்டு இருந்தப்ப நம்ம அன்பு, பக்கத்து எலக்ட்ரிகல் கடையில வேலை. ராசாத்தி வேலைக்கு வந்த மக்கா நாளே அன்புத் தலைவர் என்ட்ரி.
"அலோவ் ஈரோ, எப்படியிருக்கீங்க.. வாங்க டீ சாப்பிடலாம்... வேலையெல்லாம் எப்படி போகுது, ஏதும் பிரச்சினைன்னா சொல்லுங்க, வுட்டு லேப்பிரலாம்"
இப்பிடி அன்பு, அன்பு மயமாக மாறுனதுக்கு காரணம் ராசாத்திய டாவு கட்ட வர்றதுக்குதான்னு ஈரோவுக்கு லேட்டாதான் பிக்கப் ஆச்சு. சரி எப்படியோ வேலை ஒழுக்கமா நடந்தா செரி, 1200 ரூபாயிக்கு 8 விரல்லயும் பின்னிப் பெடலெடுக்கிற ஆளு ராசாத்தி.. அப்புறம் என்ன சொல்ல முடியும் ஈரோவால! பாப்பாத்தி இப்பத்தான் கீபோர்டில நெம்பரு அடிக்கிறதுக்கின்னே தனியா ஒரு பகுதி இருக்குன்னு கண்டுபிடிச்சிருக்கு. பரவால்லே பிக்கப் ஆயிக்கும்!
அன்பு அடிக்கடி ஆபிஸுக்கு வர்றதும், ஈரோக்கிட்ட அப்பிடி இப்பிடி தெக்கால வடக்காலன்னு ஞாயம் பேசறதும், போறப்ப ராசாத்திட்ட 'வரட்டா' சொல்லிட்டு போறதுமா ரெண்டு மூணு வாரம் ஓடிருச்சு. ராசாத்திக்காக இவன் அக்கப்போர பொறுத்துக்க வேண்டியதுதான்னு கம்முனு இருந்துட்டாரு ஈரோ. இதில அப்பப்ப ஈரோக்கிட்ட, ராசாத்தி எங்கிட்ட முன்ன மாதிரி பேசறதில்ல.. எனக்கு அவ அப்பன தெரியும் ஆத்தாள தெரியும் வீடு தெரியும் ஊரு தெரியும் - சும்மா விட மாட்டேன்னு புலம்பல் வேற.
மனசுக்குள்ள த்தூமாதரிச்சே.. என்ன கருமாந்திர காதல்டா இவனுதுன்னு ஈரோவுக்கு தோணும்.
ராசாத்தி வெளியூரு, ஈரோவும் வெளியூரு.. அதனால ரெண்டு பேரும் எட்டு எட்டரைக்கெல்லாம் முனிஸிபாலிடிக்கு வந்து, மாடியில இருக்கிற கம்ப்யூட்டர் சென்டரை தொறந்து வேலய ஆரம்பிச்சுடுவாங்க. பாப்பாத்தி நெதானமாத்தான் வரும்.
ஒருநா, ஈரோ வர லேட்டாயிடுச்சு. ஈரோவுக்கு முன்னாடியே ராசாத்தி வந்திருக்கும் போல. மாடியில இருந்து அன்பு வேகமா இறங்கி போயிட்டிருந்தார். இவன் எங்கடா இந்நேரத்துக்குன்னு இங்கன்னு நெனச்சுக்கிட்டே ஈரோ மாடிக்குப் போனாரு. அங்க பியூன் காமடியன் நின்னுக்கிட்டிருந்தார். ஈரோவப் பாத்து கோபமா,
"ஈரோ, என்னப்பா இதெல்லாம்..? யாரவன்..??"
"யாரக் கேக்கறீங்க, அன்பையா?" "அவந்தான். ராசாத்தி தனியா இருக்கும் போது, மேலே வந்திருக்கான். என்னடா இது யாருமில்லாத நேரத்திலன்னு வந்து பாத்தா, அவன் ஏதோ பேசிக்கிட்டிருக்கான், ராசாத்தி அழுதுகிட்டு நிக்குது"
".... இல்லயே, ராசாத்திக்கு தெரிஞ்ச பையந்தானே அன்பு"
"இதெல்லாம் ஒண்ணும் சரியில்ல ஈரோ. நான் அவன புடுச்சி நல்லா சத்தம் போட்டு உட்டுட்டேன். இனிமே மாடிப்பக்கம் வர்ற வேலை வச்சுக்காதே. ஈரோட்ட பேசணும் அவரு இருக்கிறப்ப வான்னு சொல்லி விரட்டி உட்டுட்டேன்"
"அப்படியா??"
எச்சரித்துவிட்டு (முனிஸிபாலிடி பியூன்னா சும்மாவா?) அவர் கீழிறங்கிச் சென்றுவிட்டார். ஈரோவுக்கு குழப்பமாகி விட்டது. என்னடா இது ஏதும் பிரச்சினை ஆயிடுமோன்னு பயந்துக்கிட்டே கம்ப்யூட்டர் சென்டருக்குள்ள போனாரு.
ராசாத்தி அன்னிக்கு தாவணி கட்டியிருந்துச்சு. கருப்புத்தாவணி. செம்பருத்தி செடி கருப்பு இலையா நின்னா மாதிரி! மூணு கம்ப்யூட்டர் அறையில நடு சீட்டுல உக்காந்திக்கும் ராசாத்தி. ஒருக்கா ஈரோ ஒனக்கு முட்ட கண்ணுன சொன்னது ராசாத்தி, 'எங்க என் கண்ண சிமிட்டாம பாருங்க பாப்பம் முதல்ல கண்ண சிமிட்டினவங்க தோத்தாங்கன்னு' சொல்லிச்சு. ஈரோவால ஒரு நிமிசத்துக்கு மேல ராசாத்தி கண்ண சிமிட்டாம பாக்க முடியலே... ராசாத்தி கண்ண சிமிட்டாம பாத்துட்டே இருந்தது..!
ராசாத்தி தாவணி நுனில கண்ணத் தொடச்சுக்கிட்டு இருந்தது. ஈரோ உள்ள போனாரு,
"வாங்க"
"என்னாச்சு, டல்லா இருக்கே?" "இல்லியே"
"அன்பு வந்தாப்டியா?"
தலைய மட்டும் ஆட்டுச்சு ராசாத்தி.
மாடி சன்னல் வழியே பளிச்சென்று காலை வெயிலின் கையொன்றாய் வெளிச்சம் நீண்டது. கீழே மரங்களின் ஒன்றில் அமர்ந்த குருவி சன்னல் வழி பார்த்தது. அட நீங்களா என்று உடல் குலுக்கிவிட்டு பறந்துவிட்டது. வெளியே சாலையின் சப்தங்கள் இந்நாள் எந்நாளும் போல்தான் என்று சொல்லின. விருட்சத்தை விட்டு விடுதலையாகியும் பச்சையத்தை விடமுடியாத ஒரு
இலைச்சிறகு சன்னல் வழி வந்து விழுந்தது - எப்போதுமில்லாதது.
"எதாவது பிரச்சினையா?"
"அதெல்லாம் ஒண்ணிமில்லை"
சிமிட்டாத கண்கள் ஏனோ அப்போது தரை நோக்கியிருந்தன. அடர்த்தியாய் காதுகளை நிரப்பியது நிசப்தம். ஈரோ ராசாத்தி பக்கத்திலே போனாரு. ராசாத்தியின் தலை சாய்ந்த முதுகின் மிகுபரப்பில் வெயில் மஞ்சள் கண்கூசியது.
"எங்கிட்ட சொல்லேன்.."
"..."
"அன்பு கூட எதுவும் பிரச்சினையா"
"..."
"எதாயிருந்தாலும் எங்கிட்ட சொல்லக் கூடாதா?"
தலையை நிமிரவேயில்லை. கீழே அலுவலகம் தொடங்கியிருந்தது. கமிஷனர் கார் வந்த சத்தம் கேட்டது.
"நாங்கேக்கிறது காதுல விழுதா இல்லியா?"
தலை நிமிரவேயில்லை.
"இங்க உனக்கு ஏதாச்சும் பிரச்சினைன்னா நான்தான் பாத்துக்கணும்."
"...."
"............ ஒரு அண்ணன் மாதிரியாவது நெனச்சு எங்கிட்ட சொல்லக்கூடாதா..?"
படக்கென்று தலையை நிமித்தி, சிமிட்டாத கண்களில் சரசரவென கண்ணீர் பொங்க, தாவணியை வாயில் கதக்கித் தேம்ப ஆரம்பித்தாள் ராசாத்தி.
(முற்றும்)
- பச்சப்புள்ள யாருன்னு கேக்க மாட்டீங்கதானே? அதே மாதிரியே ஈரோ யாருன்னு எங்கிட்ட கேக்காதீங்க!
21 comments:
எப்படி எல்லாமோ போகும்னு எதிர்பார்த்தேன்.
கதை நல்லா இருக்கு.
யாரும் நினைக்காத முடிவுண்ணே .. ஆனாலும் இவ்ளோ பச்சப்புள்ளய இருக்க கூடாதுனே நீங்க .
அடடா கடைசி லைன்ல பஞ்ச் வைச்சு நோகடிச்சிட்டாரே! வர்ணனைகள் சூப்பரு! அனேகமா ஈரோவுக்குப் பெரிய பல்லுதான் பிடிச்சுருக்கும்போல!
தமிழ் புரியலை. படிக்கவும் பிடிக்கல.
எல்லாருக்கும் நாந்தான் பெரிய ஈரோன்னு நினைப்பு
//ஈரோ யாருன்னு எங்கிட்ட கேக்காதீங்க!//
இத தனியா வேற சொல்லனுமாக்கும்!
கதை எங்கப் போகுது
நல்லாயிருக்கு
super........
உங்கள் பெயர் இங்கு அடிபடுகிறது நண்பரே
அன்பின் அன்பு அக்பர்... மிகவும் நன்றி!
அன்பு சூரியன் ... இப்படி மிஸ்ஸான மிஸ்ஸுங்க நம்ம லைப்ல நிறைய இருக்குங்க!!!
சங்கா அண்ணே,பெரிய பல்லு அப்பா போலீஸு!!! பாப்பாத்தி கொஞ்ச நாள்லயே நின்னுருச்சு. அப்பவும் ராசாத்தி மட்டும் கன்டினியூவா வந்துட்டு இருந்துச்சு! ப்ராஜெக்ட் முடிஞ்சு(1 year) போற அன்னைக்கு அது ஈரோட்டகேட்டது: "என்னை சினிமாவுக்கு கூட்டிட்டு போங்க". தியேட்டரில் அன்னிக்கு கூட்டம். கழுத்து வலிக்கிற தூரத்தில உக்காந்து படம் பாத்திட்டு வந்தாங்க. (முரளி-சிம்ரன் நடிச்ச படம்) அதுக்கப்புறம் ஈரோ, ராசாத்திய சந்திக்கவேயில்லை!
இனிய pukalini //தமிழ் புரியலை. படிக்கவும் பிடிக்கல// நன்றி புகழ். இதுகொங்கு தமிழ். வட்டார வழக்கு அப்படியே எழுதியிருக்கேன். இனி இந்த மாதிரி எழுதும் போது foot note போட்டு எழுதறதுன்னு முடிவு பண்ணிட்டேன்.
அன்பு கிறுக்கல் கிறுக்கன் //எல்லாருக்கும் நாந்தான் பெரிய ஈரோன்னு நினைப்பு// கிகி... ஹிஹி..!! இங்க ஈரோ கடைசியிலே காமெடி பீஸ் ஆயிட்டாருல்ல!
ரொம்ப நன்றி வால்பையன்!
மாம்ஸு Starjan (ஸ்டார்ஜன்) நன்றி! நன்றி!!
என்னப்பா சண்முகம்... ஒண்ணும் கருத்து சொல்லலியே???
தல SUREஷ்... சிநேகிதன் அவார்டுக்கு நன்றி தல.
அப்புறம் பொதுவா ஒண்ணு சொல்லிக்கிறேன். இந்த இடுகை போடறதுன்னா எனக்கு பெரிய வேலையாயிருக்கு.
1. முதல்ல மேட்டரப் பிடிக்கணும்.
2. அப்புறம் 'அழகி' மென்பொருளைக் கொண்டு notepadல டைப் அடிக்கணும் (வேற ஏதாவது நல்ல சிஸ்டம் இருந்தா சொல்லுங்க பாஸ்)
3.டைப் அடிக்கும் போது நம்ம மேட்டர் நாம நினைச்ச மாதிரி வரணும்
4. சைஸ் மேலயும் கவனம் எடுத்துக்கணும்
5. notepadலயிருந்து காப்பி பண்ணி இடுகை விண்டோல போடணும்
6. போட்ட பின்னாடி, எழுத்துல தேவையில்லாம நிறைய ஸ்பேஸ் வந்திருக்கும். (எப்படின்னா, notepadல ராசாத்தின்னு அடிச்சிருப்போம், ஆனா இங்க அது ரா சாத்தி அப்படின்னு வந்திருக்கும்)
7. ஸ்பேஸ் எடுக்கணும், லைன் ப்ரேக் விடணும், அங்கங்க கலர் தூவணும் (நம்ம இடுகை எல்லாமே ஒரே தரத்தில இருக்கணுங்கிறதுக்காக -நான் இதுவரைக்கும் 2 கலர்தான் யூஸ் பண்றேன் - டார்க் க்ரே அன்ட் ப்ளூ)
8. ஒரே பத்தி மயமா இருந்தா படிக்கிறவங்களுக்கு கண்ணக் கட்டுமேன்னு, அப்பப்ப டயலாக் சேர்க்கணும்
9. அப்புறம் ஒரு படத்தை சேக்கணும்
10. இடுகைக்கு பொருத்தமான படமா கூகிள்ல தேடணும் (காப்பிரைட் பிரச்சினை இல்லாம பாத்துக்கணும் - இதுக்காகவே இப்ப நானே வரைஞ்சுடறேன் - இந்த இடுகையில இருக்கிற 'நிழல்கள்' கூட paintல வரைஞ்சதுதான்)
11. அதுக்கப்புறம் ஒரு 5 தடவையாவது முன்னோட்டம் பாக்கணும்.
12. திருப்தியானதும் இடுகையை வெளியிடறது - பெருசா ஒரு பெருமூச்சும்!
என்னோட அசதியைக் காட்டறதுக்காக இல்லை இந்த பட்டியல். ரொம்ப பிடிச்சு செய்யற வேலை இந்த இடுகை எழுதறது! இந்த work-flowல ஏதாவது குறை இருந்தா தயவு செஞ்சு, காலடியின் தீவிர அதி தீவிர கண்மணிகளா.. சுட்டிக் காட்டுங்க. நன்றி! உங்க கைத்தட்டல்லதான் காலடி முன்னேறுகிறது!
என்ன பொசுக்குன்னு முடிச்சுபிட்டீங்க ஜெகன்.பூமராங் முடிவு!வாழ்த்துக்கள் ஜெகன் நண்பர்கள் தினத்துக்கும் சேர்த்து!
முடிஞ்சா http://www.tamileditor.org/
ல் முயற்சி பண்ணி பாருங்க.
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
உங்கள் தொடர்கள் அருமை நண்பரே... வாழ்த்துக்கள்...
உங்கள் எழுத்துக்களில் ஏதோ பிரட்சனை இருக்கிறது பார்க்கவும்... (உதாரணமாக தியேட்டரில், போது, போடணும்
போட்ட , எழுத்துல போன்றன) எழுத்துக்கு முன்னால் ஓர் பின்னால் பெட்டியாக வருகிறது...
என்ன மாம்ஸூ (ஸ்டார்ஜன்ன மட்டும்தான் கூப்பிடுவீங்களோ)
பிழைக்க தெரியாத ஆளா இருக்கீங்க.(ஹி...ஹி...ஹி)
நீங்க போட்ட பின்னூட்டத்தையே பதிவா போட்டா நாங்களும் வந்து கருத்து சொல்வோம்.
நண்பர்கள் தின வாழ்த்துகள் நண்பரே, அன்பரே!
ராசாத்தி போனா என்ன ஒரு ரோசாப்பூ அப்புறம் வந்திருக்க மாட்டாளா? நீங்க எழுதுங்க, நாங்க படிப்போம்!
வாழ்த்துக்கள் ஜெகன்
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!
மின்திரை வளர்க்கும் தொன்தமிழ்
அளித்த இன்னருந்தோழமையே ....!
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
கதை அதுக்குள்ள முடிஞ்சிருச்சே
அப்பறம் அழகி பயன்படுத்துரீங்கன்ன அதுலேயே யுநிகோட் ன்னு ஒரு வசதி இருக்குமே முயற்சி பண்ணுங்களேன் நண்பரே
அன்பு பா.ராஜாராம், எப்போதும் தலை கோதும் தோழமைக்கரம் உங்களுடையது. அப்பா செய்வதுபோல் மென்மையாக கையெடுத்துக் கும்பிடத் தோன்றுகிறது! மிக்க நன்றி!
அக்பர்.... நன்றி மாப்ளே!
//சந்ரு கூறியது...
உங்கள் தொடர்கள் அருமை நண்பரே... வாழ்த்துக்கள்...
உங்கள் எழுத்துக்களில் ஏதோ பிரட்சனை இருக்கிறது பார்க்கவும்... (உதாரணமாக தியேட்டரில், போது, போடணும்
போட்ட , எழுத்துல போன்றன) எழுத்துக்கு முன்னால் ஓர் பின்னால் பெட்டியாக வருகிறது...//
ஆஹா, அப்படியா? சுட்டிக்காட்டியமைக்கு நன்றிதோழா! தீஅதீ ரசிகக் கண்மணிகளே, உங்களுக்கும்பொட்டிதெரியுதா? தயவுசெய்து சொல்லுங்க சரி செய்துடலாம்.
//அக்பர் கூறியது...
என்ன மாம்ஸூ (ஸ்டார்ஜன்ன மட்டும்தான் கூப்பிடுவீங்களோ)//
ச்சே.. நமக்கு எல்லாரும் சொந்தக்காரங்காதன் அப்பு! அண்ணன், பெரியண்ணன், மாம்ஸு, மாப்ள, சித்தப்பு எல்லாரும் இங்க இருக்காங்க.. பெரிய அத்தை பொண்ணு, சின்ன அத்தை பொண்ணு நடுமாமா பொண்ணு, அக்கா பொண்ணு இந்தமாதிரிதான் கிடைக்க மாட்டேங்கிறாங்க! Sing in the rainnnnnnn......!!!
//
பிழைக்க தெரியாத ஆளா இருக்கீங்க.(ஹி...ஹி...ஹி)
நீங்க போட்ட பின்னூட்டத்தையே பதிவா போட்டா நாங்களும் வந்து கருத்து சொல்வோம்.//
மாப்பு வச்சுட்டான்டா ஆப்பு!!
//சங்கா கூறியது...
நண்பர்கள் தின வாழ்த்துகள் நண்பரே, அன்பரே!
ராசாத்தி போனா என்ன ஒரு ரோசாப்பூ அப்புறம் வந்திருக்க மாட்டாளா? நீங்க எழுதுங்க, நாங்க படிப்போம்!//
காதலிகள் எண்ணிக்கை(!?) மேல் இருக்கிற நம்பிக்கைலதான் காலடியே எடுத்து வைக்க ஆரம்பிச்சோம்! பட்டாசுகெளப்பிராங்ணா!!
//நேசமித்ரன் கூறியது...
...கதை அதுக்குள்ள முடிஞ்சிருச்சே//
நெஜக்கதையே அவ்ளோதான் அன்புக்கவிஞரே!
//அப்பறம் அழகி பயன்படுத்துரீங்கன்ன அதுலேயே யுநிகோட்ன்னு ஒரு வசதி இருக்குமே முயற்சி பண்ணுங்களேன் நண்பரே//
நான் யுனிகோட்தான் பயன்படுத்துறேன். எனக்கு இந்த phonetic எழுதவே பிடிக்காது. ஸ்ரெயிட் typewriting styleதான். அதுல ஒருவேளை ஏதும் கோளாறோ என்னவோ? நன்றி கவிஞரே!
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பா...
கதை சூப்பர் மாம்ஸே!
---
//மாடி சன்னல் வழியே பளிச்சென்று காலை வெயிலின் கையொன்றாய் வெளிச்சம் நீண்டது. கீழே மரங்களின் ஒன்றில் அமர்ந்த குருவி சன்னல் வழி பார்த்தது. அட நீங்களா என்று உடல் குலுக்கிவிட்டு பறந்துவிட்டது. வெளியே சாலையின் சப்தங்கள் இந்நாள் எந்நாளும் போல்தான் என்று சொல்லின. விருட்சத்தை விட்டு விடுதலையாகியும் பச்சையத்தை விடமுடியாத ஒரு
இலைச்சிறகு சன்னல் வழி வந்து விழுந்தது - எப்போதுமில்லாதது//
இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லால்ல...
//எவனோ ஒருவன்.........//
வாடா மாப்பிளை, வாழப்பழத் தோப்பில..... வாங்க சார்..கதைக்கு இந்தமாதிரி க்ரீஸ் தடவுனா கொஞ்சம் ஸ்பீடா போகும்னு சொன்னாங்க.. அதுதான் .. ஹிஹி!
//வாடா மாப்பிளை, வாழப்பழத் தோப்பில..... வாங்க சார்..கதைக்கு இந்தமாதிரி க்ரீஸ் தடவுனா கொஞ்சம் ஸ்பீடா போகும்னு சொன்னாங்க.. அதுதான் .. ஹிஹி!//
மாமா மாமா மா...மா..., சார், அப்படியே அடுத்த தடவ பிரேக்கையும் புடுங்கி விட்டுருங்க, ஸ்பீடா போற கதைய நீங்களே நெனச்சாலும் நிறுத்த முடியாது.
Post a Comment